இதெல்லாம் இலவசம் தான்., ஸ்டேட்டஸ் மாதிரி அடிக்கடி மாற்றலாம்- ஜியோ காலர் டியூன் சிம்பிள் டிப்ஸ்!

|

ஜியோ காலர் டியூன்கள் வைப்பதற்கான எளிய வழிமுறைகள் குறித்து பார்க்கலாம். ஜியோ சாவ்ன், மை ஜியோ ஆப் உள்ளிட்ட பல பயன்பாடுகள் மூலம் ஜியோ காலர் டியூன்களை செட் செய்யலாம். ரிலையன்ஸ் ஜியோ அதிக எண்ணிக்கையிலான சந்தாதாரர்களை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஜியோ தங்களது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை மலிவு விலையில் வழங்கி வருகிறது. தங்களை தொடர்பு கொள்ளும் நபர்களுக்கு ரிங் கேட்பதற்கு பதிலாக காலர் டியூன் கேட்கச் செய்யலாம். ஜியோ பல மொழிகளில் அழைப்பாளர் காலர் ட்யூன்களை செட் செய்யலாம்.

ஜியோ அழைப்பாளர் ட்யூன்

ஜியோ அழைப்பாளர் ட்யூன்

ஜியோ அழைப்பாளர் ட்யூனை அமைக்க பல வழிமுறைகள் உள்ளன. மைஜியோ ஆப், ஐபிஆர் அல்லது எஸ்எம்எஸ் மூலம் செட் செய்யலாம். பிற ஜியோ வாடிக்கையாளர்களிடம் இருந்து ஜியோ டியூனை காப்பி செய்தும் கொள்ளலாம். ஜியோ அழைப்பாளர் ட்யூனை அமைக்கும் அனைத்து வழிமுறைகளும் கீழே வழங்கப்பட்டுள்ளன. எப்படி காலர்டியூன் செட் செய்வது எப்படி நீக்குவது என்பது குறித்து பார்க்கலாம்.

மை ஜியோ ஆப் மூலம் ஜியோ காலர் ட்யூனை அமைப்பது எப்படி?

மை ஜியோ ஆப் மூலம் ஜியோ காலர் ட்யூனை அமைப்பது எப்படி?

ஜியோ தொடர்பான அனைத்து தகவல்களுக்கும் பிரதான தளமாக இருப்பது மைஜியோ ஆப்ஸ். ஜியோ காலர் ட்யூனை அமைப்பதற்கான எளிய வழிமுறைகள் இந்த ஆப்-ல் இருக்கிறது. மைஜியோ பயன்பாட்டை பயன்படுத்தி ஜியோ ட்யூனை செட் செய்யலாம்.

ஜியோ ட்யூன் அமைக்கும் வழிமுறைகள்

ஜியோ ட்யூன் அமைக்கும் வழிமுறைகள்

ஸ்டெப் 1: நீங்கள் பயன்படுத்தும் ஃபோனை பொறுத்து, கூகுள் ப்ளே தளத்தின் மூலம் மைஜியோ பயன்பாட்டை பதிவிறக்கம் செய்யலாம்.

ஸ்டெப் 2: பதிவிறக்கம் இன்ஸ்டால் முடிந்ததும் இணைப்பில் இருந்து ஜியோ டியூன்ஸ் செல்லலாம்.

ஸ்டெப் 3: தங்களுக்கு விருப்பமான பாடலை தேடி தேர்ந்தெடுக்கலாம்.

ஸ்டெப் 4: பின் 'Set as JioTune' என்ற பட்டனை கிளிக் செய்யலாம்.

ஸ்டெப் 5: தற்போது ஜியோ அழைப்பாளர் ட்யூனை தேர்ந்தெடுத்து செயல்படுத்தலாம்.
எஸ்எம்எஸ் மூலம் ஜியோ காலர் ட்யூனை அமைப்பது எப்படி என்பது குறித்து பார்க்கலாம்.

மை ஜியோ ஆப்

மை ஜியோ ஆப்

மை ஜியோ ஆப் அல்லது ஐவிஆர் இயங்குதளத்தை பயன்படுத்துவதோடு பயனர்கள் தங்கள் ஜியோ அழைப்பாளர் ட்யூனை எஸ்எம்எஸ் மூலம் செட் செய்யலாம். அழைப்பாளர் இசையை அமைக்க ஒரு மெசேஜை அனுப்ப வேண்டும். எஸ்எம்எஸ் மூலமாக அழைப்பாளர் ட்யூனை செட் செய்வதற்கான வழிமுறைகள்.

56789 என்ற எண்ணுக்கு பதிலளிக்கலாம்

56789 என்ற எண்ணுக்கு பதிலளிக்கலாம்

முதலில் பயனர்கள் அழைப்பாளர் ட்யூனை அமைக்க ஜியோ எண்ணில் பாடல்/படம்/ஆல்பத்தின் முதல் மூன்று வார்த்தைகளை 56789 என்ற எண்ணுக்கு SMS அனுப்ப வேண்டும். விரும்பும் பாடலை தங்கள் ஜியோ ட்யூனாக இதன்படி அமைத்துக் கொள்ளலாம்.

இந்த எஸ்எம்எஸ்-க்கு "JT" என 56789 என்ற எண்ணுக்கு பதிலளிக்க வேண்டும். தங்கள் ஜியோ போனில் அனுப்பப்பட்ட வழிமுறைகள் குறித்து பார்க்கலாம். நீங்கள் விரும்பும் பாடலை உறுதிப்படுத்தி உங்கள் ஜியோ டியூன் ஆக அமைக்கலாம்.

ஜியோசாவ்ன் மூலமாக ஜியோ காலர் ட்யூன்

ஜியோசாவ்ன் மூலமாக ஜியோ காலர் ட்யூன்

ஜியோசாவ்ன் மூலமாக ஜியோ காலர் ட்யூனை தேர்ந்தெடுத்து செட் செய்யலாம். இந்தியாவின் முன்னணி மியூசிக் ஸ்ட்ரீமிங் பயன்பாடுகளில் ஒன்றாக ஜியோசாவன் இருக்கிறது. ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் பயனர்கள் தங்கள் ஜியோ நெட்வொர்க்கில் ஜியோ டியூன்ஸ்களை அமைக்கலாம்.

முதலில் உங்கள் ஸ்மார்ட்போனை பொறுத்து கூகுள் ப்ளே மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இருந்து ஜியோ சாவ்ன் பயன்பாட்டை பதிவிறக்கம் செய்யலாம்.

தற்போது உங்கள் ஜியோ சாவன் கணக்கில் உள்நுழையவும், அதில் பாடலை ப்ளே செய்து தங்களுக்கு தேவையான பாடலை தேர்ந்தெடுத்து ஜியோ காலர் ட்யூனை அமைக்கலாம். இதில் பாடல் ப்ளே செய்யும் போது தேவையான வரிகள் மட்டுமே காண்பிக்கப்டும் அதை மட்டுமே கிளிக் செய்து கொள்ளலாம்.

பாடலை ப்ளே செய்ததும் அதில் செட் ஜியோ ட்யூன் என்பதை கிளிக் செய்து கொள்ளலாம். எஸ்எம்எஸ் மூலமாக ஜியோ பயனர்கள் தங்கள் ஜியோ டியூன்ஸ் பாடல் அமைக்கப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தலாம்.

ஜியோ காலர் டியூன் செட் செய்யும் பயனர்களுக்கு வரும் பிரதான கேள்விகளில் ஒன்று. ஜியோ காலர் டியூன் இலவசமா என்பது ஆகும்.

ஜியோ டியூன்ஸ் மற்றும் ஜியோ காலர் ட்யூன் மூலம் இலவசமாக காலர் ட்யூன்களை அமைத்துக் கொள்ளலாம். இதை அவர்கள் விரும்பும் போதெல்லாம் மாற்றிக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
How to Set Jio Caller Tune via Jiosaan, MyjioApp: Simple Tips

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X