Home
News

குட்டி 16 அடி பாயுதே.. ரூ.599 க்கு உங்க வீட்டு டிவியை கம்பியூட்டர் ஆக மாற்றலாம்.. JioPC சேவை வழியாக.. எப்படி?

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமானது கிளவுட் அடிப்படையிலான ஏஐ பெர்சனல் கம்பியூட்டரை அறிமுகப்படுத்துவதாக வாக்குறுதி அளித்திருந்தது. அதற்கு இணங்க, ஜியோ நிறுவனத்தின் கிளவுட் பிசி சேவை சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதுதான் ஜியோபிசி (JioPC) !

ஜியோபிசி என்றால் என்ன? ஜியோபிசி எப்படி வேலை செய்யும்? ரூ.599 செலவில் உங்கள் டிவியை ஏஐ-ரெடி கம்பியூட்டராக (AI-Ready Computer) மாற்றுவது எப்படி? யாருக்கெல்லாம் இந்த ஜியோபிசி மிகவும் பயனுள்ளதாக இருக்கும்? ஜியோபிசி பயன்படுத்துவது எப்படி? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்.

JioPC: ரூ.599 க்கு உங்க வீட்டு டிவியை கம்பியூட்டர் ஆக மாற்றலாம்!

ஜியோபிசி என்றால் என்ன? ஜியோபிசி என்பது ஒரு கிளவுட் அடிப்படையிலான விர்ச்சுவல் டெஸ்க்டாப் சேவை ஆகும். இது ஜியோ செட்-டாப் பாக்ஸை (Jio STB ) பயன்படுத்தி உங்கள் வீட்டில் உள்ள டிவியை ஒரு பெர்சனல் கம்பியூர்ட்டர் ஆக மாற்ற அனுமதிக்கிறது. இது மாணவர்கள் மற்றும் மலிவு விலையில் பெர்சனல் கம்பியூட்டர் இல்லாத மற்றும் எசன்ஷியல் கம்பியூட்டிங்கை தேடுபவர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஜியோபிசி சேவையை டிவி உடன் கனெக்ட் செய்வது எப்படி? ஜியோபிசி சேவையை பயன்படுத்த ஒரு வாடிக்கையாளருக்கு ஜியோ பைபர் (Jio Fiber) அல்லது ஜியோ ஏர்பைபர் (Jio Air Fiber) இணைப்பு மற்றும் ஜியோ செட்-டாப் பாக்ஸ் (Jio Set Top Box) தேவை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

உங்கள் டிவியில் உள்ள எஸ்டிபி ஆப்ஸ் மெனுவிலிருந்து (STB Apps Menu) ஜியோபிசி ஆப்பிற்கு சென்று. யூஎஸ்பி (USB) அல்லது ப்ளூடூத் (Bluetooth) வழியாக கீபோர்ட் (Keyboard) மற்றும் மவுஸை (Mouse) கனெக்ட் செய்து எஸ்டிபி உடன் இணைப்பதன் மூலம் ஜியோபிசி வழியாக உங்கள் டிவியை பெர்சனல் கம்பியூட்டர் ஆக மாற்ற முடியும்.

அறிமுக சலுகையாக, ஜியோபிசி சேவைக்காக ஜியோ நிறுவனமானது எந்த ஆக்டிவேஷன் கட்டணத்தையும் வசூலிக்கவில்லை மற்றும் வரம்பற்ற பயன்பாட்டையும் வழங்குகிறது. ஆக இதற்காக நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் ஒரு ஜியோபிசி விர்ச்சுவல் டெஸ்க்டாப்பை தொடங்குவதற்கு முன், ஒரு ஜியோபிசி அக்கவுண்ட்டை (JioPC Account) பதிவு செய்ய வேண்டும்.

