Home
News

iPhone மாதிரி Android போனிலும் செய்யலாம்.. எப்படி உங்கள் போனில் ஃபேஸ் அன்லாக் அம்சத்தை அமைப்பது?

உங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் எப்படி ஃபேஸ் லாக் அண்ட் அன்லாக் அம்சத்தை ஆக்டிவேட் செய்வது என்று இந்த பதிவில் பார்க்கப்போகிறோம். பெரும்பாலான இளைய தலைமுறையினருக்கு இது பற்றிய புரிதல் இருக்கிறது. ஆனால், பெரியவர்களுக்கு இது பற்றிய புரிதல் இல்லை.

ஆகையால், ஃபேஸ் லாக் மற்றும் அன்லாக் அம்சத்தை எப்படி ஆக்டிவேட் செய்வது என்று தெரியாமல் தவிக்கும் மக்களுக்கு உதவ இந்த பதிவை உருவாக்கி வழங்குகிறோம். முதலில் ஃபேஸ் லாக் பாதுகாப்பு அம்சத்தை பற்றி அறிந்துகொள்ளலாம். பேஸ் லாக் அம்சம் உங்கள் ஸ்மார்ட்போனிற்கான கூடுதல் பாதுகாப்பை வழங்குகிறது. இது ஸ்மார்ட்போன் பயனரின் முக அங்கீகாரத்தை வைத்து இயங்குகிறது.

iPhone மாதிரி Android போனிலும் செய்யலாம்.. ஃபேஸ் அன்லாக் அம்சம்..

அதாவது, ஸ்மார்ட்போனுடன் பதிவிடப்படும் முக விபரங்களை வைத்து இது ஒரு பாதுகாப்பு அம்சத்தை உருவாக்குகிறது. ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வொரு விதமான முகம் இருக்கிறது. இதை நாம் ஒவ்வொரு மனிதனின் வித்தியாசமான கைரேகை போல பிரித்து பார்க்க முடியும். எப்படி போனில் பிங்கர் பிரிண்ட் லாக்கிங் பாதுகாப்பை நாம் ஆக்டிவேட் செய்து வைக்கிறோமோ.

அதேபோல, உங்கள் முக விபரங்களை வைத்து, உங்களால் உங்கள் போனிற்கு பேஸ் லாக்கிங் பாஸ்வோர்டை உருவாக்க முடியும். இது ஆப்பிள் ஐபோன் போன்ற சாதனங்களில் மிகவும் பயனுள்ள அம்சமாக பார்க்கப்படுகிறது. இந்த அம்சம் இப்போது பல ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களிலும் பயன்படுத்த கிடைக்கிறது.

ஆனால், பெரும்பாலான ஆண்ட்ராய்டு பயனர்கள் முக அங்கீகாரத்தை ஆக்டிவேட் செய்து வைப்பதில்லை. இதற்கு மாற்றாக வெறும் பிங்கர் பிரிண்ட் பாதுகாப்பை மட்டுமே ஆக்டிவேட் செய்து வைத்திருக்கிறார்கள். இது ஒரு சிலருக்கு எளிமையான பாதுகாப்பு அம்சமாக இருந்தாலும், உண்மையில் மிகவும் எளிமையான மற்றும் அதிக பாதுகாப்பு கொண்ட பாஸ்வோர்ட் அமைப்பாக பேஸ் லாக் அம்சம் மட்டுமே செயல்படுகிறது.

iPhone மாதிரி Android போனிலும் செய்யலாம்.. ஃபேஸ் அன்லாக் அம்சம்..

உண்மையை சொல்ல போனால், பேஸ் லாக் அம்சத்தை ஆக்டிவேட் செய்துவிட்டால், உங்கள் போனை நீங்கள் ஒவ்வொரு முறையும் பாஸ்வோர்ட் உள்ளிட்டு திறக்க வேண்டிய அவசியமில்லை. காரணம், உங்கள் போனை கையில் எடுத்து பார்த்தவுடனே, உங்கள் ஸ்மார்ட்போன் சாதனம் தானாகவே உங்கள் முக விபரங்களை சேகரித்து, சில நொடிகளில் உங்கள் ஸ்மார்ட்போனை ஓபன் செய்துவிடுகிறது.

இது பல பயனர்களுக்கு நேரத்தை மிச்சம் பிடிக்கிற ஒரு அம்சமாக செயல்படுகிறது. அதேபோல், மற்றவர்கள் உங்கள் போனை கையில் வாங்கினால் கூட, உடனே அது போனை லாக் செய்து விடுகிறது. இதனால், உங்கள் முகத்தை தவிர வேறெந்த முகத்துடனும் உங்கள் போனை அணுக முடியாத படி அதிக பாதுகாப்பை வழங்குகிறது.

சரி, ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் எப்படி பேஸ் லாக் அண்ட் ஆண்லாக் அம்சத்தை ஆக்டிவேட் செய்வது என்று இப்போது பார்க்கலாம்.

- டிஸ்பிளேவின் (Display) அடிப்பகுதியில் இருந்து மேலே ஸ்வைப் செய்யவும்.
- செட்டிங்ஸ் (Settings) பயன்பாட்டைத் தட்டவும்.
- செக்யூரிட்டி & பிரைவசி (Security & privacy) விருப்பத்தை கிளிக் செய்யவும்.
- டிவைஸ் அன்லாக் (Device unlock) என்பதைத் தட்டவும்.
- முகம் & கைரேகை அன்லாக் (Face & Fingerprint Unlock) என்பதைத் தட்டவும்.
- ஃபேஸ் அன்லாக் (Face Unlock) என்பதைத் தட்டவும்.
- உங்கள் ஃபேஸ் அன்லாக்கை அமைக்க, agree என்பதைத் தட்டவும்.
- பதிவுச் செயல்முறையைத் தொடங்கு என்பதைத் தட்டவும்

இப்படி செய்து உங்கள் போனில் பேஸ் லாக் அம்சத்தை ஆக்டிவேட் செய்யலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
How to setup face unlock and locking security feature in your android smartphone
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X