Home
News

SIM கார்டு உங்க பெயரில் இல்லையா? உடனே இதை பண்ணிடுங்க.. மொபைல் நம்பர் ஓனர்ஷிப் டிரான்ஸ்பர்.. இல்லைனா என்ன?

நீங்கள் வைத்திருக்கும் சிம் கார்டு உங்களது பெயரில் இல்லாமல், தந்தை, தாய் அல்லது வேறு யாராவது ஒருவரின் பெயரில் இருந்தால், அதை உடனடியாக உங்களது பெயரில் மாற்றி கொள்ள வேண்டும். இல்லையென்றால், பிற்காலத்தில் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கின்றன. ஏர்டெல் (Airtel) நிறுவனத்தில் இதை எளிதாக செய்து முடிக்கலாம். ஆகவே, ஏர்டெல் மொபைல் நம்பரில் எப்படி ஓனர்ஷிப் டிரான்ஸ்பர் (Airtel Mobile Number Ownership Transfer) செய்வது என்பதை இப்போது தெரிந்து கொள்ளுங்கள்.

ஏர்டெல் நிறுவனமானது, சில கம்பெனிகளுடன் ஒப்பந்தம் செய்து, அவற்றின் பணியாளர்களுக்கு சிம் கார்டுகளை (SIM Cards) கொடுக்கிறது. ஆனால், அதுபோன்ற சிம் கார்டுகள் அந்த பணியாளர்களின் பெயரில் இருக்காது, கம்பெனியின் பெயரில் இருக்கும். ஆனால், இந்த சிம் கார்டை பல வருடங்களாக அந்த பணியாளர்கள் பயன்படுத்தி வருவார்கள். இதனால், அந்த நம்பர் முக்கியமாக மாறுகிறது.

SIM கார்டு உங்க பெயரில் இல்லையா? உடனே இத பண்ணிடுங்க.. ஓனர்ஷிப் சேஞ்ச்!

அதேபோல தந்தை பெயரிலோ, தாய் பெயரிலோ அல்லது வேறு ஏதாவது ஒரு உறவினர் பெயரிலோ சிம் கார்டுகள் வாங்கி அதை பல வருடங்களாக நம்மில் பலர் பயன்படுத்தி வருகிறார்கள். இவர்களுக்கு தேவைப்படும்பட்சத்தில் அந்த சிம் கார்டின் ஓனர்ஷிப்பை அவர்களுக்கு பெயருக்கு டிரான்ஸ்பர் செய்து கொள்ள வேண்டும். இதற்கான சேவையை ஏர்டெல் நிறுவனம் கொடுக்கிறது.

இப்படி ஓனர்ஷிப்பை மாற்றாமல் இருந்தால், பிற்காலத்தில் அதுதொடர்பான சேவைகளை பெறும்போது சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது. ஏனென்றால், மொபைல் நம்பருடன் ஆதார், பேங்க் அக்கவுண்ட் மற்றும் யுபிஐ ஆப்கள் போன்ற பல்வேறு முக்கியமான சேவைகள் கிடைக்கின்றன. வரும் நாட்களில் இதற்கு வெரிபிகேஷன் கடுமையாகவும் இருக்க வாய்ப்புள்ளது.

அப்போது, உங்களது பெயரில் சிம் கார்டு இல்லையென்றால், சேவைகளை பெற முடியாமல் போக வாய்ப்புள்ளது. ஆகவே, அதை உடனடியாக செய்து முடித்து கொள்ளுங்கள். இப்போதைக்கு ஏர்டெல் நிறுவனத்தின் சிம் கார்டுகளில் எப்படி ஓனர்ஷிப் டிரான்ஸ்பர் செய்வது என்பதை தெரிந்து கொள்ளலாம். இது ஆப்லைனில் மட்டுமே கொடுக்கப்படும் சேவையாக இருக்கிறது.

ஏர்டெல் ஓனர்ஷிப் டிரான்ஸ்பர்: இதற்கு முதலில் உங்களது முகவரிக்கு அருகில் இருக்கும் ஏர்டெல் ஸ்டோருக்கு (Airtel Store) செல்லுங்கள். அங்கு உங்களது அடையாள சான்று மற்றும் முகவரி சான்று கொடுக்கப்பட வேண்டும். அதேபோல 1 பாஸ்போர்ட் சைஸ் போட்டோவும் கொடுக்கப்பட வேண்டும். அடையாள சான்று மற்றும் முகவரி சான்றுக்கு ஆதார் கார்டு பயன்படுத்தலாம்.

அதேபோல பேங்க் பாஸ்புக், பாஸ்போர்ட் அல்லது டிரைவிங் லைலென்ஸ் போன்ற ஆவணங்களையும் கொடுக்கலாம். இந்த ஆவணங்கள் மட்டுமல்லாமல், முக்கியமாக ஒன்று இருக்கிறது. அதாவது, ஆட்சேபனையின்மை சான்றிதழ் (No-objection Certificate) கொடுக்க வேண்டும். இதில் உங்களது கம்பெனியின் விவரங்கள் மற்றும் கையொப்பம் இருக்க வேண்டும்.

இந்த சான்றிதழை ஏர்டெல் வெப்சைட்டில் டவுன்லோட் செய்து கொள்ளலாம். இந்த ஆவணங்கள் எல்லாம் கொடுக்கப்பட்ட பிறகு உங்களது பெயரில் சிம் கார்டு விவரங்கள் மாற்றப்படும். இந்த ஆட்சேபனையின்மை சான்றிதழ், பணியாளர்களுக்கு மட்டுமே பொருந்தும். உறவினரங்களின் பெயரில் சிம் கார்டு இருந்தால், அதற்கான சான்றிதழ் இருந்தால் போதுமானதாகும்.

இதற்கு, உங்களது தந்தை பெயரும் உங்களது பெயரும் அடங்கிய ஆவணங்களை பயன்படுத்தலாம். இந்த வெரிபிகேஷன் முடிய 48 மணி நேரங்கள் தேவைப்படும். அதன்பிறகே உங்களது பெயரில் சிம் கார்டு மாற்றப்படும். இப்படி மற்ற நிறுவனங்களிலும் மொபைல் நம்பர் ஓனர்ஷிப் டிரான்ஸ்பர் இருக்கும். இதுபோன்ற டிரான்ஸ்பரை உடனடியாக செய்து முடிப்பது நல்லதாகும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
How To Transfer Airtel Mobile Number Ownership What is the Process All You Need To Know
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X