Home
News

நீருக்கடியில் போட்டோ எடுப்பது எப்படி? வாட்டர் ப்ரூப் Mobile போன் இல்லாட்டியும் எடுக்கலாம்.. அது எப்படி?

நீருக்கடியில் படம் (underwater photos) எடுப்பது, போட்டோ பிடிப்பது போன்ற செயல்கள் இப்போது மிகவும் சர்வசாதாரணமான ஒன்றாக மாறிவிட்டது. இன்றைய காலகட்டத்தில் உங்களிடம் வாட்டர் ப்ரூப் அம்சம் அடங்கிய ஸ்மார்ட்போன் (waterproof smartphones) சாதனம் இல்லை என்றாலும் கூட, சில எளிய வழிமுறைகளை பின்பற்றி இப்போது உங்களால் நீருக்கடியில் கூட படம் எடுக்க முடியும். வாட்டர் ப்ரூப் போன் இல்லாதவர்கள் எப்படி சாமர்த்தியமாக அண்டர் வாட்டர் போட்டோஸ் மற்றும் வீடியோஸ் எடுக்கலாம் என்பதை (how to take underwater photo without waterproof phones) பற்றி தான் இந்த பதிவில் உங்களுக்கு கற்றுத் தரப் போகிறோம்.

ஐபோன் (iPhone) மற்றும் விலை உயர்ந்த பிரீமியம் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களை (premium android smartphone) பயன்படுத்தி பல ஸ்மார்ட்போன் பயனர்கள் அண்டர் வாட்டர் புகைப்படங்களை (mobile underwater photos) படம்பிடிக்கிறார்கள். இப்போது, நீருக்கடியில் புகைப்படம் எடுக்க உங்களிடம் கட்டாயம் விலை உயர்ந்த ஒரு ஸ்மார்ட்போன் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. அதேபோல், உங்களிடம் இருக்கும் ஸ்மார்ட்போனில் கட்டாயம் வாட்டர் ப்ரூப் அம்சம் (waterproof feature) இருக்க வேண்டும் என்ற கட்டாயமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நீருக்கடியில் போட்டோ எடுப்பது எப்படி? வாட்டர் ப்ரூப் போன் தேவையில்லை..

நீருக்கடியில் போட்டோ எடுப்பது எப்படி? வாட்டர் ப்ரூப் Mobile போன் இல்லாட்டியும் எடுக்கலாமா? எப்படி?

உங்களிடம் எந்த பிரண்டட் ஸ்மார்ட்போன் சாதனம் இருந்தாலும் சரி, அல்லது உங்களிடம் வாட்டர் ப்ரூப் அம்சம் இல்லாத ஒரு சாதாரணமான ஸ்மார்ட்போன் சாதனம் (how to use smartphone without waterproof for taking underwater photos and videos) இருந்தாலும் சரி, கீழே குறிப்பிடப்பட்டுள்ள சில சாமர்த்தியமான டிப்ஸ்களை நீங்கள் பின்பற்றினால், மிக எளிமையாக அண்டர் வாட்டர் புகைப்படங்களை நீங்கள் படம்பிடிக்கலாம். சரி, இப்போது எப்படி நீருக்கடியில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்கலாம் என்பதை பற்றி பார்க்கலாம்.

நீருக்கடியில் புகைப்படம் எடுக்கும் பொது நீங்கள் கவனிக்க வேண்டிய மூன்று முக்கியமான விஷயங்கள் உள்ளது. முதல் விஷயம் உங்கள் ஸ்மார்ட்போன் சாதனம் நீருக்கடியில் பாதுகாப்பாக (protection under underwater) இருப்பதை உறுதி செய்வது. இரண்டு, இயற்கையாக கிடைக்கும் வெளிச்சத்தை (natural light) நீருக்கடியில் பயன்படுத்தி புகைப்படம் எடுப்பது. மூன்றாவது, நீருக்கடியில் சரியான கோணங்களை (angles) பயன்படுத்தி அட்டகாசமான புகைப்படங்களை எடுப்பது.

இது தவிர நீங்கள் செய்ய வேண்டிய மற்ற முக்கியமான விஷயங்கள் என்ன என்பதை இப்போது பார்க்கலாம்.

1. வாட்டர் ப்ரூப் கேஸ் அல்லது வாட்டர் ப்ரூப் கவர்களை பயன்படுத்துங்கள்:
இவை நீருக்கடியில் உங்கள் ஸ்மார்ட்போனை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள அனுமதிப்பதோடு, நீருக்கடியில் புகைப்படம் மற்றும் வீடியோக்களை எடுக்க அனுமதிக்கிறது. அமேசான் (Amazon), பிளிப்கார்ட் (Flipkart) போன்ற ஆன்லைன் தளங்களில் இப்போது வாட்டர் ப்ரூப் கவர்கள் (water proof mobile cover) மற்றும் கேஸ்கள் (water proof mobile case) விற்பனை செய்யப்படுகின்றன. அவற்றில் நல்ல தரம் வாய்ந்த வாட்டர் ப்ரூப் கேஸ் மற்றும் கவர்களை வாங்கி நீங்கள் பயன்படுத்தலாம்.

