Home
News

சூப்பர்ல: WhatsApp-லாம் வேணாம்.. இனி Google Maps-ல் லைவ் லொகேஷன்.. நொடியில் உங்க லொகேஷனை ஷேர் செய்வது எப்படி?

பயணம் செய்பவர்கள் சுலபமாக ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்லும்போது அதிகமாக பயன்படுத்தும் ஒரு செயலி என்றால் அது கூகுள் மேப்ஸ் (Google Maps) தான். மக்கள் பயன்பாட்டை மேலும் சுலபமாக்கும் வகையில் புதிய அப்டேட் ஒன்று வெளிவந்துள்ளது.

நம்முடைய லொக்கேஷனை (Location) மற்றவருக்கு துள்ளியமாக காட்டவும், பாதுகாப்பிற்காக பயணத்தை லைவ் ஷேரிங் (Live sharing) செய்வதற்கும் வாட்ஸ்ஆப் (WhatsApp) மற்றும் டெலிக்ராம் (Telegram) போன்ற மெசேஜிங் ஆப்களில் லொக்கேஷன் ஷேர் (Location sharing) செய்யும் ஆப்ஷன் இருக்கும். இந்த அம்சத்தில் மூலம் பல நன்மைகள் கிடைக்கின்றது, பாதுகாப்பு அதிகரித்துள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது. இதனை உணர்ந்த கூகுள் (Google) அந்த அம்சத்தை மேப்ஸில் சேர்த்துள்ளது.

சூப்பர்ல: WhatsApp-லாம் வேணாம்.. இனி Google Maps-ல் லைவ் லொகேஷன்..

பயணம் செய்யும்போது பெரும்பாலானவர்கள் பயன்படுத்துவது கூகுள் மேப்ஸ் (Google Maps) தான். எனவே இதில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள அப்டேட் (Google Maps Update) மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அது என்ன அப்டேட் என்றால், இனி கூகுள் மேப்ஸில் லொக்கேஷன், லைவ் லொக்கேஷன் போன்றவற்றை ஷேர் செய்துகொள்ள முடியும்.

கூகுள் மேப்ஸ் இல் வந்த புது அப்டேட் (New update in Google Maps):

வாட்ஸ்ஆப் போன்ற மெசேஜிங் ஆப்களில் அந்தந்த ஆப்களில் மட்டுமே லொக்கேஷனை பகிரலாம். ஆனால் கூகுள் மேப்ஸ் ஒரு பொது செயலி என்பதால் மெயில் (email) மூலம் மட்டுமின்றி மற்ற சில மொபைல் ஆப்ஸ்களிலும் (Mobile apps) லொக்கேஷனை ஷேர் செய்துகொள்ளலாம். லொக்கேஷன் மட்டுமின்றி மேலும் சில பயனுள்ள தகவல்களையும் பகிரும் வண்ணம் இந்த புதிய அப்டேட் உருவாக்கப்பட்டுள்ளது.

லொக்கேஷன் பகிர்வது மட்டுமின்றி தகவல் பகிர்பவரின் போனின் பேட்டரில் (Battery) இருக்கும் சார்ஜின் அளவு (Charging level), அந்த போன் சார்ஜிங் செய்யப்பட்டுக்கொண்டு இருக்கிறதா, இன்னும் எவ்வளவு நேரத்தில் அவர்கள் சேரும் இடத்தை அடைவார்கள் போன்ற தகவல்களும் பகிரப்படும். இந்த மாதிரியான அம்சங்கள் வாட்ஸ்ஆப் மற்றும் டெலிக்ராம் போன்ற மெசேஜிங் ஆப்களில் இல்லை என்பதுதான் இதன் கூடுதல் சிறப்பு.

சூப்பர்ல: WhatsApp-லாம் வேணாம்.. இனி Google Maps-ல் லைவ் லொகேஷன்..

இந்த அப்டேட்டை உங்கள் கூகுள் மேப்ஸில் எப்படி செயல்படுத்துவது என்று இப்போது பார்க்கலாம். உங்களது லைவ் லொக்கெஷனை ஷேர் செய்வதற்கு கூகுள் மேப்ஸ் ஆப்பை ஓப்பன் செய்து திரையின் வலது மேல் ஓரத்தில் இருக்கும் ப்ரொவைல் பிக்சர் ஐகானை (Profile picture icon) க்ளிக் செய்ய வேண்டும்.

கூகுள் மேப்ஸ் மூலம் எப்படி லைவ் லொகேஷன் ஷேர் செய்வது? (How to Share Live Location with Google Maps?):

பின்னர், அதில் இருக்கும் "லொக்கேஷன் ஷேரிங்" (Location sharing) என்பதை தேர்வு செய்ய வேண்டும். அதனை தேர்வு செய்த பின்னர் தோன்றும் திரையில் "ஷேர் லொக்கேஷன்" என்ற பட்டன் இருக்கும். அதனை க்ளிக் செய்தால் புதிய திரை ஒன்று தோன்றும். இந்த அம்சத்தை பயன்படுத்தி ஒரு குறிப்பிட்ட கால அளவிற்கும் லைவ் லொக்கேஷனை பகிரலாம் அல்லது நீங்களாக லைவ் ஷேரிங்கை நிறுத்தும் வரையும் ஷேர் செய்யப்படுமாறும் தேர்வு செய்யலாம்.

பொதுவாக வாட்ஸ்ஆப் போன்ற ஆப்களில் அதிகபட்சமாக 8 மணி நேரம் வரை மட்டுமே லைவ் லொக்கேஷன் ஷேர் செய்ய முடியும். இதில் அந்த கட்டுப்பாடு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. லைவ் லொக்கேஷன் பகிரப்படுவதை நிறுத்த மீண்டும் அதே போல "லொகேஷன் ஷேரிங்" உள்ளே செல்ல வேண்டும். அந்த திரையில் யாருக்கு உங்கள் லொக்கேஷன் பகிரப்பட்டுள்ளதோ அந்த தகவல் தோன்றும்.

அதனை க்ளிக் செய்தால் ஸ்டாப் (Stop) என்ற பட்டன் இருக்கும். அதனை தேர்வு செய்யும்போது லைவ் லொக்கேஷன் ஷேர் செய்யப்படுவது நின்றுவிடும். இந்த அப்டேட்டை செயல்படுத்த கூகுள் மேப்பிற்கு லொகேஷன் ஆக்சஸ் (Location access) எப்போதும் செய்ய உங்கள் டிவைஸில் அனுமதி அளிக்கப்பட்டிருக்க வேண்டும் என்பது முக்கிய குறிப்பு. இன்று அறிமுகப்படுத்தப்படும் அனைத்து போன்களிலும் மேப்ஸ் டிஃபால்டாக (Default) இருப்பதால் இந்த அப்டேட் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
How to share live location in Google Maps like you're using in WhatsApp
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X