ஆண்ட்ராய்டு இயங்குதளத்தம் கொண்ட சாதனத்தில் வீடியோக்களை எடிட் செய்வது எப்படி?

|

ஸ்மார்ட்போன் துறையில் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தின் வளர்ச்சி இன்றியமையாதது. முன்பொரு காலத்தில் மொபைல் போன்கள் தகவல் பரிமாற்றத்திற்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டன.

ஆண்ட்ராய்டில் வீடியோ எடிட் செய்வது எப்படி?

ஆனால் இன்று இவை எல்லாவற்றுக்கும் பயன்படும் மிகமுக்கிய சாதனமாக உருவெடுத்திருக்கிறது. புகைப்படம் மற்றும் வீடியோக்களை எடுப்பதில், இன்றைய சாதனங்கள் மொபைல் போன் மற்றும் டி.எஸ்.எல்.ஆர். கேமராக்களுக்கு பாலமாக அமைந்துள்ளது.

எடிட் செய்வதற்கான செயலி

எடிட் செய்வதற்கான செயலி

எல்லா நேரமும் கையில் டி.எஸ்.எல்.ஆர். கொண்டு செல்ல முடியாது என்பதால், சில சமயங்களில் வீடியோக்களும் மொபைல் போனிலேயே எடுக்கப்படுகின்றன. இதற்கு மொபைலில் வீடியோ எடிட் செய்வதற்கான செயலி இருந்தால் மட்டுமே போதுமானது. இதை கொண்டு வீடியோக்களை மிக நேர்த்தியாக எடுக்க முடியும். சில செயலிகளில் வீடியோக்களை ட்ரிம் செய்யும் பணியை மிகவும் இலகுவாக்குகின்றன.

இதுபோன்ற செயலிகள் நாளுக்கு நாள் பிரபலமாகி வருகின்றன. அவற்றில் சிறப்பானவற்றை தொடர்ந்து பார்ப்போம்.

ஆண்ட்ராய்டு தளத்தில் வீடியோக்களை ட்ரிம் செய்வது எப்படி?

ஆண்ட்ராய்டு தளத்தில் வீடியோக்களை ட்ரிம் செய்வது எப்படி?

கூகுள் போட்டோஸ் ஆப்:

வழிமுறை 1: ஸ்மார்ட்போனில் கூகுள் போட்டோஸ் செயலியை இன்ஸ்டால் செய்து, ஆல்பம்ஸ் ஆப்ஷனில் வீடியோ டேபை க்ளிக் செய்ய வேண்டும்.


வழிமுறை 2: வீடியோவை திறந்து எடிட்ஸ் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.


வழிமுறை 3: வீடியோவை எங்கிருந்து எடிட் செய்ய வேண்டும் என்பதை செயலியில் உள்ள ஸ்லைடர்களை கொண்டு தேர்வு செய்து கொள்ள வேண்டும்.


வழிமுறை 4: இனி சேவ் ஆப்ஷனை க்ளிக் செய்தால் வீடியோ உங்களது ஆண்ட்ரயா்டு சாதனத்தில் சேமிக்கப்பட்டு விடும்.

செவ்வாயில் சுனாமி! 75 மைல் நீளமுள்ள பள்ளத்தாக்கை உருவாக்கியது...செவ்வாயில் சுனாமி! 75 மைல் நீளமுள்ள பள்ளத்தாக்கை உருவாக்கியது...

விவா வீடியோ செயலி:

விவா வீடியோ செயலி:

வழிமுறை 1: ஸ்மார்ட்போனில் விவா வீடியோ செயலியை டவுன்லோடு மற்றும் இன்ஸ்டால் செய்ய வேண்டும்.


வழிமுறை 2: செயலியை திறந்து எடிட் வீடியோ ஆப்ஷனில் நீங்கள் எடிட் செய்ய வேண்டிய வீடியோவை தேர்வு செய்து கொள்ளவும்.


வழிமுறை 3: இனி நெக்ஸ்ட் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.


