அட இது தெரியாம போச்சே.. WhatsApp வீடியோ காலில் தெரியும் Bulb Logo.. கிளிக் பண்ணா என்ன ஆகும்?
வாட்ஸ்அப் (WhatsApp) ஆனது "பேக் டூ பேக்" புதிய அம்சங்களை பெற்று வருகிறது. ஸ்டேட்டஸ் அப்டேட்டில் லைக், மென்ஷன்டு மற்றும் ரீஷேர் ஆகிய பெற்ற வேகத்தில், வீடியோ காலிங்கில் புதிய ஃபில்டர்கள் மற்றும் வீடியோ கால்களுக்கான புதிய பேக்கிரவுண்ட்கள் அறிமுகமானது. பின்னர் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கான புதிய சாட் தீம்ஸ் மற்றும் சாட் கலர் ஆப்ஷன்கள் வெளியானது. இதன்கீழ் 22-க்கும் மேற்பட்ட வெவ்வேறு வாட்ஸ்அப் சாட் தீம்கள் மற்றும் 20 கலர் ஆப்ஷன்கள் அணுக கிடைக்கிறது.
இதற்கிடையில் லோ லைட் மோட் (Low Light Mode) என்கிற புதிய அம்சம் வாட்ஸ்அப்பில் சேர்க்கப்பட்டுள்ளது. பெயர் குறிப்பிடுவது போலவே இது வீடியோ காலிங்கிற்கான ஒரு அம்சமாகும்.இது குறைந்த ஒளி நிலையிலும் கூட ஒருவர் வீடியோ காலில் கலந்துகொள்ள உதவும் ஒரு பயனுள்ள அம்சமாகும். இந்த அம்சம் குறைந்த வெளிச்சத்தில் சிறந்த வீடியோ தரத்தை பெற அனுமதிக்கும் அதே வேளையில் இமேஜில் ஏற்படும் கிரிய்னினஸையும் (Reducing graininess) குறைக்கும்.

வாட்ஸ்அப்பில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள லோ லைட் மோட்-ஐ எவ்வாறு பயன்படுத்துவது? இந்த புதிய அம்சம் வாட்ஸ்அப்பின் ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு ஆகிய இரண்டு பதிப்புகளிலும் அணுக கிடைக்கிறது, ஆனால் இன்னும் வெப் வெர்ஷனுக்கு வரவில்லை; ஆகையால் லோ லைட் மோட்-ஐ பயன்படுத்த விரும்புவார்கள், அதை ஐபோன் அல்லது ஸ்மார்ட்போனில் முயற்சி செய்யவும்.
1. முதலில் உங்களில் போனில் உள்ள வாட்ஸ்அப்பிற்கு செல்லவும்.
2. இப்போது, உங்கள் காண்டாக்ட் லிஸ்ட்டில் உள்ள யாருக்கேனும் வீடியோ கால் செய்யுவும்
3. வீடியோ காலிங்கின் போது மேல் வலது மூலையில் ஒரு பல்ப் லோகோ தோன்றும்; அதை கிளிக் செய்யவும்.
அவ்வளவு தான். இப்போது உங்கள் வீடியோ காலில் லோ லைட் மோட் ஆனது 'ஆன்' ஆகி இருக்கும். ஒருவேளை இந்த மோட்-ஐ நீங்கள் பொருத்தமற்றதாக கருதினால் அதை 'ஆப்' செய்து விடவும். இரவு நேரங்களில், மின்விளக்குகளை எரியவிட்டு மற்றவர்களை தொந்தரவு செய்ய விரும்பாத பயனர்களுக்கும் அல்லது இருட்டான இடங்களில் இருந்தபடி அவசர சூழ்நிலைகளில் வாட்ஸ்அப் வீடியோ கால் செய்ய வேண்டிய போதும் - இந்த அம்சம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்!
புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள சாட் தீம்ஸ் மற்றும் சாட் கலர் ஆப்ஷன்களை பொறுத்தவரை, இதன்கீழ் நீங்கள் ஒரு புதிய தீம்-ஐ தேர்வு செய்தவுடன், சாட் கலர்களும் அதனுடன் பொருந்துமாறு மாறும். இருப்பினும், நீங்கள் சாட்-க்கென வேறு நிறத்தையும் தேர்வு செய்யலாம். பெர்சனல் சாட்கள் மட்டுமின்றி க்ரூப்களுக்கும் கூட வெவ்வேறு தீம்களை செட் செய்யலாம். புதிய அம்சம் செட்டிங்ஸ் > சாட்ஸ் > தீம்ஸ் என்பதன் வழியாக அணுக கிடைக்கும்.
இருப்பினும் தற்போது வரையிலாக இவைகள் வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா வெர்ஷனில் மட்டுமே அணுக கிடைக்கிறது. டபுள்யூஏஇன்ஃபோ-வின் (WABetaInfo) சமீபத்திய அறிக்கையின்படி, இந்த புதிய தீம்கள் மற்றும் கலர்கள் ஆண்ட்ராய்டு 2.24.21.34 பீட்டா அப்டேட்டின் (Android 2.24.21.34 Beta update) கீழ் அணுக கிடைக்கிறது இந்த பீட்டா அப்டேட் ஏற்கனவே கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store) வழியாக இன்ஸ்டால் செய்யவும் கிடைக்கிறது என்பதும் இங்கே குறிப்பிடததக்கது.
ஸ்டேட்டஸ் அப்டேட்டிற்கான லைக், மென்ஷன்டு மற்றும் ரீஷேர் ஆப்ஷன்களை பொறுத்தவரை, ஒரே ஒரு பட்டனை கிளிக் செய்வதன் மூலம் பயனர்கள் மற்ற பயனர்களின் ஸ்டேட்டஸ்-ஐ லைக் செய்யலாம். இப்படி செய்யும் லைக்குகள் தனிப்பட்டவைகளாக இருக்கும், அதாவது நீங்கள் யாருடைய ஸ்டேட்டஸை லைக் செய்கிறீர்களோ அவரால் மட்டும் அதை பார்க்க முடியும். மென்ஷன்டு என்பது ஒருவரை வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்-ல் டேக் செய்ய உதவும். ரீஷேர் என்பது ஒருவருடைய ஸ்டேட்டஸை ஷேர் செய்ய அனுமதிக்கும்.


Click it and Unblock the Notifications








