Google Pay-ல் தானாக பணம் எடுக்கப்படுகிறதா? அதை எப்படி தடுப்பது? உடனே இந்த செட்டிங்கை மாற்றுங்கள்.. ஈஸி டிப்ஸ்
உங்கள் கூகுள் பே கணக்கில் இருந்து ஒவ்வொரு மாதம் அல்லது ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்தில் சரியாக சொல்லி வைத்தது போல, சில சந்தாக்களுக்கான கட்டணங்கள் வசூலிக்கப்படுகிறதா? அதாவது, ஆட்டோமேட்டிக் ஆக சில சந்தாவிற்கான பேமெண்ட் கூகுள் பே தளத்தில் இருந்து எடுத்துக்கொள்ளப்படுகிறதா? இந்த ஆட்டோ பேமெண்ட் சேவையை சில குறிப்பிட்ட சந்தாக்கும் மட்டும் நீங்கள் நிறுத்த நினைத்தாலோ அல்லது தற்காலிகமாக இடைநிறுத்தம் செய்ய நினைத்தாலோ அதை எப்படி செய்வதென்று தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம்.
கூகுள் (GOOGLE) நிறுவனத்தின் கூகுள் பே (Google Pay) சேவையை பல கோடி பயனர்கள் தினசரி பயன்படுத்தி வருகிறார்கள். மாதாந்திர வைஃபை (WiFi) கட்டணம், EMI, கார் லோன், OTT சந்தா என்று பல சேவைகளுக்கான கட்டணங்களை மக்கள் இப்போது கூகுள் பே மூலம் செலுத்தி வருகிறார்கள். இதுபோன்ற பல சேவைகளை சந்தா கட்டணம் வசூலிக்கும் நிறுவனங்கள் கூகுள் பே தளத்தில் ஆட்டோ பேமெண்ட் மூலம் வசூலிக்கின்றனர்.

Google Pay-ல் தானாக பணம் எடுக்கப்படுகிறதா? அதை எப்படி தடுப்பது?
குறிப்பாக ஆட்டோ பே சேவையின் மூலம் மக்களிடம் இருந்து சரியான நேரத்தில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இது ஒரு சிலருக்கு பயனுள்ளதாக இருந்தாலும், ஒரு சிலருக்கு இதுவே சிக்கலாக முடிகிறது. சில ஆட்டோ பே சந்தாதாரர்கள் சில சந்தா கட்டண சேவைகளை பயன்படுத்துவதை நிறுத்தி இருப்பார்கள், இருப்பினும், அவர்களுடைய சந்தா கட்டணம் வழக்கம் போல, மாதத்தில் ஒரு நாளில் ஆட்டோமெட்டிக் ஆக டிடெக்ட் செய்ப்பட்டிருக்கும்.
இந்த மாதத்திற்கான கட்டணம் வசூலிக்கப்பட்டது என்ற நோட்டிபிகேஷன் மெசேஜ்ஜை பார்த்த பிறகு தான், பயனர்கள் ஐயோ இதை நிறுத்த வேண்டும் என்று நினைத்தேனே என்று புலம்புவார்கள். கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம் எதற்கு என்பது போல, கட்டணத்தை செலுத்திய பிறகு வருத்தம் அடைந்து என்ன பயன் என்பது தான் நடைமுறை விளக்கமாக இருக்கிறது.
Auto Pay சேவையை எப்படி தற்காலிகமாக இடைநிறுத்தம் செய்வது? அல்லது முற்றிலுமாக நிறுத்துவது?
இத்தகைய சொல்நிலையை நீங்கள் எதிர்காலத்தில் சந்திக்காமல் இருக்க வேண்டும் என்றால், உங்கள் கூகுள் பே கணக்கில் ஆட்டோ பே சேவையின் கீழ் ஆக்டிவ் நிலையில் இருக்கும் சந்தா கட்டண வசூலிப்பு சேவையை உங்கள் விருப்பம் போல நிறுத்தம் செய்துக்கொள்ள ஆப்ஷன்கள் இருக்கிறது. குறிப்பிட்ட சந்தாக்கும் மட்டும் நீங்கள் Auto Pay சேவையை நிறுத்த நினைத்தாலோ அல்லது தற்காலிகமாக இடைநிறுத்தம் செய்ய நினைத்தாலோ கீழ் வரும் செயல்முறையை பின்பற்றவும்.
Google Pay தளத்தில் வலது மேல் மூலையில் காண்பிக்கப்படும் உங்கள் ப்ஃரொபைல் புகைப்படத்தை கிளிக் செய்ய வேண்டும். அதில் காண்பிக்கப்படும் ஆட்டோ பே சேவையை கிளிக் செய்து, ஆட்டோ பே சேவையின் கீழ் செயல்பாட்டில் இருக்கும் அணைத்து சேவைகளின் பட்டியலை சரி பார்க்கவும். இதில் இருந்து, நீங்கள் தடை செய்ய விரும்பும் அல்லது தற்காலிகமாக இடைநிறுத்தம் செய்ய விரும்பும் சேவையை கிளிக் செய்துகொள்ளலாம்.
அந்த குறிப்பிட்ட சேவையை கிளிக் செய்து, Auto Pay சந்தாவை நீங்கள் கிளிக் செய்து Cancel Autopay
அல்லது Pause Autopay ஆப்ஷன்களை கிளிக் செய்து, ஆட்டோ பே சேவையை முறையே நிறுத்தம் மற்றும் இடைநிறுத்தம் செய்துகொள்ளலாம். இந்த முறையை பின்பற்றி கூகுள் பே ஆப்ஸில் ஆக்டிவ் நிலையில் இருக்கும் Autopay சேவையை நீங்கள் மாற்றி அமைத்துக்கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications








