EPFO முக்கிய அறிவிப்பு.. PF கணக்கு இருக்கா? அப்போ உடனே இதை பண்ணனும்.. வந்தது புது அப்டேட் உத்தரவு..
EPFO என்றழைக்கப்படும் பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு, இந்தியாவில் உள்ள பிஃஎப் (PF) கணக்கு பயனர்களுக்கு ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. PF கணக்கு விபரங்களை ஆதார் மற்றும் பான் கார்டு போன்றவற்றோடு இணைக்க வேண்டும் என்பது சட்டப்படி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
ஆதார் அட்டை அப்டேட், பான் கார்டு அப்டேட், கேஸ் சிலிண்டர் அப்டேட் என்று இந்த வருடத்தில் மட்டும் பல முக்கியமான ஆவணங்களின் தகவலை அப்டேட் செய்ய கோரி இந்திய அரசாங்கம் அறிவுறுத்தலை வழங்கி வருகிறது. அந்த வரிசையில் இப்போது உங்கள் PF கணக்கு விபரங்களை அப்டேட் செய்யும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. டிஜிட்டல் சேவைகள் இந்தியாவில் பெருகிவிட்ட காரணத்தினால், பாதுகாப்பை பலப்படுத்த சில முக்கியமான விஷயங்களை அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது.

EPFO கணக்கு விபரங்களுடன் KYC அப்டேட் (EPFO Account KYC Update):
அதில் மிகவும் முக்கியமான விஷயமாக, ஒவ்வொரு பயனரின் அடையாளத்தையும் சரியாக பதிவும் படி அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நோ யுவர் கஸ்டமர் (Know Your Customers) அல்லது சுருக்கமாக கேஒய்சி என்று அழைக்கப்படும் KYC தகவலை அப்டேட் செய்ய கோரி உத்தரவிடப்பட்டுள்ளது. சரியான KYC தகவலை புதுப்பித்த பயனர்களுக்கு எம்பிளாயி பிராவிடண்ட் பண்ட் நிறுவனம் பிரத்தியேகமான நன்மைகளை வழங்குமென்று கூறப்பட்டுள்ளது.
உங்கள் EPFO சேவைக்கான KYC தகவல் அப்டேட்டை இப்போது ஆன்லைன் மூலம் சமர்ப்பிக்க வழிவகுக்கப்பட்டுள்ளது. இதற்கு என்னென்ன ஆவணங்கள் தேவை? மற்றும் இதை எப்படி ஆன்லைன் மூலம் அப்டேட் செய்யலாம் என்பதை இப்போது பார்க்கலாம். முதலில் தேவையான ஆவணங்கள் என்ன என்று தெரிந்துகொள்ளலாம்.
- ஆதார் அட்டை (Aadhaar card)
- பான் அட்டை (PAN card)
- தேர்தல் வாக்காளர் அட்டை (Voter ID)
- ரேஷன் அட்டை (Ration card)
- பாஸ்போர்ட் (Passport)
- ஓட்டுநர் உரிமம் (Driving License)
- தேசிய மக்கள் தொகைப் பதிவேடு அட்டை (NPR card)
- வங்கி கணக்கு விபரங்கள் (Bank account details)

ஆன்லைனில் எப்படி EPFO கணக்கின் KYC தகவலை அப்டேட் செய்வது?
- EPFO இணையதள பக்கமான https://www.epfindia.gov.in என்ற பக்கத்திற்கு செல்லவும்.
- சர்வீஸஸ் (Services) விருப்பத்தை கிளிக் செய்யவும்.
- அடுத்தபடியாக, ஃபார் எம்ப்லாய்ஸ் (For Employess) என்பதை கிளிக் செய்யவும்.
- இப்போது உங்கள் UAN உறுப்பினர் போர்ட்டலில் உள்நுழையவும்.
- Member UAN/Online Service (OCS/OTCP) என்ற விற்பதை தேர்வு செய்யுங்கள்.
- உங்கள் UAN விபரம் மற்றும் பாஸ்வோர்ட் தகவலை உள்ளிட்டு லாகின் (Login) செய்க.
- மேனேஜ் (Manage) விருப்பத்தை கிளிக் செய்து, KYC என்பதை தேர்வு செய்யவும்.
- முக்கிய ஆவணங்களை குறிக்கும் விருப்பங்கள் காண்பிக்கப்படும்.
- உங்களிடம் இருக்கும் ஆவணங்களின் தகவலை சரியாக உள்ளிடவும்.
- இப்போது சேவ் (Save) கிளிக் செய்யுங்கள்.
இந்த முறையை பின்பற்றுவதன் மூலம் உங்கள் EPFO கணக்குடன் உங்கள் KYC தகவல்கள் அப்டேட் செய்ப்படும். காலம் தாமதிக்காமல், உடனே உங்கள் PF கணக்குடன் செயல்படும் கணக்கின் தகவலை அப்டேட் செய்திடுங்கள். இந்த தகவலை மற்றவர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications