வாட்ஸ்அப் நம்பர் சேவ் செய்யாமல் எப்படி மெசேஜ் செய்வது? WhatsAppன் அடுத்த மிரட்டல் அம்சங்கள் என்ன தெரியுமா?

|

உங்கள் வாட்ஸ் அப்பில் இருந்து நீங்கள் யாருக்கும் மெசேஜ் அனுப்ப வேண்டும் என்றால், முதலில் உங்களுடைய வாட்ஸ்அப் காண்டக்ட்டில் அவர்களின் வாட்ஸ்அப் எண் சேமிக்கப்பட்டிருப்பது அவசியம். வாட்ஸ்அப் எண்களை நமது காண்டக்ட்டில் சேமித்து வைக்காமல் வேறு ஒருவருக்கு மெசேஜ் செய்ய வழி எதுவும் உள்ளதா என்ற சிலரின் கேள்விக்கு நம்மிடம் இப்போது பதில் இருக்கிறது. ஆம், வாட்ஸ்அப் எண்களை சேவ் செய்யாமல் மெசேஜ் அனுப்ப ஒரு எளிய வழி உள்ளது. அதை எப்படிச் செய்வது என்று தெரிந்துகொள்ளலாம் வாங்க.

வாட்ஸ்அப் இல் மற்றவர்களுக்கு மெசேஜ் அனுப்ப இது கட்டாயம்

வாட்ஸ்அப் இல் மற்றவர்களுக்கு மெசேஜ் அனுப்ப இது கட்டாயம்

வாட்ஸ்அப் பற்றி நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு பொதுவான விஷயம் என்னவென்றால், வாட்ஸ்அப் மூலம் நாம் வேறு ஒருவருக்கு மெசேஜ் அனுப்ப வேண்டும் என்றால், முதலில் அவர்களின் நம்பரை உங்கள் போனில் சேவ் செய்வது என்பது கட்டாயம். அவர்களின் எண்களை நீங்கள் உங்கள் போனில் சேவ் செய்திருந்தால் மட்டுமே அதற்குப் பிறகு நீங்கள் அந்த நபரின் வாட்ஸ்அப் கணக்கிற்கு மேசேஜ் அனுப்ப முடியும். சில நேரங்களில் அந்த நபர் வாட்ஸ்அப் இல் கணக்கு வைத்திருக்கவில்லை என்றால், உங்களுக்கு அந்த நபரின் பெயர் வாட்ஸ்அப்பில் காட்டாது என்பதை மறக்கவேண்டாம்.

சிலரின் வாட்ஸ்அப் எண்களை சேவ் செய்ய விருப்பமில்லையா? ஆனாலும், மெசேஜ் செய்ய வேண்டுமா?

சிலரின் வாட்ஸ்அப் எண்களை சேவ் செய்ய விருப்பமில்லையா? ஆனாலும், மெசேஜ் செய்ய வேண்டுமா?

சிலரின் வாட்ஸ்அப் எண்களை சேவ் செய்ய விருப்பமில்லையா? ஆனாலும், மெசேஜ் செய்ய வேண்டிய சூழ்நிலையா? இதற்கு தேர்வு என்ன? நமது அன்றாட வாழ்க்கையில் சில நேரங்களில் சிலரின் எண்களை நாம் நமது போனில் சேவ் செய்ய விரும்புவதில்லை. இருப்பினும் அவசரத்திற்கு மெசேஜ் செய்ய நினைப்போம். இப்படியான நேரத்தில் அவர்களின் எண்களை சேவ் செய்யாமல் எப்படி வாட்ஸ்அப் மூலம் அவர்களுக்கு மெசேஜ் செய்வது என்பதைப் பற்றித் தான் இங்குப் பார்க்கப்போகிறோம்.

PF விதி மாற்றம்: உங்கள் EPF கணக்கில் கிடைக்கும் ரூ. 7 லட்சம் இலவச பலன்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா?PF விதி மாற்றம்: உங்கள் EPF கணக்கில் கிடைக்கும் ரூ. 7 லட்சம் இலவச பலன்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா?