வழிமுறை 4: ட்ரிம் வீடியோ திரைக்கு சென்று ஸ்லைடர் மூலம் தேவையான பகுதிகளை தேர்வு செய்ய வேண்டும்.


வழிமுறை 5: இவ்வாறு நீங்கள் விரும்பும் பகுதிகளை தேர்வு செய்து கூடுதலாக சேர்த்துக் கொள்ள ஆட் ஆப்ஷனை பயன்படுத்தலாம். பல்வேறு க்ளிப்களை பயன்படுத்த நினைக்கும் போது நீங்கள் தேர்வு செய்த பகுதிகளில் சிசர் ஐகானை பயன்படுத்தலாம்.


வழிமுறை 6: போதுமான அளவு சேர்ந்ததும் வீடியோ எடிட் செய்ய தொடரலாம், மேலும் சிள க்ளிப்களை சேர்க்கலாம்.


வழிமுறை 7: இனி நெக்ஸ்ட் பட்டனை க்ளிக் செய்ததும் எடிட்டிங் ஸ்கிரீன் திறக்கும்.


வழிமுறை 8: இங்கு வீடியோவில் பின்னணி இசை, ஃபில்ட்டர்கள் போன்றவற்றை சேர்க்க முடியும்.


வழிமுறை 9: இறுதியில் சேவ் அல்லது அப்லோடு ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.


வழிமுறை 10: வீடியோவை எக்ஸ்போர்ட் செய்ய விரும்பினால், எக்ஸ்போர்ட் ஆப்ஷனை க்ளிக் செய்யலாம்.

வழிமுறை 11: இனி Normal 480P ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.

பார்ப்பவர்களை கண்கலங்க வைக்கும் பெண்ணின் வைரல் வீடியோ.!பார்ப்பவர்களை கண்கலங்க வைக்கும் பெண்ணின் வைரல் வீடியோ.!

இன்ஷாட் செயலி: இதுவும் பிரபல வீடியோ எடிட்டிங் செயலி ஆகும்:

இன்ஷாட் செயலி: இதுவும் பிரபல வீடியோ எடிட்டிங் செயலி ஆகும்:

வழிமுறை 1: முதலில் இன்ஷாட் வீடியோ எடிட்டிங் செயலியை டவுன்லோடு செய்ய வேண்டும்.

வழிமுறை 2: செயலியை திறந்து. வீடியோ ஐகானை க்ளிக் செய்ய வேண்டும்.

வழிமுறை 3: நீங்கள் ட்ரிம் செய்ய வேண்டிய வீடியோவை தேர்வு செய்ய வேண்டும். நேர்தை மிச்சப்படுத்த சிசர் ஐகானையும் க்ளிக் செய்யலாம். இது செயலியின் வலதுபுறத்தில் மேல்பக்கமாக இருக்கும்.

வழிமுறை 4: எடிட்டிங் திரை திறக்கும். இங்கு ட்ரிப் அல்லது சிசர் ஐகானை க்ளிக் செய்ய வேண்டும்.

வழிமுறை 5: ஸ்லைடர்களை அட்ஜ்ஸ்ட் செய்து தேவையான பகுதிகளை தேர்வு செய்து கொள்ளலாம்.

வழிமுறை 6: நீங்கள் மேற்கொண்ட மாற்றங்களை பதிவு செய்ய டிக் ஐகானை க்ளிக் செய்யவும்.

வழிமுறை 7: எடிட்டிங் விண்டோ திறந்ததும், சேவ் ஆப்ஷனை க்ளிக் செய்து எக்ஸ்போர்ட் ரெசல்யூஷனை தேர்வு செய்ய வேண்டும்.

வழிமுறை 8: இவ்வாறு செய்யும் போது வீடியோவை ட்ரிம் செய்து அவற்றை ஆண்ட்ராய்டு சாதனத்தில் சேவ் செய்து கொள்ள முடியும்.

Best Mobiles in India

English summary
How To Trim Videos On Android : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X