Just In
- 4 min ago
பிளிப்கார்ட்: பட்ஜெட் விலையில் விற்பனைக்கு வரும் சியோமி பேண்ட் 3-ஐ.!
- 3 hrs ago
ஜியோ நிறுவனம் அறிவித்துள்ள கேஷ்பேக் சலுகை: பெறுவது எப்படி?
- 5 hrs ago
டிஜிட்டல் இந்தியா: 500 கோடி பே., போன் பே-ன் மொத்த பணப்பரிவர்த்தனை தகவல் வெளியீடு
- 6 hrs ago
நெட்ஃபிலிக்ஸ்: 50% சலுகையுடன் அறிமுகம் செய்துள்ள வருடாந்திர சந்தா இவ்வளவு தானா?
Don't Miss
- Finance
பிரதமர் மோடி பொய் சத்தியம் பண்ணி விட்டார்.. மன்மோகன் சிங் சாடல்!
- Movies
விஜய் டிவி புகழ் திவாகருக்கு… டும் டும் டும்.. அபியை மணந்தார்!
- News
இரவு நேரத்தில் அண்ணா அறிவாலயம் வந்த வைகோ.. ஸ்டாலினுடன் சந்திப்பு
- Sports
முடியலைடா சாமி! கையை தூக்கி.. பல்பு வாங்கி.. ஊரையே விழுந்து விழுந்து சிரிக்க வைத்த ஆஸி வீரர்!
- Automobiles
ஆரஞ்ச் நிறத்தில் ராயல் எண்ட்பீல்டு 350எக்ஸ் பிஎஸ்6 மாடல்... அடுத்த ஆண்டு அறிமுகம்
- Lifestyle
நீங்கள் செய்யும் இந்த செயல்கள் சனிபகவானின் கோபத்தை அதிகரிக்கும் தெரியுமா?
- Education
DRDO: மத்திய அரசில் காத்திருக்கும் 1800 வேலைகள்! ஊதியம் ரூ.56 ஆயிரம்!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
கூகுள் டுயோ செயலியில் புகைப்படங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது எப்படி?
கூகுள் நிறுவனத்தின் வீடியோ சாட் மொபைல் செயலியான கூகுள் டுயோ ஐ.ஒ.எஸ். மற்றும் ஆண்ட்ராய்டு தளங்களில் கிடைக்கிறது. இந்த செயலியை டெஸ்க்டாப் மற்றும் லேப்டாப் கம்ப்யூட்டர்களிலும் கூகுள் க்ரோம் பிரவுசர் மூலம் பயன்படுத்த முடியும். இந்த சேவையை கூகுள் அக்கவுண்ட் உடன் இணைத்தும், இணைக்காமலும் பயன்படுத்தலாம். பயனர்கள் தங்களின் மொபைல் நம்பரை பதிவு செய்தபின் செயலியின் அனைத்து அம்சங்களையும் பயன்படுத்த முடியும்.
நெட்வொர்க் வேகம் குறைவாக இருக்கும் பகுதிகளிலும் அழைப்புகளை உயர் தரத்தில் மேற்கொள்ளும் வசதி வழங்கப்படுகிறது. முழுமையான என்க்ரிப்ஷன் செய்யப்பட்டுள்ளதால் அழைப்புகள் அனைத்தும் பாதுகாப்பாக இருக்கிறது. காண்டாக்ட் லிஸ்ட்டில் இருக்கும் நபர்களுக்கு நேரடியாக அழைப்புகளை மேற்கொள்ளலாம்.
இதில் உள்ள நாக்நாக் ஆப்ஷன் கொண்டு செயலியில் உள்ள அம்சங்கள் அனைத்தையும் லைவ் பிரீவியூ செய்ய முடியும். இதன் டெவலப்பர்கள் செயலியில் பல்வேறு பயனுள்ள அம்சங்களை சேர்த்து வருகின்றனர். அந்த வகையில் ஆடியோ கால் மட்டும் மேற்கொள்ளும் வசதி ஏப்ரல் 2017 இல் வழங்கப்பட்டது.