2. கேமரா செட்டிங்கை மாற்றிக்கொள்ளுங்கள்:
நீருக்கடியில் புகைப்படம் எடுக்க ஏற்ற கேமரா செட்டிங்கை (camera settings) முன்கூட்டியே செட் செய்துகொள்ளுங்கள். சில ஸ்மார்ட்போன்களில் இப்போது அண்டர் வாட்டர் போட்டோ மோட் (underwater photo mode) அம்சம் பயன்படுத்த கிடைக்கிறது. அதை ஆக்டிவேட் (activate) செய்துகொள்ளுங்கள். அதேபோல், போனின் கேமரா செட்டிங்கில் வைட் பேலன்ஸ் (white balance) நிறத்தை ப்ளூ அல்லது கிரீன் நிறத்திற்கு நெருக்கமாக செட் செய்துகொள்ளுங்கள். இது உங்கள் போட்டோவை கலர்புல்லாக (colourful) மாற்ற உதவும்.

3. இயற்கை வெளிச்சத்தை பயன்படுத்த தவறாதீர்கள்:
நீருக்கடியில் படம் எடுக்க வெளிச்சம் (lighting) மிகவும் முக்கியமான ஒன்றாகும். நீங்கள் எடுக்கும் புகைப்படம் தெளிவாக இருக்க வேண்டும் என்றால், நீருக்கடியில் இயற்கையாக கிடைக்கும் வெளிச்சத்தை (natural lighting) நீங்கள் சரியாக பயன்படுத்த வேண்டும். அப்படி பயன்படுத்தினால் தான் உங்கள் புகைப்படத்தின் விபரங்கள் (underwater photo details) தெளிவாக பதிவு செய்யப்படும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் மக்களே.

4. பர்ஸ்ட் ஷாட் மோட் ஆன் செய்ய மறக்காதீர்கள்:
நீருக்கடியில் புகைப்படம் எடுப்பதற்கு உங்கள் கேமராவில் Burst Mode ஆன் செய்ய மறக்காதீர்கள். இது உங்களுக்கு தொடர்ச்சியான புகைப்படங்களை எடுக்க அனுமதிக்கிறது. இதனால், முக்கியமான பிரேமை (frame) நீங்கள் படம்பிடிப்பதை தவறவிடாமல் பார்த்துக்கொள்கிறது. பர்ஸ்ட் மோட் (camera burst mode) இல்லாவிட்டால் நீருக்கடியில், நீங்கள் படம்பிடிக்க முயலும் சரியான தருணத்தை மிஸ் செய்ய அதிக வாய்ப்பிருக்கிறது.

5. நீருக்கடியில் நீங்கள் அதிகமாக அசைவதை தவிர்க்க வேண்டும்:
நீருக்கடியில் புகைப்படம் மற்றும் வீடியோ (underwater photos and videos) எடுக்கும் பொழுது, உங்கள் கேமரா ஷேக் (shake) ஆகாமல் இருப்பது மிக முக்கியமானது. நீருக்கடியில் உங்கள் உடல் அசைவது இயல்பானது. இதை கட்டுப்படுத்த, உங்கள் கைகளை உங்கள் உடலுடன் ஒட்டி வைத்துக்கொள்ளுங்கள். இதனால் நீருக்கடியில் நீங்கள் அசைவதும் (helps reducing body movements while taking underwater photo), உங்கள் கையில் இருக்கும் கேமரா அசைவதும் குறைக்கப்படும். இல்லையென்றால், நிச்சயமாக நீங்கள் எடுக்கும் புகைப்படங்களில் ப்ளர் லுக் (blur look) அல்லது தெளிவின்மை சிக்கல்களை நீங்கள் சந்திக்க நேரிடலாம்.

6. போட்டோகிராபிக் கோணங்கள் மற்றும் ரிப்லெக்ஷன்களில் கவனம் செலுத்துங்கள்:
நீருக்கடியில் நீங்கள் எடுக்கும் புகைப்படம் அருமையாக அமைய வேண்டுமா? அப்படியானால், போட்டோகிராபின் ஆங்கில்ஸ் (underwater photography angles) மற்றும் நீரில் தெரியும் ரிப்லெக்ஷன்களில் (reflections) கவனம் செலுத்தி புகைப்படங்களை எடுக்க முயற்சி செய்யுங்கள். இது உங்கள் போட்டோவை இன்னும் அழகாக்கும். நீருக்கடியில் பல விதமான கோணங்களில் படம்பிடிப்பது உங்கள் படைப்பு திறனுக்கு தீனி போடும் என்பதை மறக்காதீர்கள்.

7. ஈரப்பதத்தை கவனிக்க வேண்டும்:
வாட்டர் ப்ரூப் கவர் (waterproof cover for mobile and smartphone) அல்லது நீருக்கடியில் புகைப்படம் எடுத்த பிறகு, போனின் ஈரப்பதத்தை சோதிக்க மறக்காதீர்கள். சார்ஜிங் போர்ட் (charging port) மற்றும் போனின் துளைகளில் (holes in smartphones) ஈரப்பதம் இருக்க அதிக வாய்ப்புள்ளது. ஆகையால், அவற்றை சரியாக செக் செய்து உறுதிப்படுத்திய பிறகு, சார்ஜ்ரை பயன்படுத்துவது பாதுகாப்பானது.

இந்த முக்கியமான விஷயங்களை எல்லாம் சரியாக பின்பற்றினால், உங்களால் அட்டகாசமான அண்டர் வாட்டர் புகைப்படங்களை படம்பிடிக்க முடியும். அதிலும் முக்கியமாக உங்களிடம் வாட்டர் ப்ரூப் அம்சம் பொருந்திய ஸ்மார்ட்போன் இல்லாவிட்டாலும், உங்களால் அண்டர் வாட்டர் புகைப்படம் மற்றும் வீடியோவை பதிவு செய்வ முடியும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
How to take underwater photo and video with using smartphone and mobile without waterproof feature
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X