கம்ப்ரஸ்டு ஃபோல்டர் உருவாக்க வேண்டுமா?

Posted By: Staff

How to use compressed (zipped) folders

கம்ப்ரஸ்டு ஃபோல்டர் எப்படி உருவாக்குவது என்பது பற்றி பார்க்கலாம். எந்த ஒரு தகவல்களையும், புகைப்படங்களையும் ஃபோல்டரில் போட்டு பாதுகாத்து வைத்து கொள்வது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அப்படி போல்டரில் இருக்கும் தகவல்களை, மெயிலுக்கு அனுப்ப வேண்டும் என்றால் இந்த கம்ப்ரஸ்டு (ஸிப்) ஃபோஸ்டர் தேவைப்படும்.

இது போல் ஃபோல்டரில் உள்ள தகவல்களை முதலில் ஸிப் ஃபோல்டருக்கு மாற்றி, அதன் பிறகு மெயில் மூலம் மற்றவர்களுக்கு அனுப்புவது மிக சிறந்தது. இப்படி கம்ப்ரஸ் ஃபோல்டர் மூலம் அனுப்பவதால், அதற்குள் இருக்கும் தகவல்களையும் மற்றும் புகைப்படங்களையும் சிந்தாமல், சிதறாமல் மற்றவர்களுடன் மெயில் மூலம் பரிமாறி கொள்ள முடியும்.

உதாரணத்திற்கு ஒரு ஃபோல்டரில் பத்து புகைப்படங்கள் இருக்கின்றன. இதை அப்படியே மெயில் மூலம் மற்றவர்களுக்கு அனுப்பினால், அதை டெஸ்க்டாப்பில் சேவ் செய்ய அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். காரணம்

ஒவ்வொரு புகைப்படமாக டவுன்லோட் செய்ய வேண்டும். ஏனெனில் இதில் உள்ள புகைப்படங்கள் தனித்தனியே சிதறியிருக்கும். இதுவே ஃபோல்டரில் உள்ள 10 புகைப்படங்களையும் முதலில் கம்ப்ரஸ் ஃபோல்டருக்கு மாற்றிய பின்பு, மற்றவர்களது மெயிலுக்கு அனுப்பினால், அதை டவுன்லோட் செய்வது எளிது.

காரணம், அந்த கம்ப்ரஸ் ஃபோல்டரை சில மணித் துளிகளில் நமது டெஸ்க்டாப்பில் சேவ் செய்யலாம். இதனால் 10 புகைப்படங்களும் சிந்தாமல், சிதறாமல் அந்த கம்ப்ரஸ்டு ஃபோல்டரின் உள்ளேயே இருக்கும்.

இதை செய்வது மிகவும் எளிது. ஒரு ஃபோல்டரின் மேல் மவுஸ் வைத்து ரைட் க்ளிக் செய்ய வேண்டும். அதன் பின் சென்ட் டூ என்பதை க்ளிக் செய்து, பின்னர் கம்ப்ரஸ்டு (ஸிப்) ஃபோல்டரை உருவாக்க வேண்டும். இப்படி செய்வதனால் ஃபோல்டரில் இருந்த அனைத்து விஷயங்களும், ஸிப் ஃபோல்டரில் மாற்றப்பட்டுவிடும்.

அதன் பிறகு கம்ப்ரஸ்டு ஃபோல்டரில் வைத்து ரைட் க்ளிக் செய்ய வேண்டும். எக்ஸ்ட்ராக்ட் என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, இந்த கம்ப்ரஸ்டு (ஸிப்டு) ஃபோல்டரை எளிதாக திறக்க முடியும். இது தான் கம்ப்ரஸ்டு ஃபோல்டரை உருவாக்கும் முறை.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot