Home
News

உங்களிடம் பழைய போன் இருக்கிறதா? தூசித் தட்டி எடுக்க நேரம் வந்துருச்சு! விஷயம் தெரியுமா?

ஸ்மார்ட்போனின் வடிவமைப்பும் அம்சங்களும் நாளுக்கு நாள் மேம்பட்டு வருகிறது. புதிய ஸ்மார்ட்போன் வாங்கி 6 மாதம் ஆவதற்குள் அது பழைய அம்சங்கள் கொண்ட போனாக மாறிவிடுகிறது. காரணம், ஸ்மார்ட்போன் நிறுவனங்களுக்குள் இருக்கும் போட்டி தான்.

புதிய ஸ்மார்ட்போன் வாங்க காரணம் என்ன?

ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் போட்டிப் போட்டுக் கொண்டு புதுப்புது அம்சங்கள் உடன் வெவ்வேறு விலைப் பிரிவில் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. இதெல்லாம் ஒரு புறம் இருக்க, தற்போது ஸ்மார்ட்போனை மாற்றியே ஆக வேண்டும் என்ற கட்டாய நிலையும் ஏறத்தாழ இருக்கிறது. காரணம் இந்தியாவில் 5ஜி சேவை அறிமுகமாகி இருக்கிறது. எனவே 5ஜி அம்சங்கள் உடன் கூடிய ஸ்மார்ட்போனை வாங்குவதில் பலர் ஆர்வம் காட்டுகிறார்கள்.

உங்களிடம் பழைய போன் இருக்கிறதா? தூசித் தட்டி எடுக்க நேரம் வந்துருச்சு!

பழைய போனை பயனுள்ள ஒன்றாக மாற்றுவது எப்படி?

ஒவ்வொருவரும் பல்வேறு காரணங்களுக்காக புதிய ஸ்மார்ட்போனை வாங்குகிறார்கள். இதில் ஏணையோர் அவ்வளவு தான் இந்த ஸ்மார்ட்போன் லைஃப் முடிந்துவிட்டது, ஒன்றுக்கும் ஆகாது என எண்ணித் தூக்கிப் போடுகிறார்கள். சிலர் நேரம் கிடைக்கும் போது பழைய போனை பழுது பார்த்துக் கொள்ளலாம் என ஓரங்கட்டுகிறார்கள். இந்த அனைத்து போன்களையும் தூசித் தட்டி எடுக்க வேண்டிய நேரம் வந்து விட்டது.

துருப் பிடித்த மின் கழிவுகளாக மாறும் போன்கள்

அதுபாட்டுக்கு உள்ள எங்கயோ இருக்கு, அதை ஏன்ப்பா இப்போ எடுக்க சொல்ற என தோன்றலாம். நீங்கள் அப்படி தூக்கிப்போடும் போன் காலப்போக்கில் பழைய துருப் பிடித்த மின் கழிவுகளாக மாறிவிடும். பிற்காலத்தில் பழைய இரும்பு கடைக்கு கழிவுப் பொருட்களுடன் குப்பைகளாக செல்லும். உங்கள் பழைய போனை அந்த நிலைக்கு உள்ளாக்க வேண்டாம்.

பழைய ஸ்மார்ட்போனை என்ன செய்வது?

உங்கள் பழைய போனில் பேட்டரி மட்டும் பழுதாகி இருக்கலாம் அல்லது டிஸ்ப்ளே, மைக், ஸ்பீக்கர் என ஏதாவது ஒருசில பாகங்கள் மட்டும் பழுதாகி இருக்கலாம். இதை பழுது பார்த்தாலும் அடுத்தடுத்து வேலை ஆகும் என நினைத்து நீங்கள் அதை ஓரங்கட்டி இருந்தால் அந்த போன்கள் அனைத்தையும் கீழே வழங்கப்பட்டுள்ள ஏதேனும் ஒரு வழிமுறையை பயன்படுத்தி பயன் அடையலாம். எந்தவித பலனும் அந்த போன் மூலம் இல்லை என்று நினைத்தாலும் பரவாயில்லை அதை சரியான முறையில் அப்புறப்படுத்தும் வழிமுறைகள் குறித்து அறிந்துக் கொள்ளுங்கள்.

