Home
News

போனில் இன்டர்நெட் இல்லையா? இனி கவலைப்படாதீங்க.. சுலபமாக UPI மூலம் பணம் அனுப்பலாம்.. எப்படி?

இந்தியாவில் யுபிஐ பேமெண்ட் (UPI payments) வசதியை அதிக மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக யுபிஐ செயலிகள் மூலம் சில வினாடிகளில் மற்றவர்களுக்குப் பணம் அனுப்ப முடிகிறது. இந்த யுபிஐ (UPI) வசதி இருப்பதால் ஏடிஎம், பேங்க் போன்ற இடங்களுக்கு மக்கள் அடிக்கடி செல்ல வேண்டிய அவசியம் இல்லாமல் போகிறது.

இருந்தபோதிலும் நெட்வொர்க் பிரச்சனை அவ்வப்போது வருவதால் ஆன்லைன் பேமெண்ட் தளங்களை பயன்படுத்துவதில் சிக்கல் ஏற்படுகிறது. இது சிலருக்கு மிகுந்த சிரமத்தை கொடுக்கிறது என்றே கூறலாம். குறிப்பாக இந்த நெட்வொர்க் சிக்கல் ஏற்படும் போது யுபிஐ மூலம் பணம் செலுத்துவதில் அதிக சிரமம் ஏற்படுகிறது. எனவே இதுபோன்ற நேரங்களில் யுபிஐ கட்டணங்களை ஆஃபலைனிலும் செய்ய முடியும்.

போனில் இன்டர்நெட் இல்லையா? சுலபமாக  UPI மூலம் பணம் அனுப்பலாம்..

சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது ஆஃப்லைனில் யுபிஐ மூலம் பரிவர்த்தனை (Offline UPI payments) செய்வது எப்படி என்று இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம். அதாவது நெட்வொர்க் வேகம் குறைந்தால் அல்லது நெட்வொர்க் வேலை செய்யாத சமயத்தில் இணைய வசதி இல்லாமல் யுபிஐ பரிவர்த்தனை செய்வதற்கான ஆப்ஷனை அரசாங்கம் வழங்கியுள்ளது. அதாவது USSD கோடை பயன்படுத்தி யுபிஐ பரிவர்த்தனை செய்ய முடியும்.

குறிப்பாக நேஷனல் பேமண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (National Payments Corporation of India) தான் இந்த சேவையைக் கொண்டுவந்தது. இதன் மூலம் எவ்வித இன்டர்நெட் இல்லாமல் பணப்பரிவர்த்தனை செய்ய முடியும். மேலும் இதில் பின் நம்பர் அமைப்பது, பேலன்ஸ் சரி பார்ப்பது உள்ளிட்ட சேவைகளையும் பெறமுடியும். இப்போது இன்டர்நெட் இல்லாமல் யுபிஐ மூலம் பணம் அனுப்புவது எப்படி என்று பார்க்கலாம்.

வழிமுறை-1: இந்த சேவையைப் பெற உங்கள் வங்கி கணக்குடன் இணைக்கப்பட்ட மொபைல் நம்பரை பயன்படுத்த வேண்டும். அதன்படி முதலில் *99# என்ற நம்பரை டயல் செய்து கொள்ளுங்கள். அடுத்து ஒரு ஆப்ஷன் வரும், அதில் பணம் அனுப்புதல், பணம் பெறுதல், பேலன்ஸ் சரி பார்த்தல், பின் நம்பர் அமைப்பது எனப் பல சேவைகள் காண்பிக்கப்படும்.

வழிமுறை-2: அடுத்து நீங்கள் பணம் அனுப்ப 1-ஐ டைப் செய்து Send என்பதை கிளிக் செய்யவும். அதன்பின்பு பணம் அனுப்பும் முறையைத் தேர்வு செய்ய வேண்டும். அதாவது மொபைல் நம்பர், யுபிஐ, அல்லது உங்கள் போனில் இருக்கும் கான்டெக்ட் விருப்பத்தை தேர்வு செய்து எவ்வளவு தொகை அனுப்ப வேண்டுமோ? அதை என்டர் செய்து Send பட்டனை கிளிக் செய்யுங்கள்.

போனில் இன்டர்நெட் இல்லையா? சுலபமாக  UPI மூலம் பணம் அனுப்பலாம்..

வழிமுறை-3: குறிப்பாக மொபைல் நம்பர் பயன்படுத்தி பணம் பரிமாற்றம் செய்வதை நீங்கள் தேர்வு செய்திருந்தால், பணம் பெறுபவர் யுபிஐ கணக்குடன் இணைக்கப்பட்ட மொபைல் நம்பரை வைத்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பின்பு எவ்வளவு தொகை அனுப்ப வேண்டுமோ அதை என்டர் செய்து Send பட்டனை கிளிக் செய்யவும். அதேபோல் இதில் நீங்கள் பணம் செலுத்துவதற்கு ஏதேனும் குறிப்புகளைக் கூட இணைத்து அனுப்பலாம். குறிப்பாக இந்த பரிவர்த்தனையை முடிப்பதற்கு யுபிஐ பின் நம்பரை என்டர் செய்ய வேண்டும் என்பதைக் கவனத்தில் கொள்க.

நெட்வொர்க் பிரச்சனை இருக்கும் சில அவசரக்காலங்களில் USSD கோடை பயன்படுத்தி யுபிஐ பரிவர்த்தனை செய்யலாம். குறிப்பாக இந்த வசதி அனைவருக்கும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

photo credit: indiatoday, tosshub.com

Best Mobiles in India

English summary
How to send money through UPI without internet: check details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X