மொபைலில் ஃபேஸ்புக் பயன்படுத்துவது எபப்டி?

Posted By: Staff
மொபைலில் ஃபேஸ்புக் பயன்படுத்துவது எபப்டி?

இப்போதெல்லாம் மொபைலில் ஃபேஸ்புக் பயன்படுத்துவதற்காகவே இன்டர்நெட் வசதியை விரும்புகின்றனர் மொபைல் வாடிக்கையாளர்கள். தொழில் நுட்பம் சார்ந்த சின்ன சின்ன விஷயங்களை கூட எப்படி செய்வது என்ற விளக்கத்தினை கொடுத்து வரும் தமிழ் கிஸ்பாட் பக்கத்தில், மொபைலில் எப்படி ஃபேஸ்புக்கினை பயன்படுத்துவது என்றும் பார்க்கலாம்.

ஒவ்வொரு மொபைல்களுக்கும் பிரத்தியேக மொபைல் பிரவுசர் இருக்கும். இந்த மொபைல் பிரவுசரை முதலில் திறக்க வேண்டும். இதில் ஃபேஸ்புக் மொபைல் அல்லது ஃபேஸ்புக் டச் என்று யூஆர்எல் டைப் செய்யும் இடத்தில் டைப் செய்து கொள்ள வேண்டும். ஃபேஸ்புக் மொபைல் என்று கொடுப்பதா? அல்லது ஃபேஸ்புக் டச் என்று கொடுப்பதா? என்பது பயன்படுத்தும் மொபைலை பொருத்தது.

தொடுதிரை வசதி கொண்ட மொபைலாக இருந்தால் அதில் ஃபேஸ்புக் டச் என்று கொடு்ப்பது அவசியம். இதன் பிறகு ஃபேஸ்புக் பக்கத்தினை எளிதாக திறந்துவிடலாம். இதில் பெயர் மற்றும் பாஸ்வேர்டு கொடுத்து எளிதாக ஃபேஸ்புக்கில் நுழைந்திவிடலாம். இப்படி மொபைல் பிரவுசரில் எளிதாக ஃபேஸ்புக்கினை பயன்படுத்தலாம்.

நிறைய பேர் சூப்பரான ஸ்மார்ட்போனை வைத்திதருந்தாலும் அதில் ஃபேஸ்புக்கை கூகுள் மூலம் பயன்படுத்தி வருகின்றனர். இதற்காக தான் பிரத்தியேகமாக ஃபேஸ்புக் அப்ளிக்கேஷன் இருக்கிறது. இதை உபயோகப்படுத்தி, ஃபேஸ்புக்கில் என்ன அப்டேஷன் என்பதை உடனுக்குடன் பார்க்கலாம். உதாரணத்திற்கு ஐஓஎஸ் இயங்குதளத்தில் எப்படி ஃபேஸ்புக் பயன்படுத்துவது என்பதையும் பார்க்கலாம்.

ஐஓஎஸ் போன்ற இயங்குதளங்களில் சமூக வலைத்தளமான ஃபேஸ்புக்கை பயன்படுத்த வேண்டும் என்றால் அதற்கு, ஃபேஸ்புக் அப்ளிக்கேஷன் சிறந்த வழி. இந்த அப்ளிக்கேஷன் முதலில் ஐபோனின் டவுன்லோட் செய்து வைத்து கொள்ள வேண்டும்.

இதன் பிறகு இந்த அப்ளிக்கேஷனை க்ளிக் செய்தால் போதும். அப்ளிக்கேஷனை எளிதாக திறந்துவிடலாம். இது போல் அப்ளிக்கேஷன் மூலம் ஃபேஸ்புக் பயன்படுத்தினால், நினைக்கும் போது நண்பர்களுடன் சுலபமாக உறையாட முடியும்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot