வாட்ஸ்அப் நம்பர் Save செய்யாமல் எப்படி மெசேஜ் அனுப்புவது? சுலபமான டிப்ஸ்..

|

உங்கள் வாட்ஸ் அப்பில் இருந்து நீங்கள் யாருக்கும் மெசேஜ் அனுப்ப வேண்டும் என்றால், முதலில் உங்களுடைய வாட்ஸ்அப் காண்டக்ட்டில் அவர்களின் வாட்ஸ்அப் எண் சேமிக்கப்பட்டிருப்பது அவசியம். வாட்ஸ்அப் எண்களை நமது காண்டக்ட்டில் சேமித்து வைக்காமல் வேறு ஒருவருக்கு மெசேஜ் செய்ய வலி எதுவும் உள்ளதா என்ற சிலரின் கேள்விக்கு நிமிடம் பதில் இருக்கிறது. வாட்ஸ்அப் எண்களை சேவ் செய்யாமல் மெசேஜ் அனுப்ப ஒரு எளிய வழி உள்ளது. அதை எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் பார்க்கலாம்.

வாட்ஸ்அப் இல் மெசேஜ் செய்ய இது கட்டாயம்

வாட்ஸ்அப் இல் மெசேஜ் செய்ய இது கட்டாயம்

வாட்ஸ்அப் பற்றி நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு பொதுவான விஷயம் என்னவென்றால், வாட்ஸ்அப் மூலம் நாம் வேர் ஒருவருக்கு மெசேஜ் அனுப்ப வேண்டும் என்றால், முதலில் அவர்களின் நம்பரை சேவ் செய்வது என்பது கட்டாயம். அவர்களின் எண்களை நீங்கள் சேவ் செய்திருந்தால் மட்டுமே அதற்குப் பிறகு தான் நீங்கள் அந்த நபருக்கு மேசேஜ் அனுப்ப முடியும்.

சிலரின் வாட்ஸ்அப் எண்களை சேவ் செய்ய விரும்பமில்லையா? ஆனாலும் மெசேஜ் செய்ய வேண்டிய சூழ்நிலையா?

சிலரின் வாட்ஸ்அப் எண்களை சேவ் செய்ய விரும்பமில்லையா? ஆனாலும் மெசேஜ் செய்ய வேண்டிய சூழ்நிலையா?

ஆனால், சில நேரங்களில் சிலரின் எண்களை சேவ் செய்ய விரும்புவதில்லை. இருப்பினும் அவசரத்திற்கு மெசேஜ் செய்ய நினைப்போம்.

இப்படியான நேரத்தில் அவர்களின் எண்களை சேவ் செய்யாமல் எப்படி வாட்ஸ்அப் மூலம் அவர்களுக்கு மெசேஜ் செய்வது என்பதைப் பார்க்கலாம். இது இப்போது உங்களுக்கு தேவைப்படாவிட்டாலும் நிச்சயம் வரும் காலத்தில் கட்டாயமாக எப்போதாவது தேவைப்படும்.

SBI டெபிட் கார்டு பயனர்களுக்கு புது வசதி.. கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க நிச்சயம் யூஸ் ஆகும்..SBI டெபிட் கார்டு பயனர்களுக்கு புது வசதி.. கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க நிச்சயம் யூஸ் ஆகும்..

இந்த நிலமையில் இப்படி நீங்கள் மெசேஜ் செய்யலாம்

இந்த நிலமையில் இப்படி நீங்கள் மெசேஜ் செய்யலாம்

உதாரணத்துக்கு, ஷாப்பிங் கடைகளுக்குச் செல்லும் போதோ அல்லது ஒரு முறை பயனுக்காக ஒரு சிலரின் வாட்ஸ்அப் எண்களுக்கு ஏதேனும் தகவலை பகிர நினைக்கும் போது இந்த நிலைமையை நீங்கள் சந்தித்து இருப்பீர்கள். இதுபோன்ற நேரங்களில் அந்த நம்பரின் வாட்ஸ்அப் எண் நமக்கு முக்கியமானதாக இருப்பதில்லை.

இருப்பினும் அதுபோன்ற எண்களுக்கு மெசேஜ் அனுப்ப வேண்டும் என்றால் அவர்களின் நம்பரை சேவ் செய்யாமல் எப்படி வாட்ஸ்அப்பில் மெசேஜ் அனுப்பலாம் என்று பார்க்கலாம்.

நம்பர் சேவ் செய்யாமல் வாட்ஸ்அப்பில் மெசேஜ் செய்ய இந்த செயல்முறையை பின்பற்றுங்கள்

நம்பர் சேவ் செய்யாமல் வாட்ஸ்அப்பில் மெசேஜ் செய்ய இந்த செயல்முறையை பின்பற்றுங்கள்

  • முதலில் நீங்கள் உங்கள் ஸ்மார்ட்போனில் இருக்கும் கூகிள் குரோம் அல்லது வேறு ஏதேனும் வெப் பிரௌசரை ஓபன் செய்ய வேண்டும்.
  • பிறகு உங்கள் பிரௌசரில் http://api.whatsapp.com/send?phone=xxxxxxxxxx என்ற இந்த லிங்கை ஓபன் செய்துகொள்ளுங்கள்.
  • கண்ணா ஒரே போனில் 2 WhatsApp கணக்கு பயன்படுத்த ஆசையா? கஷ்டம் இல்லாமல் ஈஸியா யூஸ் பண்ணலாம்.. இதோ.!கண்ணா ஒரே போனில் 2 WhatsApp கணக்கு பயன்படுத்த ஆசையா? கஷ்டம் இல்லாமல் ஈஸியா யூஸ் பண்ணலாம்.. இதோ.!

    xxxxxxxxxx என்ற இடத்தில் இதை என்டர் செய்ய வேண்டும்

    xxxxxxxxxx என்ற இடத்தில் இதை என்டர் செய்ய வேண்டும்

    • xxxxxxxxxx என்ற இடத்தில் நீங்கள் மெசேஜ் அனுப்ப விரும்பும் என்னை என்டர் செய்யுங்கள்.
    • உதாரணத்திற்கு எண் +91-9012345678 என்றிருந்தால் 919012345678 என்று டைப் செய்யவும்.
    • இப்போது எண்டர் அழுத்தவும்.
    • இறுதியாக இதை மட்டும் செய்தால் போதும்

      இறுதியாக இதை மட்டும் செய்தால் போதும்

      • ஸ்க்ரீனில் Continue to Chat என்று பச்சை நிற பட்டன் இருக்கும். அதை அழுத்தவும்.
      • தானாக வாட்ஸ் அப் திறந்து அந்த நம்பருக்கு மெசேஜ் அனுப்பும் பக்கத்திற்குச் செல்லும்.
      • WhatsAppNumber என்பதற்குப் பதில் நம்பர் டைப் செய்து மெசேஜ் அனுப்பலாம்.

Best Mobiles in India

English summary
How to Send Messages to Unsaved Number Without Adding Contact Into Your Phone : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X