Home
News

போன் அடிக்ஷன் இருக்கிறதா? அதிகமாக போன் பயன்படுத்தினால் என்னவாகும்?

ஸ்மார்ட்போன் அதிகம் பயன்படுத்துவது, வழக்கத்திற்கு மாறாக எந்நேரமும் மொபைல் போனுடன் இருப்பது போன்ற செயல்களால் அதற்கு அடிமையாகிவிடுகிறார்கள். மொபைல் சாதனங்களை அதிகமாகப் பயன்படுத்கள் சாதனங்களை அணுகும் முறை மற்றும் அல்லது ஒரு குறிப்பிட்து ஒரு ஆபத்தான கோளாறு ஆகும். இந்த பழக்கத்தை எப்படி சரி செய்வது?

பொதுவாக இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஸ்மார்ட்போன் பயன்படுத்த துவங்கிவிட்டனர். இதில் பலர் ஸ்மார்ட்போன்களுக்கு அடிமையாகிவிட்டார்கள். இந்த பழக்கத்தை மாற்றம் செய்ய பயனர்கள் சில மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும். மொபைல் அடிக்ஷன் இல் இருந்து வெளிபட இந்த 6 விதிகளை பின்பற்றுங்கள்.

போன் அடிக்ஷன் இருக்கிறதா? அதிகமாக போன் பயன்படுத்தினால் என்னவாகும்?

முதல் விஷயம் உங்கள் வீட்டின் படுக்கையறையில், உங்கள் ஸ்மார்ட்போனை சார்ஜ் செய்யும் பழக்கத்தை உடனே நிறுத்த வேண்டும். உறங்கும் போதும், இரவு நேரத்திலும் படுக்கைக்கு அருகில் ஸ்மார்ட்போன் வைக்கும் பழக்கத்தை மாற்ற வேண்டும். அதேபோல் போனில் அலாரம் வைப்பதை தவிர்த்துவிடுங்கள். போனில் அலாரம் வைப்பதற்கு பதிலாக கடிகாரத்தில் அலாரம் வைப்பது சிறப்பானது.

உங்கள் போனின் நோட்டிபிகேஷன் அம்சத்தை ஆப் செய்து வைப்பது நல்லது. உறங்கும் நேரம் மற்றும் தேவையில்லாத நேரத்தில் நோட்டிபிகேஷன் வருவது உங்கள் உறக்கத்தை கெடுக்கும். நீங்கள் அதிகம் பயன்படுத்தும் பயன்பாட்டை ஆப் செய்து வைப்பது அருமையானது. நோட்டிபிகேஷன் ஆப் செய்வது போல், நீங்கள் அதிகம் பயன்படுத்தும் ஆப்ஸ்களில் இருந்து விலகி இருப்பது அடிக்ஷன் பழக்கத்தை குறைக்க உதவும்.

உங்கள் போனை எந்த நேரத்தில் பயன்படுத்த வேண்டும் மற்றும் எந்த நேரத்தில் பயன்படுத்த வேண்டாம் என்பதை நீங்கள் தீர்மானம் செய்துகொள்ளுங்கள். உங்களுக்கு நீங்களே ஒரு சிறிய கட்டுப்பாட்டை விதித்துக்கொள்ளுங்கள். வாரத்திற்கு ஒரு முறை உங்கள் போன் இல்லாமல் இருக்க பழகிக்கொள்ளுங்கள். விடுமுறை நாட்களில் போனை பயன்படுத்தாமல், குடும்பத்துடன் தனிமையான நேரத்தை செலவிட உங்களை பழக்கப்படுத்திக்கொள்ளுங்கள்.

உங்கள் போன் இல்லாமல் அருகில் இருக்கும் இடங்களுக்கு சென்று வர பழகிக்கொள்ளுங்கள். இப்படி கொஞ்சம் கொஞ்சமாக உங்கள் ஸ்மார்ட்போன் அடிமைத்தன பழக்கத்தை மாற்றிக்கொள்ளுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
How to stop mobile addiction and prolonged using smartphone habit easily
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X