Home
News

லேப்டாப், கம்ப்யூட்டர் ஸ்பீட் குறையவே கூடாதா? இதை மட்டும் செஞ்சா ஆமைபோன்ற வேகம் இனி இல்லை..

உங்கள் லேப்டாப் (Laptop) அல்லது கம்ப்யூட்டர் (Computer) மந்தமாக வேலை செய்கிறதா? ஆமை போல மிகவும் மெதுவாக இயங்கி, உங்களை கடுப்பேற்றுகிறதா? அப்படியானால், உடனே உங்கள் லேப்டாப்பில் இந்த சிக்கல்களை நீங்கள் சரி செய்ய வேண்டும் மக்களே.

லேப்டாப் வேகமாக இயங்க மிகவும் முக்கியமான அம்சம் அதில் உள்ள ரேம் (RAM) தான். பெரும்பாலான லேப்டாப் மற்றும் கம்ப்யூட்டர் பயனர்கள் சாதாரண லேப்டாப்பிற்கு 4ஜிபி RAM போதுமானது என்று நினைக்கிறார்கள். ஆனால், அதன் பெரும்பாலான பகுதி ஒஎஸ் (OS) செயல்படுவதற்கே சென்றுவிடும். அதுபோக பேக்ரவுண்டில் சில செயலிகள் (Background apps) எப்போதுமே செயல்பாட்டில் இருக்கும். இவை அனைத்திற்கும் போதுமான ரேம் வசதி இல்லாத பொழுது லேப்டாப் சோர்வடைந்து மெதுவாகிறது.

லேப்டாப், கம்ப்யூட்டர் ஸ்பீட் குறையவே கூடாதா? ஆமைபோன்ற வேகம் இனி இல்லை

உங்கள் லேப்டாப், கம்ப்யூட்டர் ஸ்பீட் குறையவே கூடாதா? (Your laptop and computer speed should never slow down):

8GB ரேம் அல்லது 16GB ரேம் அம்சம் இருக்கும் லேப்டாப்புகளை வாங்குவது சிறப்பானது. உங்கள் ரேம் கூடுதல் சுமையை எடுத்துக்கொள்கிறது என்றால், நீங்கள் விண்டோஸ் (Windows) பயனாளர்கள் என்றால் Ctrl+Alt+Del பயன்படுத்தி டாஸ்க் மேனேஜரை (Task Manager) ஓபன் செய்து, அதில் அதிக RAM பயன்படுத்தும் தேவையில்லாத செயலிகள் எவை என்பதனை கண்டறிந்து அதன் செயல்பாட்டை முடிக்கலாம்.

அடுத்தபடியாக உங்கள் லேப்டாப் சோர்வடைய முக்கிய காரணம் ஸ்டோரேஜ் சிக்கல் தான். பெரும்பாலான பயனர்கள் எல்லா தகவல்களையும் லேப்டாப் உடன் கிடைக்கும் ஸ்டோரேஜ்ஜில் சேமித்து, இருக்கும் இடத்தை எல்லாம் நிரப்பிவிடுகிறார்கள். இது கட்டாயம் உங்கள் சாதனத்தை ஸ்லொவ் ஆக மாற்றிவிடும். இந்த சிக்கலை தவிர்க்க நீங்கள் எக்ஸ்டர்னல் ஹார்டு டிஸ்க் சாதனங்களை பயன்படுத்தலாம். அல்லது கிளவுட் ஸ்டோரேஜ் வசதியை பயன்படுத்தலாம்.

அடுத்தபடியாக நீங்கள் கவனிக்க வேண்டிய விஷயம் உங்கள் சாதனம் சரியான OS அப்டேட்டை பெற்றுள்ளதா? என்பது தான். நீங்கள் பயன்படுத்தும் ஓஎஸ் அப்டேட்டட் வெர்ஷன் (Updated Version) ஆக இல்லாத பொழுது, உங்கள் லேப்டாப்பை சோர்வடையலாம். உங்க லேப்டாப்பின் OS அப்டேட்டாக உள்ளதா என்பதனை தெரிந்து கொள்ள, விண்டோஸ் பயனாளர்கள் Start பட்டனில் இருக்கும் Settings-க்கு சென்று, Update and Security என்பதில் இருக்கும் Windows Update என்பதைப் பயன்படுத்தலாம்.

லேப்டாப், கம்ப்யூட்டர் ஸ்பீட் குறையவே கூடாதா? ஆமைபோன்ற வேகம் இனி இல்லை

இந்த விஷயங்களை செய்தால் போதும்.. இனி ஆமை போன்ற வேகம் இல்லை..

அடுத்தபடியாக உங்கள் சிஸ்டம் ஹீட்டானாலும் (Over Heat Issue On Laptops) சோர்வடைய வாய்ப்புகள் அதிகம். லேப்டாப் அல்லது கம்ப்யூட்டரிலிருக்கும் கூலிங் ஃபேன் (Cooling Fan) சரியாகச் செயல்படாவிட்டால் விரைவாக சிஸ்டம் ஹீட் ஆகிவிடும். இந்த அதிக வெப்பநிலை சர்க்யூட்டை (Circuit) சேதப்படுத்துவது மட்டுமின்றி, உங்கள் கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப்பின் செயல்பாட்டையும் குறைக்கும். எனவே எப்போதும் லேப்டாப்பின் அடிப்பகுதி காற்றோட்டமாக இருப்பதை உறுதி செய்து பயன்படுத்த வேண்டும்.

வெப்பத்தைக் கடத்தும் தன்மை இல்லாத தளங்களில் லேப்டாப்புகளை வைத்து பயன்படுத்துவது இந்த பிரச்சனைகளை அதிகரிக்கும். லேப்டாப்பில் அதிகம் தூசி படிந்து இருந்தாலும் இத்தகைய நிலைமை ஏற்படலாம். அவ்வப்போது லேப்டாப்பை சுத்தம் செய்வது, தூசிகளை நீக்கி கூலிங் ஃபேன் சரியாகச் செயல்படுகிறதா என்பதைக் கவனிப்பது மிகவும் அவசியம்.

உங்கள் சாதனங்களை அடிக்கடி ஸ்கேன் செய்வது சிறப்பானது. உங்கள் சிஸ்டத்தில் வைரஸ் தாக்குதல் (Virus attack on systems) இருந்தாலும் அதன் செயல்பாடு சோர்வடையலாம். எப்போதுமே உங்கள் லேப்டாப் அல்லது கம்ப்யூட்டரில் ஏதேனும் ஒரு ஆன்ட்டிவைரஸ் (Anti Virus) செயல்பாட்டில் இருக்கிறதா என்பதைக் கண்காணித்துக் கொண்டிருப்பது நல்லது. இந்த விஷயங்களை ஒவ்வொரு லேப்டாப் மற்றும் கம்ப்யூட்டர் பயனர்கள் கட்டாயம் பின்பற்றி வந்தால், சாதனம் மந்தமாகாமல் இருக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
How to Speed Up Your Slow Running Laptop and Computers By Tuning The Settings and Following Simple Steps
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X