Aadhaar அட்டையில் மொபைல் நம்பரை மாற்றுவது எப்படி? இதோ முழு விவரம்..
இந்தியாவில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் வழங்கும் பல சேவைகளைப் பெறுவதற்கு ஆதார் (Aadhaar) இப்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதேபோல வங்கி கணக்கு துவங்குவது முதல் செல்போன் சிம் வாங்குவது வரை அனைத்திற்கும் ஆதார் அட்டை பயன்படுகிறது. சுருக்கமாகக் கூறவேண்டும் என்றால் ஆதார் கார்டு என்பது இந்தியர்கள் அனைவருக்கும் மிக முக்கியமான ஆவணம் ஆகும்.
குறிப்பாக ஆதார் அட்டையில் தனிநபர்களின் அனைத்து முக்கிய தகவல்களும் இருக்கிறது. மேலும் இதில் உள்ள தகவல்கள் அனைத்தும் சரியாக இருக்க வேண்டும். ஒருவேளை ஆதார் அட்டையில் உள்ள தகவல்கள் சரியாக இல்லையென்றால் ஆதார் கார்டு செல்லாததாக மாறிவிடும் மற்றும் அரசின் உதவிகளைப் பெறுவதிலும் சிக்கல் ஏற்படும் என்பதை நினைவில் கொள்க.

எனவே ஆதார் அட்டையில் உள்ள தகவல்களை அவ்வப்போது அப்டேட் செய்ய வேண்டும். அதேபோல் ஆதார் கார்டில் மிகவும் முக்கியமான விஷயம் என்றால் அது மொபைல் நம்பர் தான். குறிப்பாக மொபைல் நம்பர் இருந்தால் தான் மற்ற விவரங்களையும் அப்டேட் செய்ய முடியும். பின்பு ஆதார் தளத்தில் லாகின் செய்யும்போது மொபைல் நம்பருக்குத்தான் ஓடிபி அனுப்பப்படும். இந்த ஒடிபி-ஐ பதிவிட்டால் மட்டுமே தொடர முடியும்.
அதேபோல் ஆதார் அட்டையை வைத்திருக்கும் அனைவரும் தங்களுடைய தற்போதைய மொபைல் நம்பரை அப்டேட் செய்திருக்க வேண்டும். சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது ஆதார் அட்டையில் மொபைல் நம்பரை மாற்றுவது எப்படி என்று சற்று விரிவாகப் பார்க்கலாம்.
அதாவது இப்போது ஆதார் இணையதளத்தில் (UIDAI) மொபைல் நம்பரை புதுப்பிக்கவோ அல்லது மாற்றவோ முடியாது. எனவே மொபைல் நம்பரை அப்டேட் செய்ய நீங்கள் ஆதார் சேவை மையத்திற்குத் தான் நேரடியாகச் செல்ல வேண்டும். ஆனால் அதற்கு முன்பு https://appointments.uidai.gov.in/easearch.aspx என்ற இந்த இணைய இணைப்பில் உங்களுக்கு அருகில் உள்ள சேவை மையத்தை எளிமையாக கண்டறியலாம்.
குறிப்பாக இந்த இணைய இணைப்பில் மாநிலம், ஆஞ்சல் (PIN) குறியீடு ஆகியவற்றின் அடிப்படையில் பதிவு மையங்களைத் தேடமுடியும். அதன்பின்பு நீங்கள் ஆதார் மையத்திற்குச் சென்று பயோமெட்ரிக் வெரிஃபிகேஷன் முடிந்த பின்பு, ஆதார் திருத்தம் செய்வதற்கான படிவத்தைப் பெற்றுச் சரியான விவரத்துடன் பூர்த்தி செய்ய வேண்டும்.

அதன்பின்பு ரூ. 50 ரூபாய் சேவைக் கட்டணம் செலுத்தி, அந்தப் படிவத்தை நிர்வாகியிடம் சமர்ப்பிக்கவும். மேலும் ஆதார் புதுப்பிப்பது தொடர்பான URN நம்பரைக் கொண்ட ஒப்புகைச் சீட்டை பெறுவீர்கள். அதிலிருந்து சரியாக 90 நாட்களுக்குள், உங்களுடைய ஆதாரில் மொபைல் நம்பர் புதுப்பிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை நீங்கள் UIDAI இணையதளத்திற்குச் சென்று சரி பார்த்துக் கொள்ளலாம்.
அதேபோல் ஆன்லைனில் இலவசமாக பெயர், முகவரி மற்றும் சில தகவல்களை அப்டேட் செய்வதற்கான காலக்கெடு டிசம்பர் 14 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்பு ஆதார் அட்டையை இலவசமாகப் புதுப்பிப்பதற்கான காலக்கெடுவைச் செப்டம்பர் 14 ஆம் தேதி என நிர்ணயித்து இருந்தது ஆதார் ஆணையம். ஆனால் தற்போது ஆதார் ஆணையம் டிசம்பர் 14 ஆம் தேதி வரை காலக்கெடுவை நீட்டித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








