அட! ஆன்ட்ராய்டு போனில் அப்ளிக்கேஷனை அற்ற வேண்டுமா?

By Super
|
அட! ஆன்ட்ராய்டு போனில் அப்ளிக்கேஷனை அற்ற வேண்டுமா?

அதிகமான வாடிக்கையாளர்கள் ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை வைத்திருக்கின்றனர். இதனால் நிறைய அப்ளிக்கேஷன்களை டவுன்லோட் செய்து வைத்து கொள்கின்றனர்.

சிறந்த அப்ளிக்கேஷனாக எதை கருதுகிறோமோ, அதை தான் நமது ஸ்மார்ட்போன்களில் வைத்துருப்போம். ஆனால் வேறொரு சிறந்த அப்ளிக்கேஷனை பார்க்கும் போது அதை டவுன்லோட் செய்து வைத்து கொள்ளலாம் என்று தோன்றும்.

அதிகமான அப்ளிக்கேஷன்கள் உங்கள் ஸ்மார்ட்போனில் இருந்தால், புதிய அப்ளிக்கேஷன் டவுன்லோட் செய்ய முடியாது. இதனால் சில அப்ளிக்கேஷன்களை முதலில் உங்கள் ஸ்மார்ட்போனில் இருந்து அகற்ற (டெலீட்) வேண்டும். அதன் வழி முறைகளை இங்கே பார்க்கலாம்.

முதலில் நமது ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் உள்ள மெனு பட்டனை அழுத்த வேண்டும். மெனு பட்டனை அழுத்தினால் செட்டிங்ஸ் என்ற ஆப்ஷன் இருக்கும் அதை அழுத்த வேண்டும். இதில் செட்டிங்ஸ் என்ற ஆப்ஷனில்,

  • வையர்லெஸ் மற்றும் லெட்வொர்க்

  • கால்செட்டிங்ஸ்

  • சவுன்டு மற்றும் டிஸ்ப்ளே

  • லொக்கேஷன் மற்றும் செக்யூரிட்டி

என்று இப்படி சில ஆப்ஷன்கள் கண்ணுக்கு தெரியும். இதில் அப்ளிக்கேஷன் என்ற ஆப்ஷனும் இருக்கும். இந்த

'அப்ளிக்கேஷன்' ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். இதன் பிறகு இன்னொரு விண்டோஸ் திறக்கப்படும். அதில்

  • அன்னோன் சோர்சஸ்

  • மேனேஜ் அப்ளிக்கேஷன்

  • ரன்னிங் சர்வீசஸ்

  • டெவலப்மென்ட்

என்று சில வசதிகள் வரிசையாக கொடுக்கப்பட்டிருக்கம். இதில் நாம் பட்டியலில் கூறிய 'மேனேஜ் அப்ளிக்கேஷன்' ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். இந்த ஆப்ஷனை அழுத்தினால் 'அன்இன்ஸ்டால்' என்று இருப்பது தெரியும். இந்த ஆப்ஷனை க்ளிக் செய்து அப்ளிக்கேஷனை அழகாக டெலீட் செய்யலாம். இப்படி டெலீட் செய்வது ஒரு வழி.

அப்ளிக்கேஷன்களை டெலீட் செய்ய இன்னொரு வழியும் உள்ளது. அதையும் பார்ப்போம். முதலில் நாம் பார்த்தது மெனு மற்றும் செட்டிங்ஸ் மூலமாக செல்வது. இன்னொரு வழி நேரடியாக ஹோம் பக்கத்தில் இருக்கும் அப்ளிக்கேஷனையே க்ளிக் செய்து, டெலீட் செய்யும் வழி.

'ஹோம்' பக்கத்தில் உள்ள எந்த அப்ளிக்கேஷனை அகற்ற வேண்டுமோ, அந்த அப்ளிக்கேஷனின் மேல் வைத்து முதலில் க்ளிக் செய்வதன் மூலம் செலக்ட் செய்து கொள்ள வேண்டும். இப்படி க்ளிக் செய்தவுடன் எடிட் மற்றும் யூஸ் வியூஸ் என்று இரண்டு ஆப்ஷன்கள் தெரியும்.

இதில் எடிட் என்ற ஆப்ஷனை க்ளிக் செய்தவுடன், எல்லா அப்ளிக்கேஷன் மேலும் ஒரு சிவப்பு நிற குறியீடு தென்படும். அதன் பிறகு எந்த அப்ளிக்கேஷனை அகற்றி வேண்டும் என்று நினைக்கிறோமோ, அந்த அப்ளிக்கேஷனை க்ளிக் செய்து எளிதாக டெலீட் செய்துவிடலாம்.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X