Home
News

Airtel, VI, BSNL அலெர்ட்: இதை மட்டும் செய்யுங்க.. ஃபிளாஷ் மெசேஜ் தொல்லையே இல்லை.. நிம்மதியா இருக்கலாம்..

ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு இருக்கும் தற்போதைய பெரும் சிக்கலே ஃபிளாஷ் மெசேஜ்கள் (Flash Message) டிஸ்பிளேவில் அடிக்கடி தோன்றுவதாக தான் இருக்கும். ஏர்டெல் (Airtel), வோடபோன் ஐடியா (VI), பிஎஸ்என்எல் (BSNL) பயனர்களை கடுப்பேற்றும் ஒரு அம்சமாகவே இந்த ஃபிளாஷ் மெசேஜ்கள் பார்க்கப்படுகிறது.

ஃபிளாஷ் மெசேஜ்ஜா? அப்படி என்றால் என்ன? இதனால் என்ன தொல்லை? என்று சிலர் நினைப்பீர்கள், இதனால் என்ன சிக்கல் எழுகிறது மற்றும் இந்த சேவையை எப்படி நாம் முடக்கம் செய்யலாம் என்பதை பற்றி பார்க்கலாம். முதலில் ஃபிளாஷ் மெசேஜ் என்றால் என்ன? (What is Flash message) சிறிய சாளரத்தில் டிஸ்பிளேவில் தோன்றும் நோட்டிபிகேஷன் செய்தி தான் பிளாஷ் மெசேஜ் என்பதாகும்.

Airtel, VI, BSNL ஃபிளாஷ் மெசேஜ் அலெர்ட்: இதை மட்டும் செய்யுங்க..

மொபைல் பயனர்களை கடுப்பேற்றும் ஃபிளாஷ் மெசேஜ்.. Flash Message என்றால் என்ன?

இது SMS ஐ விட அதிக தெரிவுநிலை விகிதத்தைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இது ஆப்ஸ் அல்லது இன்பாக்ஸில் தோன்றாததால், உடனடி செய்திகளின் போது கவனத்தை ஈர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அதிகமான ஃபிளாஷ் மெசேஜ்களைப் பெறுவது ஸ்பேம் வகையில் சேர்வதாகும். அடிக்கடி தோன்றும் இந்த ஃபிளாஷ் மெசேஜ்களால் ஸ்மார்ட்போன் பயனர்கள் அதிகம் கடுப்பாகிறார்கள்.

இப்படி ஃபிளாஷ் மெசேஜ்களால் அதிகம் கடுப்பான நபர்களில் நீங்களும் ஒருவர் என்றால், இந்த பதிவு உங்களுக்கானது. எப்படி ஃபிளாஷ் மெசேஜ் சேவையை உங்கள் போனில் தோன்றாமல் முடக்கலாம் என்பதை பற்றி இப்போது பார்க்கலாம்.

ஏர்டெல் வாடிக்கையாளர்கள் எப்படி ஃபிளாஷ் மெசேஜ்களை முடக்கம் செய்வது என்று பார்க்கலாம்?
- ஏர்டெல் சர்வீசஸ் ஆப் (Airtel Services) / சிம் டூல்கிட் (SIM Tool) அம்சத்தை ஓபன் செய்யவும்.
- கூகுள் ப்ளே ஸ்டோரில் (Google Play Store) இருக்கும் ஏர்டெல் தேங்க்ஸ் ஆப்ஸ் (Airtel Thanks App) போன்றதல்ல இது.
- மாறாக, நீங்கள் ஏர்டெல் சிம்மை ஃபோனில் நிறுவும் போது ஏர்டெல் சர்வீசஸ் உங்கள் ஆண்ட்ராய்டு போனில் தோன்றும்.

Airtel, VI, BSNL ஃபிளாஷ் மெசேஜ் அலெர்ட்: இதை மட்டும் செய்யுங்க..
- இப்போது Airtel Now விருப்பம் கிளிக் செய்யவும்.
- பிறகு Start / Stop ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
- Stop கிளிக் செய்யவும்.
- அவ்வளவு தான் இனி உங்கள் போனில் அனாவசியமாக ஃபிளாஷ் மெசேஜ்கள் தோன்றாது.

நீங்கள் BSNL பயனர் என்றால், இந்த செயல்முறையை பின்பற்றவும்:
- உங்கள் போனில் BSNL Mobile app திறக்கவும்.
- பிறகு BSNL Buzz Service அம்சத்தை கிளிக் செய்யவும்.
- இறுதியாக Deactivate என்பதை கிளிக் செய்யவும்.
- இப்போது உங்கள் பிஎஸ்என்எல் போனிற்கு வரும் ஃபிளாஷ் மெசேஜ்கள் முடக்கப்படும்.

வோடபோன்-ஐடியா பயனர்கள் எப்படி ஃபிளாஷ் மெசேஜ்ஜை முடக்கம் செய்ய வேண்டும்?
- உங்கள் ஸ்மார்ட்போனில் Vodafone Services app திறக்கவும்.
- Flash என்பதை கிளிக் செய்யவும்.
- Activation என்ற விருப்பத்தை தேர்வு செய்யவும்.
- இறுதியாக Deactivate என்ற விருப்பத்தை கிளிக் செய்து முடிக்கவும்.
- இனி உங்கள் போனிற்கு ஃபிளாஷ் மெசேஜ்கள் முற்றிலுமாக வராது.

ஒருவேளை நீங்கள் வோடபோன்-ஐடியா போஸ்ட்பெய்டு பயனர் என்றால் CAN FLASH என்று டைப் செய்து, 199 அல்லது 149 என்ற எண்ணிற்கு எஸ்எம்எஸ் அனுப்பவும்.

Best Mobiles in India

English summary
How To Stop Airtel Vodafone Idea or Vi BSNL Flash Message on Android Smartphone and Mobiles
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X