ஜியோபிசி கான்பிகரேஷன் (JioPC Configuration) விவரங்கள்: ஜியோ விர்ச்சுவல் கம்பியூட்டரில் 2.45 GHz வேகத்தில் இயங்கும் 4 விசிபியு-க்கள், 8ஜிபி ரேம் மற்றும் 100 ஜிபி கிளவுட் ஸ்டோரேஜ் உள்ளது. இது உபுண்டு (லினக்ஸ்) ஆப்ரேட்டிங் சிஸ்டமின் (Ubuntu operating system) கீழ் இயங்குகிறது.

ஜியோவின் கூற்றுப்படி இது ஒரு ஏஐ-ரெடி பிசி (AI-Ready PC) ஆகவும், ஆல்வேஸ் அப்-டூ-டேட் (Always Up-to-date) ஆகவும், மாதாந்திர சந்தாவின் கீழும் பழுது மற்றும் பராமரிப்பு செலவு இல்லாமலும், எப்போதும் பாதுகாப்பானதாகவும் மற்றும் வேகமான ப்ரவுஸிங் அனுபவத்தையும் (BrowsingExperience) வழங்கும்.

ஜியோபிசி சந்தா திட்டங்களின் விலை விவரங்கள்: ஜியோபிசி சேவையானது பல்வேறு திறன்கள் மற்றும் திட்டங்களின் கீழ் வெவ்வேறு விலையிலான சந்தாக்களின் கீழ் கிடைக்கிறது. முன்னரே குறிப்பிட்டபடி இந்த கட்டுரையை எழுதும் வரை, ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அதன் ஜியோபிசிசேவையின் இலவச சோதனையை வழங்குகிறது.

பயனர்கள் (மேற்கண்ட தகுதிகளின் கீழ்) எந்த வயர்லெஸ் கீபோர்ட் மற்றும் மவுஸையும் இணைப்பதன் மூலம் ரூ.599 மதிப்புள்ள 1 மாத ஜியோபிசி சந்தாவை இலவசமாக அனுபவிக்க முடியும். இந்த இலவச சோதனை முடிந்ததும், சந்தாதாரர்கள் விலை கொடுத்து வாங்கக்கூடிய பல ஜியோபிசி திட்டங்கள் உள்ளன:

- ரூ.599 க்கு செலுத்துவதன் மூலம் 1 மாத வேலிடிட்டியின் கீழ் வரம்பற்ற பயன்பாட்டை பெறலாம்.
- ரூ.999 க்கு செலுத்துவதன் மூலம் 2 மாத வேலிடிட்டியின் கீழ் வரம்பற்ற பயன்பாட்டை பெறலாம்.
- வரையறுக்கப்பட்ட கால சலுகையின் கீழ் ரூ.1,499 க்கு வரம்பற்ற பயன்பாட்டுடன் 3 மாதங்கள் + 1 மாத வேலிடிட்டியும் கிடைக்கிறது

- இன்னொரு வரையறுக்கப்பட்ட கால சலுகையின் கீழ் ரூ.2,499 க்கு வரம்பற்ற பயன்பாட்டுடன் 6 மாதங்கள் + 2 மாத வேலிடிட்டியும் கிடைக்கிறது
- கடைசியாக உள்ள வரையறுக்கப்பட்ட கால சலுகையின் கீழ் ரூ.4,599 க்கு வரம்பற்ற பயன்பாட்டுடன் 12 மாதங்கள் + 4 மாத வேலிடிட்டியும் கிடைக்கிறது

மேற்கூறிய அனைத்து திட்டங்களும் 8 ஜிபி ரேம் மற்றும் 100 ஜிபி ஸ்டோரேஜ் ஆகிய அம்சங்களுடன் வருகின்றன. கூடுதலாக, இந்த ஜியோ நிறுவனமானது அதன் அனைத்து ஜியோபிசி திட்டங்கள் உடனும் அடோப் எக்ஸ்பிரஸ் பிரீமியத்தை (Adobe Express Premium) இலவசமாக வழங்குகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
How to Turn Your TV Into an AI Ready Computer Using JioPC Service For Free Now Later Rs 599
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X