உங்களிடம் பழைய போன் இருக்கிறதா? தூசித் தட்டி எடுக்க நேரம் வந்துருச்சு!

பழைய போனில் இருக்கும் பலன்கள் என்ன?

உங்கள் பழைய ஸ்மார்ட்போனில் பேட்டரி, மைக், ஸ்பீக்கர் அல்லது ஹேங் ஆகிறது போன்ற ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால். அதை உங்கள் சேமிப்பு டிவைஸ் ஆக மாற்றிக் கொள்ளலாம். நீங்கள் தற்போது பயன்படுத்தும் போனில் உள்ள முக்கிய தரவுகள், போட்டோஸ், வீடியோஸ் உள்ளிட்டவைகளை பழைய போனில் சேமித்து வைத்துக் கொள்ளலாம். இது மிகவும் பயனுள்ளதாகவும் பாதுகாப்பாகவும் இருக்கும். அதேநேரத்தில் உங்கள் புதிய போனில் உள்ள ஸ்டோரேஜை இது மிச்சப்படுத்தும்.

போனை ரீ-சைக்கிள் செய்வது எப்படி?

உங்கள் பழைய போன் வேலை செய்யும் நிலையில் இல்லை, அதை எந்த வகையிலும் பயன்படுத்த முடியாது என்றால் அதை குப்பையில் வீசுவதற்கு பதிலாக, Cashify.in, Recycledevice.com அல்லது Namoewaste.com தளங்களை தொடர்பு கொண்டு ரீசைக்கிள் செய்ய அனுப்பலாம். இந்த இணையதளங்கள் இந்தியா முழுவதும் வீடு வீடாகச் சென்று மின் கழிவுகளை வாங்கும் சேவைகளை வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்களிடம் பழைய போன் இருக்கிறதா? தூசித் தட்டி எடுக்க நேரம் வந்துருச்சு!

பழைய போனை பணமாக மாற்றுவது எப்படி?

மேலே குறிப்பிட்டுள்ள இணையதளங்களில் கொடுக்கப்படும் பழைய கேட்ஜெட்கள் மறுசுழற்சி ஆலைகளுக்கு அனுப்பப்படுகிறது. அங்கு உங்கள் கேட்ஜெட் இல் பயனுள்ள பொருட்களை மட்டும் பிரித்து எடுத்துக் கொள்கின்றனர். பிற பாகங்களை சுற்றுச்சூழலுக்கு உகந்த வழியில் அகற்றி விடுகின்றனர். இதில் கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால் உங்கள் ஸ்மார்ட்போனை மறு சுழற்சி செய்ய வழங்கும் போது அதன் தன்மைக்கு ஏற்ப பணம் அல்லது வெகுமதிகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

எக்ஸ்சேஞ்ச் செய்து புது போன் வாங்கலாம்

Amazon, Flipkart போன்ற பிரபல இ-காமர்ஸ் தளங்களில் உங்கள் பழைய போனை எக்ஸ்சேஞ்ச் செய்து புது போன் வாங்கிக் கொள்ளலாம். பண்டிகை கால தள்ளுபடியின் போது எக்ஸ்சேஞ்ச் செய்தால் கூடுதல் சலுகைகளும் உங்களுக்கு வழங்கப்படும்.

பழைய போனை விற்கலாம் அல்லது நன்கொடையாக கொடுக்கலாம்

மொபைல் போன் தேவை எங்கு இருக்கிறது என்பதை அறிந்து, உங்கள் பழைய போனை அலமாறியில் வைத்திருப்பதற்கு பதில் பிறருக்கு நன்கொடையாக வழங்கலாம். உங்கள் பழைய மொபைலை ஆன்லைன் இணையதளங்கள் அல்லது ஆஃப்லைன் கடைகளில் விற்று பணமாக மாற்றிக் கொள்ளலாம். அந்த போனில் நன்றாக இருக்கும் பிற பாகங்கள் வேறு ஏதேனும் ஒரு போனை வாழ வைக்கும். தூசிப் பிடித்து பழைய பொருட்களாக மாறுவதற்கு முன்னாள் இதை செய்வது நல்லது.

More from GizBot

Best Mobiles in India

English summary
How to turn your Old Phone into Something Useful? Make Money from Home with Your Used Phone.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X