இப்போது தேவைப்படாவிட்டாலும் நிச்சயம் பிற்காலத்தில் தேவைப்படும் டிப்ஸ் இது

இப்போது தேவைப்படாவிட்டாலும் நிச்சயம் பிற்காலத்தில் தேவைப்படும் டிப்ஸ் இது

இந்த ட்ரிக்ஸ் உங்களுக்கு இப்போது தேவைப்படாவிட்டாலும் நிச்சயம் வரும் காலத்தில் கட்டாயமாக எப்போதாவது தேவைப்படும். உதாரணத்திற்கு, ஷாப்பிங் கடைகளுக்குச் செல்லும் போதோ அல்லது ஒரு முறை பயனுக்காக ஒரு சிலரின் வாட்ஸ்அப் எண்களுக்கு ஏதேனும் தகவலைப் பகிர நினைக்கும் போது இந்த நிலைமையை நீங்கள் சந்தித்து இருப்பீர்கள். இதுபோன்ற நேரங்களில் அந்த நம்பரின் வாட்ஸ்அப் எண் நமக்கு முக்கியமானதாக இருப்பதில்லை. இருப்பினும் அதுபோன்ற எண்களுக்கு மெசேஜ் அனுப்ப வேண்டும் என்றால் அவர்களின் நம்பரை சேவ் செய்யாமல் எப்படி வாட்ஸ்அப்பில் மெசேஜ் அனுப்பலாம் என்று பார்க்கலாம்.

நம்பர் சேவ் செய்யாமல் வாட்ஸ்அப்பில் மெசேஜ் அனுப்ப இந்த வழிமுறையைப் பின்பற்றுங்கள்

நம்பர் சேவ் செய்யாமல் வாட்ஸ்அப்பில் மெசேஜ் அனுப்ப இந்த வழிமுறையைப் பின்பற்றுங்கள்

  • முதலில் நீங்கள் உங்கள் ஸ்மார்ட்போனில் இருக்கும் கூகிள் குரோம் அல்லது வேறு ஏதேனும் வெப் பிரௌசரை ஓபன் செய்ய வேண்டும்.
  • பிறகு உங்கள் பிரௌசரில் http://api.whatsapp.com/send?phone=xxxxxxxxxx என்ற இந்த லிங்கை ஓபன் செய்துகொள்ளுங்கள்.
  • xxxxxxxxxx என்ற இடத்தில் கவனமாக இந்த தகவலை என்டர் செய்ய வேண்டும்.
  • xxxxxxxxxx என்ற இடத்தில் நீங்கள் மெசேஜ் அனுப்ப விரும்பும் என்னை என்டர் செய்யுங்கள்.
  • உதாரணத்திற்கு எண் +91-9012345678 என்றிருந்தால் 919012345678 என்று டைப் செய்ய வேண்டும்.
  • உங்கள் போனில் டிஜிட்டல் ஆதாரை பதிவிறக்கம் செய்து சேமிப்பது எப்படி? இது கட்டாயம் தேவைப்படும்..உங்கள் போனில் டிஜிட்டல் ஆதாரை பதிவிறக்கம் செய்து சேமிப்பது எப்படி? இது கட்டாயம் தேவைப்படும்..

