வாட்ஸ்அப் விடுங்க மக்களே: இனி Live Location கூகுள் மேப்ஸ் வழியாக அனுப்புங்க.! இதோ வழிமுறைகள்.!

|

வாட்ஸ்அப் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட புதிய பிரைவசி பாலிசி மாற்றம் உலகம் முழுக்க பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனால், பல வாட்ஸ்அப் பயனர்கள் வாட்ஸ்அப்பை நிராகரித்து, சிக்னல் மற்றும் டெலிகிராம் போன்ற வேறு மெசேஜ்ஜிங் ஆப்ஸ்களுக்கு
மாறிவருகின்றனர்.

போன்ற செயலிகளில் எது சிறந்தது?

குறிப்பாக வாட்ஸ்அப், சிக்னல், டெலிகிராம் போன்ற செயலிகளில் எது சிறந்தது? எது பாதுகாப்பானது? போன்ற கேள்விகளும் தேடல்களும் அதற்கான பதில்களும் இன்னும் ஓய்ந்தபாடில்லை. குறிப்பாக சமூக வலைத்தளங்களில் எந்த செயலி சிறந்தது என மக்கள் கருத்து தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

மாற்றியமைக்குமாறு

மேலும் வாட்ஸ்அப்-ன் புதிய தனியுரிமைக் கொள்கையை (பிரைவசி பாலிசி) மாற்றியமைக்குமாறு வாட்ஸ்அப் நிறுவனத்தை இந்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. மேலும் இது குறித்து இந்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகமானது வாட்ஸ்அப் தலைமை நிர்வாக அதிகாரி வில் காட்கார்டுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது.

பிப்., 4 வரை காத்திருங்கள்: 8ஜிபி ரேம் உள்ளிட்ட அம்சங்களோடு ரியல்மி எக்ஸ் 7, எக்ஸ் 7 ப்ரோ!பிப்., 4 வரை காத்திருங்கள்: 8ஜிபி ரேம் உள்ளிட்ட அம்சங்களோடு ரியல்மி எக்ஸ் 7, எக்ஸ் 7 ப்ரோ!

தனியுரிமை, தேர்வு செய்வதற்கான சுதந்திரம்

வாட்ஸ்அப் சேவை விதிமுறைகள் மற்றும் தனியுரிமைக் கொள்கையில் முன்மொழியப்பட்ட மாற்றங்கள் ஆனது இந்திய மக்களின் தேர்வு மற்றும் சுயாட்சிக்கான தாக்கங்கள் குறித்து கடுமையான கவலைகளை எழுப்புகின்றன என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது மேலும் முன்மொழியப்பட்ட மாற்றங்களை திரும்ப பெறவும், தகவல் தனியுரிமை, தேர்வு செய்வதற்கான சுதந்திரம் மற்றும் தரவு பாதுகாப்பு தொடர்பான அதன் அணுகுமுறையை மறுபரிசீலனை செய்யவும் இந்திய அமைச்சகம் வாட்ஸ்அப்பைக் கேட்டுக்கொண்டுள்ளது.

பல்வேறு மக்கள் இந்த வாட்ஸ்அப்

ஆனாலும் பல்வேறு மக்கள் இந்த வாட்ஸ்அப் செயலியை தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர். அதாவது இந்த செயலியில் உடனடியாக அனுப்பும் வாய்ஸ் மெசேஜ், நொடிகளுக்குள் பகிரும் லைவ் லோக்கேஷன், குறிப்பாக 24 மணி நேரத்திற்குள் தானாகவே மறையும் ஸ்டேட்டஸ் போன்ற பல அம்சங்கள் இருப்பதால் தொடர்ந்து மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

அம்சங்களில், லைவ்

மேலே கூறப்பட்ட அம்சங்களில், லைவ் லோக்கேஷனையே அதிகம் பயன்படுத்தும் பழக்கம் உங்களுக்கு இருந்தால், அதே சமயம் வாட்ஸ்அப் செயலியை டெலிட் செய்ய தயக்கம் காட்டினால் உங்களுக்கு ஒரு சின்ன மாற்று யோசனை இதோ.

நிகழ்நேர இருப்பிடத்தை ஒரு

அதாவது ஒரு நபர் நிகழ்நேர இருப்பிடத்தை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள அனுமதிக்கும் அம்சம் வாட்ஸ்அப் செயலியில் மட்டும் அல்ல, கூகுள் மேப்ஸ் வசதியில் இருக்கிறது.

மேப்ஸ்-ஐ அனுதினமும்

அதன்படி நாம் கூகுள் மேப்ஸ்-ஐ அனுதினமும் தவறாமல் பயன்படுத்துவதால், இந்த ஆப் வழியாக லைவ் லோக்கேஷன் அம்சத்தைப் பயன்படுத்துவது மிகவும் அர்த்தமுள்ளதாகவே இருக்கும். இதற்கு வேண்டி தனியாக ஒரு ஆப் டவுன்லோட் செய்ய வேண்டியதில்லை.

கூகுள் மேப்ஸ் வழியாக உங்களது

இப்போது கூகுள் மேப்ஸ் வழியாக உங்களது நிகழ்நேர இருப்பிடத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது எப்படி என்கிற வழிமுறைகளைசற்று விரிவாகப் பார்ப்போம்.

வழிமுறை-1

வழிமுறை-1

முதலில் கூகுள் மேப்ஸ் செயலியை திறந்து சைன்-இன் செய்யவும்.

வழிமுறை-2

வழிமுறை-2

அடுத்து கூகுள் மேப்ஸ் செயலியின் மேல் வலது மூலையில் உங்களது ப்ரொபைல் படத்தை கிளிக் செய்யவும்.

வழிமுறை-3

வழிமுறை-3

பின்னர் ப்ரோபைல் படத்தை கிளிக் செய்தவுடன், அங்கே Location sharing என்கிற விருப்பத்தை
காண்பீர்கள், அதை கிளிக் செய்யவும்.

வழிமுறை-4

அடுத்து உங்களது லோக்கேஷனை பகிர விரும்பும் நபரின் ப்ரொபைலை கிளிக் செய்யவும். அவ்வளவுதான் உங்களதுலைவ் லோக்கேஷன் குறிப்பிட்ட நபருக்கும் அனுப்பப்படும்.

 5. வழிமுறை-5

5. வழிமுறை-5

மேலும் கூகுள் மேப்ஸ்-ல் உள்ள Can See Your Location என்கிற டேப்-இன் கீழ் உங்கள் லோக்கேஷனை நீங்கள் எவ்வளவு நேரத்திற்கு பகிர விரும்புகிறீர்கள் என்பதையும் தேர்வு செய்யலாம், அல்லது உடனே நிறுத்தலாம்.

அதேபோல் Copy to clipboard என்கிற விருப்பத்தின் வழியாக, உங்கள் இருப்பிடத்திற்கான Link-ஐ காப்பி செய்து,அதை டெக்ஸ்ட் அல்லது மனின்னஞ்சல் அல்லது பிற மெசேஜிங் ஆப் வழியாக கூட அனுப்ப முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
How to share your live location with others via Google Maps: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X