டிக்கெட் இப்போ புக் பண்ணுங்க.. பணம் அப்புறம் கொடுங்க.. இந்திய ரயில்வே கொண்டுவந்த புது வசதி..
இந்திய ரயில்வே (Indian Railways) தொடர்ந்து புதிய வசதிகளை அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக ரயில்வே அமைப்பு கொண்டுவரும் ஒவ்வொரு புதிய வசதிகளும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது. இந்நிலையில் இந்திய ரயில்வே அதன் பயணிகளுக்கு மிகவும் பயனுள்ள ஒரு அம்சத்தை வெளியிட்டுள்ளது. இது குறித்து விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.
அதாவது இந்திய ரயில்வே அமைப்பு தற்போது புக் நவ் பே லெட்டர் (Book Now Pay Later) என்ற ஆப்ஷனை கொண்டுவந்துள்ளது. குறிப்பாக இந்த ஆப்ஷனை பயன்படுத்தி டிக்கெட் முன்பதிவு செய்துவிட்டு பின்னர் பேமண்டை செலுத்தலாம். ஆனாலும் ஆனால் இந்த ஒட்டுமொத்த செயல்முறையையும் ஆன்லைனில் தான் செய்ய முடியும்.

இந்தியாவில் பேருந்து, விமானம், கார் போன்றவற்றில் பயணம் செய்வதை விட ரயிலில் பயணம் செய்ய தான் மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். குறிப்பாக இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் குறைவான டிக்கெட், வசதியான இருக்கைகள் என அனைத்து சிறப்பு அம்சங்களும் உள்ளன. ஆனால் முன்பு வெளியூர் செல்லும் மக்கள் டிக்கெட் முன்பதிவு செய்து உடனடியாக பணம் செலுத்த வேண்டும் என்ற நிலை இருந்தது.
ஆனால் தற்போது முன்பதிவு செய்துவிட்டு பின்னர் பேமண்டை செலுத்தும் ஆப்ஷனை இந்திய ரயில்வே வழங்கி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது தற்போது கொண்டுவரப்பட்ட புக் நவ் பே லெட்டர் என்ற ஆப்ஷனை பயன்படுத்தி டிக்கெட் முன்பதிவு செய்வது எப்படி என்பதை இங்கே பார்க்கலாம்.
வழிமுறை-1: முதலில் இந்திய ரயில்வே துறையில் அதிகாரப்பூர்வ இணையதளத்துக்கு செல்லவும். அடுத்து உங்களது ஐஆர்சிடிசி (IRCTC) கணக்கில் உள்நுழையவும். அதன்பின்பு புக் நவ் என்ற ஆப்ஷன் இருக்கும் அதை தேர்வு செய்யவும்.
வழிமுறை-2: அதன்பின்னர் ஒரு புதிய பக்கம் திறக்கும், அதில் பயணம் செய்பவர்களின் விவரங்கள் மற்றும் தேவையான இதர தகவல்களை கொடுத்து சப்மிட் என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
வழிமுறை-3: அடுத்து நீங்கள் கட்டணம் செலுத்தும் பக்கத்திற்கு செல்ல முடியும். அங்கு உங்களது கிரெடிட் அல்லது டெபிட் கார்டு அல்லது நெட் பேங்கிங் அல்லது பீம் ஆப் போன்றவற்றை பயன்படுத்தி பணம் செலுத்தலாம்.
வழிமுறை-4: ஒருவேளை நீங்கள் டிக்கெட்டை முன்பதிவு செய்துவிட்டு பின்னர் டிக்கெட் கட்டணத்தை செலுத்த விரும்பினால். முதலில் www.epaylater.in என்ற இணையதளத்தில் சென்று பதிவு செய்ய வேண்டும். நீங்கள் பதிவு செய்த பிறகு பே லெட்டர் என்ற ஆப்ஷன் உங்களுக்கு காண்பிக்கப்படும். அதை நீங்கள் தேர்ந்தெடுத்து முன்கூட்டியே பணம் செலுத்தாமல் டிக்கெட்டை உறுதிப்படுத்திக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

வழிமுறை-5: குறிப்பாக இந்த ஆப்ஷனை பயன்படுத்தி உங்கள் டிக்கெட்டை முன்பதிவு செய்த 14 நாட்களுக்குள் கட்டணத்தைச் செலுத்திவிட வேண்டும். ஒருவேளை கட்டணம் செலுத்த தவறினால் 3.5% சேவை கட்டணம் வசூலிக்கப்படும்.அதேசமயம் சரியான நேரத்தில் பணம் செலுத்தி விட்டால் கூடுதல் கட்டணம் எதுவும் செலுத்த வேண்டிய நிலை இருக்காது.
சுருக்கமாக கூறவேண்டும் என்றால் டிக்கெட் புக் நவ் பே லெட்டர் ஆப்ஷன் ஆனது அனைத்து ரயில் பயணிகளுக்கும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும். இதுதவிர இந்திய ரயில்வே அமைப்பு இந்த ஆண்டு பல்வேறு புதிய திட்டங்களை அறிமுகம் செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