    இதை என்டர் செய்ய மறக்காதீர்கள்

    இதை என்டர் செய்ய மறக்காதீர்கள்

    • நீங்கள் இந்திய வாட்ஸ்அப் பயனர் என்றால் கட்டாயம் 91 என்ற எண்ணை நீங்கள் என்டர் செய்யும் போன் எண்ணிற்கு முன்னாள் சேர்க்க வேண்டும் என்பதை மறக்காதீர்கள்.
    • இப்போது எண்டர் அழுத்தவும்.
    • பின்னர் இறுதியாக இதை மட்டும் செய்தால் போதும் நீங்கள் நினைக்கும் நபருடன் மெசேஜ் செய்துகொள்ளலாம்.
    • உங்கள் ஸ்க்ரீனில் Continue to Chat என்று பச்சை நிற பட்டனை அழுத்தவும்.
    • தானாக வாட்ஸ்அப் திறக்கப்பட்டு, அந்த நம்பருக்கு மெசேஜ் அனுப்பும் பக்கத்திற்கு உங்களை அழைத்துச் செல்லும்.
    • இப்போது உங்கள் தகவலை டைப் செய்து மெசேஜ் அனுப்பலாம்.
    • வாட்ஸ்அப் இல் களமிறங்கும் அடுத்த மிரட்டல் அம்சங்கள் இது தான்

      வாட்ஸ்அப் இல் களமிறங்கும் அடுத்த மிரட்டல் அம்சங்கள் இது தான்

      வாட்ஸ்அப் பற்றிய சுவாரசியமான விஷயமே, வாட்ஸ்அப் தனது சேவையைத் தொடர்ந்து மேம்படுத்தி வருவது தான். மெட்டாவுக்கு சொந்தமான செய்திடல் தளமான வாட்ஸஅப், அதன் பயன்பாடு மற்றும் இணையப் பதிப்புகளைத் தொடர்ந்து மேம்படுத்திப் புதுப்பித்து வருவதை ஒரு பழக்கமாகவே வைத்துள்ளது. அதன்படி வாட்அப் தளத்தில் வரும் 2022 ஆம் ஆண்டில் அறிமுகமாகும் புத்தம் புதிய ஐந்து அம்சங்கள் பற்றிப் பார்க்கப் போகிறோம். கடந்த ஆண்டு வாட்ஸ்அப் டிஸ்அப்பியரிங் மெசேஜ் அம்சத்தை அறிமுகம் செய்தது.

      இனி ஸ்மார்ட்போன் டிஸ்பிளே உடையும் என்ற பயம் வேண்டாம்.. விஞ்ஞானிகளின் புதிய தீர்வு.. அல்ட்ராஹார்ட் கிளாஸ்..இனி ஸ்மார்ட்போன் டிஸ்பிளே உடையும் என்ற பயம் வேண்டாம்.. விஞ்ஞானிகளின் புதிய தீர்வு.. அல்ட்ராஹார்ட் கிளாஸ்..

      டிஸ்அப்பியரிங் மெசேஜ் அம்சத்தில் மாற்றம்

      டிஸ்அப்பியரிங் மெசேஜ் அம்சத்தில் மாற்றம்

      புதிய தகவலின் படி, இந்த அம்சத்திலும் மாற்றம் கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. வாட்ஸ்அப் கடந்த ஆண்டு மறைந்து போகும் டிஸ்அப்பியரிங் மெசேஜ்களை அறிமுகப்படுத்தியது. இந்த அம்சம் இயக்கப்பட்டால் சேட்டிங் பயன்பாட்டில் இருந்து மெசேஜ் தாமாகவே நீக்கப்படும். இந்த நிலையில் வாட்ஸ் அப் தாமாக மெசேஜ் மறையும் வசதி குறுகிய காலம் மட்டும் இருந்த நிலையில், தற்போது இந்த அம்சத்திற்கான காலக்கெடுவை 90 நாட்கள் அம்சத்தோடு வழங்கப்போகிறது எனத் தகவல்கள் தெரிவிக்கிறது.

      புதிய லாஸ்ட் சீன் அம்சம்

      புதிய லாஸ்ட் சீன் அம்சம்

      வாட்ஸஅப் பீட்டாவில் புதிய லாஸ்ட் சீன் அம்சத்தை நிறுவனம் அறிமுகம் செய்ய முயன்று வருகிறது. இந்த மேம்படுத்தப்பட்ட அம்சமானது மற்றவர்கள் அதாவது குறிப்பிட்ட நபர்களுக்கு மெசேஜ்கள் அனுப்பும் போது அவர்களின் லாஸ்ட் சீன் விபரத்தைக் குறிப்பிட்ட நபருக்கு மட்டும் மறைக்க அனுமதிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