அவ்வாறு செயலியில் வழங்கப்பட்டுள்ள புதிய அம்சம் கொண்டு பயனர்கள் புகைப்படங்களை பகிர்ந்து கொள்ள முடியும். நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட இந்த அம்சம் ஒருவழியாக செயலியில் தற்சமயம் வழங்கப்பட்டு இருக்கிறது. வீடியோ கால் செயலியில் புகைப்படங்களை பகிர்ந்து கொள்ளும் வசதி அத்தனை அவசியம் இல்லை என்பதாலேயே இதன் வெளியீட்டிற்கு இத்தனை காலம் ஆனதாக எடுத்துக் கொள்ளலாம்.
கூகுள் டுயோ செயலியில் புகைப்படங்களை எப்படி பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
வழிமுறை 1: நீங்கள் பகிர்ந்து கொள்ள வேண்டிய புகைப்படத்தை ஃபைல் எக்ஸ்புளோரர் செயலி அல்லது கேலரியில் இருந்து நேரடியாக தேர்வு செய்ய வேண்டும்.
வழிமுறை 2: ஷேர் பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்.
வழிமுறை 3: ஷேர் மெனுவில் உள்ள டுயோ ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.
வழிமுறை 4: நீங்கள் தேர்வு செய்த புகைப்படம் எடிட்டிங் விண்டோவில் திறக்கும்.
வழிமுறை 5: இனி A என குறியீடு கொண்ட ஐகான் இருக்கும். இதனை கொண்டு புகைப்படத்தில் எழுத்துக்களை சேர்க்க முடியும். இதில் நீங்கள் விரும்பும் நிறத்தை தேர்வு செய்து கொள்ளலாம். நீங்கள் விரும்பும் நிறங்களை தேர்வு செய்ததும், Next என்ற ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.
வழிமுறை 6: இந்த ஆப்ஷனில் நீங்கள் புகைப்படத்தை பகிர்ந்து கொள்ள வேண்டி காண்டாக்ட்களை தேர்வு செய்ய வேண்டும். இந்த ஆப்ஷனில் அதிகபட்சம் ஐந்து காண்டாக்ட்களை தேர்வு செய்யலாம்.
புகைப்படத்தை பெறுவோருக்கு கூகுள் டுயோ செயலியின் நோட்டிஃபிகேஷன் மூலம் தகவலை தெரிந்து கொள்ள முடியும். நோட்டிஃபிகேஷனை க்ளிக் செய்தோ அல்லது காண்டாக்ட் பக்கத்திற்கு சென்றும் பயனர்கள் புகைப்படங்களை பார்க்க முடியும். கால்பேக் அல்லது புகைப்படங்களுக்கு பதில் அளிக்கும் ஆப்ஷன்கள் பயனர்களுக்கு வழங்கப்படும். இந்த புகைப்படம் 24 மணி நேரத்திற்கு பின் தானாக மறைந்து விடும். இதனால் பயனர்களுக்கு புகைப்படம் வேண்டுமெனில், அது மறையும் முன் டவுன்லோடு செய்து கொள்ள வேண்டும். புகைப்படத்தின் வலதுபுறம் மேல்பக்கமாக இருக்கும் ஐகானை க்ளிக் செய்து டவுன்லோடு செய்யலாம்.
-
22,990
-
29,999
-
14,999
-
28,999
-
34,999
-
1,09,894
-
15,999
-
36,591
-
79,999
-
71,990
-
14,999
-
9,999
-
64,900
-
34,999
-
15,999
-
25,999
-
46,669
-
19,999
-
17,999
-
9,999
-
22,160
-
18,200
-
18,270
-
22,300
-
32,990
-
33,530
-
14,030
-
6,990
-
20,340
-
12,790