Home
News

Google நீங்கள் பேசுவதை ஒட்டுக்கேட்கிறதா? இதை எப்படி நிறுத்துவது? உடனே போனை எடுங்க இந்த Setting-கை மாற்றுங்க..

ஸ்மார்ட்போன் வைத்துள்ள அனைவரும் கவனியுங்க, கூகுள் நிறுவனம் நீங்கள் பேசும் ஒட்டுமொத்த பேச்சையும் ஒட்டுகேட்டுக் கொண்டிருக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா? ஒரு தயாரிப்பு பொருள் அல்லது தலைப்பை சாதாரணமாக நீங்கள் விவாதித்த பிறகு, உங்கள் ஸ்மார்ட்போனில் அது தொடர்பான விளம்பரங்களை திடீரென்று பார்க்கத் தொடங்குவீர்கள். இதை நீங்கள் எப்போதாவது கவனித்திருக்கிறீர்களா? இது உங்களுக்கு நடந்திருந்தால், அது தற்செயல் நிகழ்வு அல்ல என்பதை புரிந்துகொள்ளுங்கள்.

உங்கள் ஸ்மார்ட்போன் வழியாக நீங்கள் பேசும் தகவலில் இருக்கும் முக்கியமான வார்த்தைகளை வைத்து தான் அந்த விளம்பரங்கள் உங்களுக்கு காண்பிக்கப்படுகின்றன. இதற்கு முக்கியமான காரணம் உங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனின் பின்னணியில் உங்களுக்கே தெரியாமல் இயங்கிக்கொண்டிருக்கும் மைக்ரோஃபோன்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது. உங்கள் லொக்கேஷன் மற்றும் பிற தனிப்பட்ட தரவை Google அணுக உங்கள் ஸ்மார்ட்போனின் சில அனுமதிகளை நீங்கள் கவனிக்க தவறிவிட்டிர்கள் என்பதே உண்மையாகும்.

Google நீங்கள் பேசுவதை ஒட்டுக்கேட்கிறதா? இதை எப்படி நிறுத்துவது?

Google நீங்கள் பேசுவதை ஒட்டுக்கேட்கிறதா? இதை எப்படி நிறுத்துவது?

இதன் விளைவாகவே, நீங்கள் பேசிய பொருள் அல்லது தலைப்பு தொடர்பான விளம்பரங்கள் உங்கள் ஸ்மார்ட்போனில் அடிக்கடி காண்பிக்கப்படுகின்றன. இவை விளம்பரத்திற்காகப் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றால், உங்கள் தனிப்பட்ட உரையாடல்கள் உங்களுக்குத் தெரியாமல் Google ஐ அடையக்கூடும் என்பதை தெரியப்படுத்திக்கொள்கிறோம். நீங்கள் பேசும் தகவலை கூகுள் ஒட்டுகேட்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம்.

முதலில் யார் கூகுள் நிறுவனத்திற்கு இந்த அனுமதியை வழங்கியது என்பதை தெரிந்துகொள்ளலாம். இந்த அனுமதியை வழங்கியது வேறு யாரும் இல்லை நீங்களே தான். உங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் கூகுள் கணக்கை நீங்கள் சைன் இன் செய்யும் நேரத்தில் கேமரா, காண்டாக்ட், லொகேஷன் மற்றும் மைக்ரோபோன் போன்ற அம்சத்தை அணுக நீங்கள் யோசிக்காமல் கொடுத்த அனுமதியை தான் கூகுள் இப்போது வரை பயன்படுத்துகிறது.

உடனே போனை எடுங்க இந்த Setting-கை மாற்றுங்க.. இல்லாட்டி சிக்கல்:

இந்த அடிப்படை செட்டிங்கை கவனிக்காமல், லாகின் செய்துவிட்டு, நாம் ஸ்மார்ட்போனில் மற்ற வேலைகளை செய்ய துவங்கிவிடுகிறறோம். கூகுள் நிறுவனம் இயல்பாகவே உங்கள் தரவுகளை சேகரிக்கிறது. இதில் உங்கள் மைக்ரோபோனும் அடங்கும். மைக் மூலம் கேட்கப்படும் தகவலை வைத்து, கூகுள் உங்களுக்கான தனிப்பட்ட விளம்பரங்களை காண்பிக்க துவங்கும். இத்தகைய செயல்களில் இருந்து தப்பிக்க உங்கள் போனின் செட்டிங்கில் சில மாற்றங்களை நீங்கள் செய்ய வேண்டும். அதை எப்படி செய்வதென்று பார்க்கலாம்.

- உங்கள் ஆண்ட்ராய்டு போனில் செட்டிங்ஸ் (Settings) திறக்கவும்.
- கீழே ஸ்க்ரோல் செய்து கூகுள் செட்டிங்ஸ் (Google settings) கிளிக் செய்யவும்.
- Manage Your Google Account என்பதை கிளிக் செய்க.
- Data & Privacy விருப்பம் போக்கி செல்லவும்.
- Web & App Activity விற்பதை தேடி கிளிக் செய்யவும்.
- அதன் கீழ் காண்பிக்கப்படும் Audio and Video Activity விற்பதை கிளிக் செய்யுங்கள்.
- Google's Terms of Service விற்பதை கிளிக் செய்து, டிக் மார்க்கை நீக்கிவிடுங்கள்.

அவ்வளவு தான் வேலை முடிந்தது. இதற்கு பிறகு, கூகுள் நிறுவனம் உங்கள் ஸ்மார்ட்போனின் மைக்ரோபோன் வழியாக எந்த தகவலையும் ஒட்டுக்கேட்க முடியாது. உங்கள் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் நீங்கள் பேசும் தகவல்கள் இனி கூகுள் தரவிற்கு செல்லாது என்பது குறிப்பிடத்தக்கது. உங்கள் தகவல்கள் பாதுகாப்பாக இருக்கும் என்பதை இதன் மூலம் உறுதிப்படுத்திக்கொள்ள முடியும். இதுவரை இந்த செட்டிங்கை நீங்கள் மாற்றவே இல்லை என்றால், இப்போதே உடனே மாற்றிவிடுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
How to STOP Google from accessing your microphone and listening to your conversations
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X