      'ஓ மை காட்' தெரியாம வாட்ஸ்அப் சாட் டெலீட் செஞ்சுட்டேன்.. பீல் பண்ணாதீங்க ரீஸ்டோர் பண்ணிடலாம்.. எப்படி தெரியுமா'ஓ மை காட்' தெரியாம வாட்ஸ்அப் சாட் டெலீட் செஞ்சுட்டேன்.. பீல் பண்ணாதீங்க ரீஸ்டோர் பண்ணிடலாம்.. எப்படி தெரியுமா

      வாட்ஸ்அப் ஸ்டிக்கர் மேக்கர்

      வாட்ஸ்அப் ஸ்டிக்கர் மேக்கர்

      வாட்ஸ்அப் பயனர்களுக்கு சாட்டிங் செய்யும் போது, சாட்டிங்கை சுவாரஸ்யமானதாக மாற்ற ஸ்மைலி மற்றும் ஸ்டிக்கர்களை பயனர்கள் பயன்படுத்துகின்றனர். வாட்ஸ் அப் நிறுவனம் சில ஆண்டுகளுக்கு முன்னாள் வாட்ஸ் அப் ஸ்டிக்கர் சேவையை அறிமுகம் செய்தது. இதனைத் தொடர்ந்து பல விதமான ஸ்டிக்கர் பேக்கள் தொடர்ந்து அறிமுகம் செய்யப்பட்டது. இதில் பலர் உருவாக்கிய ஸ்டிக்கர் பேக்களும் பதிவிறக்கம் செய்யக் கிடைத்தது. இப்போது வாட்ஸ்அப் அதன் பயனர்களுக்கு இப்போது தங்களுக்குத் தேவையான ஸ்டிக்கர்களை தாங்களே உருவாக்க அனுமதிக்கிறது.

      வாட்ஸ்அப் கம்யூனிட்டிஸ் அம்சம்

      வாட்ஸ்அப் கம்யூனிட்டிஸ் அம்சம்

      வாட்ஸ்அப் கம்யூனிட்டிஸ் என்ற அம்சம் அறிமுகம் செய்வதைக் குறியாக வைத்துச் செயல்படுகிறது. இந்த அம்சம் சமூகத்தில் உள்ள சிறிய குழுக்களின் மீது அதிக கட்டுப்பாட்டை வழங்கும். பகிரக்கூடிய இணைப்பு மூலமாக கம்யூனிட்டியில் இணையப் பயனர்களை வாட்ஸ்அப்பில் சேர்க்கலாம். இந்த அம்சம் ஐஓஎஸ் அடிப்படையிலான செயலியில் விரைவில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

      கயிறுடன் கட்டி போடப்பட்ட 1000 ஆண்டு பழமையான மம்மி.. என்ன காரணம்? இந்த மம்மி யாராக இருக்கும்?கயிறுடன் கட்டி போடப்பட்ட 1000 ஆண்டு பழமையான மம்மி.. என்ன காரணம்? இந்த மம்மி யாராக இருக்கும்?

      வாட்ஸ்அப் மெசேஜ் ரியாக்ஷன்

      வாட்ஸ்அப் மெசேஜ் ரியாக்ஷன்

      இந்த அம்சமானது பெறப்படும் மெசேஜ்களுக்கு ஒவ்வொரு முறையும் டைப் செய்யாமல் இமோஜிகள் மூலம் பதிலளிக்க அனுமதிக்கும். மெட்டாவிற்கு சொந்தமான பேஸ்புக் மெசஞ்சர், இன்ஸ்டாகிராம் போன்ற பிற தளங்களில் இந்த அம்சம் முன்னதாகவே கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அம்சத்தை வாட்ஸ்அப் தளத்திலும் நிறுவனம் வரும் காலத்தில் அறிமுகம் செய்யுமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
How To Send WhatsApp Message Without Saving Their Number On Your Phone : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X