Home
News

Aadhaar அட்டையில் பிறந்த தேதி தவறாக இருக்கிறதா? திருத்தம் செய்வது எப்படி? எவ்வளவு செலவாகும்.. இதோ விவரம்..

இந்திய மக்களுக்கு ஆதார் அட்டை(Aadhaar card) மிகவும் முக்கியமான அடையாள ஆவணம் ஆகும். அதாவது அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் வழங்கும் பல சேவைகளைப் பெற இந்த ஆதார் அட்டை தான் தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்தியத் தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) தான் ஆதார் கார்டுகளை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக இந்த ஆதார் அட்டையில் பிறந்த தேதி, முகவரி மற்றும் பயோமெட்ரிக் விவரங்கள் போன்ற பல்வேறு தகவல்கள் இருக்கும். இதில் உள்ள தகவல்கள் தவறாக இருந்தால் அரசு தொடங்கும் முக்கியமான திட்டங்களை மக்கள் பயன்படுத்த முடியாமல் போகிறது. எனவே இவற்றில் ஏதேனும் மாற்றங்கள் இருந்தால் சில நிபந்தனைகளின் பேரில் அதை நீங்கள் செய்யலாம்.

Aadhaar அட்டையில் பிறந்த தேதி தவறாக இருக்கிறதா?

சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது உங்கள் ஆதார் அட்டையில் தவறான பிறந்த தேதி இருந்தால் அதை எவ்வாறு திருத்தம் செய்வது என்பதை இங்கே சற்று விரிவாகப் பார்க்கலாம். அதன்படி ஆதார் கார்டில் பிறந்த தேதியை மாற்ற வேண்டும் என்றால், அதற்கு சில முக்கியமான ஆவணங்கள் தேவைப்படும். அதாவது பிறப்புச் சான்றிதழ், பான் கார்டு, பாஸ்போர்ட், வங்கி பாஸ்புக், பல்கலைக்கழகம் வழங்கும் சான்றிதழ் போன்றவற்றில் ஏதாவது ஒன்றைப் பயன்படுத்தலாம்.

Aadhaar அட்டையில் பிறந்த தேதி தவறாக இருக்கிறதா?

வழிமுறை-1: முதலில் ஆதார் அட்டையில் தவறான பிறந்த தேதியை சரி செய்வதற்கு அருகில் இருக்கும் ஆதார் பதிவு மையத்துக்குச் செல்லவும். அடுத்து உங்கள் பிறந்த தேதி ஆதாரில் தவறாக இருந்தால், அந்த ஆதார் பதிவு மையத்திலிருந்து திருத்தப் படிவத்தைப் பெறவேண்டும்.

வழிமுறை-2: அடுத்து திருத்தப் படிவத்தில் உங்களின் 12 இலக்க ஆதார் எண், பெயர் மற்றும் தேவையான பிற விவரங்களைப் பூர்த்தி செய்யவும் அதன்பின்பு நீங்கள் பிறந்த தேதியை மாற்ற விரும்புகிறீர்கள் என்பதையும் தெளிவாகக் குறிப்பிட வேண்டும். மேலே குறிப்பிட்டபடி, பிறப்பு சான்றிதழ், பான் கார்டு, பாஸ்போர்ட் போன்ற எதாவது ஒரு ஆவணத்தில் ஜெராக்ஸ் காப்பியை இந்த திருத்தப் படிவத்துடன் இணைக்க வேண்டும்.

வழிமுறை-3: அதன்பின்பு நீங்கள் பூர்த்தி செய்த அந்த படிவத்தை ஆதார் பதிவு மையத்தில் உள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கவும். அந்த அதிகாரி உங்களது பயோமெட்ரிக்ஸை சரிபார்ப்பார். அதன்பின்பு படிவம் மற்றும் இணைக்கப்பட்ட ஆவணம் சரியாக உள்ளதா என்று சரிபார்க்கப்படும்.

வழிமுறை-4: அதன்பின்னர் உங்கள் ஆதார் அட்டையில் பிறந்த தேதியைப் புதுப்பிக்க ரூ.50 கட்டணம் வசூலிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்து சில நாட்களுக்குள் உங்கள் திருத்தப்பட்ட பிறந்த தேதி ஆதார் அமைப்பில் புதுப்பிக்கப்படும். அதேபோல் ஆதார் மையத்தில் உங்களுக்கு யுஆர்என் சீட்டு வழங்கப்படும். அதைப் பயன்படுத்தி ஆன்லைனில் ஆதார் புதுப்பிப்பு கோரிக்கையின் நிலையை நீங்கள் எளிமையாக கண்காணிக்கலாம்.

அதேபோல் ஆதார் அட்டையில் புகைப்படத்தை மாற்ற வேண்டும் என்றாலும் ஆதார் மையம் தான் செல்ல வேண்டும். அதாவது யூஐடிஏஐ (UIDAI)அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று ஆதார் என்ரோல்மென்ட் படிவத்தை (Aadhaar Enrolment Form) பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுக்கவும். அடுத்து அந்த படிவத்தைப் பூர்த்தி செய்து கொள்ளவும்.

Aadhaar அட்டையில் பிறந்த தேதி தவறாக இருக்கிறதா?

அதன்பின்பு அந்த படிவத்தை உங்களுக்கு அருகாமையில் இருக்கும் ஆதார் சேவை மையத்தில் சென்று, ஆதார் சேவை மைய அதிகாரியிடம் அளிக்கவும். ஆதார் சேவை மையத்தில் உங்களது பயோமெட்ரிக் விவரங்களை அளிக்க வேண்டும். அனைத்தையும் சரியாக அளித்த பின்பு ஆதார் சேவை மைய அதிகாரி உங்களை அங்கேயே புகைப்படம் எடுத்துக் கொள்வார்.

அவ்வளவுதான் உங்களது ஆதார் அட்டையில் புகைப்படத்தை மாற்றுவதற்கான செயல்முறை முடிந்துவிட்டது. அதேபோல் உங்களுக்கு ஒரு யூஆர்என் (URN) எண் அதற்கான ஒப்புதல் படிவத்துடன் அளிக்கப்படும். இதைக் கொண்டு உங்களுக்குச் சேவையின் நிலையை நீங்கள் அறிந்து கொள்ளலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
How to update date of birth in aadhaar card and how much it will cost: Here's the Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X