Home
News

HD தரத்தில் வாட்ஸ்அப் இல் போட்டோஸ் அனுப்பலாமா? எப்படி இந்த புது அம்சத்தை யூஸ் செய்வது?

வாட்ஸ்அப் இப்போது புதிதாக அதன் பயனர்களுக்கு எச்டி தரத்தில் (HD quality) புகைப்படங்களை அனுப்பும் புது அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. இது உண்மையில் வாட்ஸ்அப் பயனர்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும் ஒரு சூப்பர் அம்சமாகும். ஏன் என்ன விபரத்தை விரிவாக பார்க்கலாம்.

மேட்டாவுக்கு (Meta) சொந்தமான இன்ஸ்டன்ட் மெசேஜ்ஜிங் ஆப்ஸ் தளமான வாட்ஸ்அப் (WhatsApp) இந்த ஆண்டு பல புதிய அம்சங்களை தொடர்ந்து அறிமுகம் செய்து வருகிறது. அந்த வரிசையில், வாட்ஸ்அவ் நிறுவனம் தற்போது புது எச்டி போட்டோஸ் (HD Photos) அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது.

HD தரத்தில் வாட்ஸ்அப் இல் போட்டோஸ் அனுப்பலாமா? எப்படி?

இதன் பெயர் குறிப்பிடுவது போல, இந்த புதிய எச்டி போட்டோஸ் அம்சத்தை அறிமுகப்படுத்தியதன் மூலம், வாட்ஸ்அப் (WhatsApp) அதன் பயனர்களுக்கு, தங்கள் காண்டக்ட்டில் இருக்கும் நபர்களுக்கு HD புகைப்படங்களை அனுப்ப முடியும் என்று கூறியுள்ளது. இது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அம்சங்களில் ஒன்றாகும்.

இதுவரை, வாட்ஸ்அப் மெசேஜிங் பிளாட்ஃபார்ம் மூலம் அனுப்பப்படும் புகைப்படங்கள் அனைத்துமே காம்ப்பிரஸ் செய்யப்பட்டு, கம்மி சைஸில் சுருக்கி அனுப்பப்பட்டு வந்தது. இதனால், பயனர்கள் வாட்ஸ்அப் மூலம் அனுப்பும் புகைப்படங்களில் சிறிய குவாலிட்டி குறைவு எழுந்தது. இது பல நேரங்களில் சிக்கலாக முடிந்தது. HD கேமராவில் எடுக்கப்பட்ட போட்டோக்களை வாட்ஸ்அப் மூலம் பகிரும்போது, குவாலிட்டி லாஸ் (Quality loss) எழுகிறது.

ஆனால், புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியதன் மூலம், வாட்ஸ்அப் அதன் பயனர்களுக்கு எச்டி தரத்தில் புகைப்படங்களைப் பகிரும் விருப்பத்தை வழங்குகிறது. இந்த அம்சம் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டுள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். ஆனால், இதன் வெளியீடு இன்னும் அறிவிக்கப்படவில்லை. இது விரைவில் எல்லோருக்கும் கிடைக்கப்பெறும்.

அதாவது எச்டி தர விருப்பத்தை உங்களால் பார்க்க முடியவில்லை என்றால், நீங்கள் இன்னும் சிறிது காலம் காத்திருக்க வேண்டும். ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் பயனர்கள் இருவருக்கும் இந்த HD தர புகைப்பட அம்சம் விரைவில் கிடைக்கும் என்று நிறுவனம் கூறியுள்ளது. இந்த அம்சத்துடன் அப்டேட் வெளியிடப்பட்டவுடன் பயனர்கள் பிளே ஸ்டோருக்குச் சென்று வாட்ஸ்அப் பயன்பாட்டை அப்டேட் செய்ய வேண்டும்.

"வாட்ஸ்அப் எச்டி போட்டோஸ்" அம்சம் அடுத்த சில வாரங்களில் உலகளவில் வெளிவரும் என்று நிறுவனம் கூறியுள்ளது. எனவே, இந்த புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியதன் மூலம், வாட்ஸ்அப் பயனர்கள் புகைப்படங்களைப் பகிர இரண்டு விருப்பங்களைப் பெறுவார்கள் - ஸ்டாண்டர்ட் மற்றும் எச்டி (HD) தரம் என்று இரண்டு விருப்பங்கள் உங்களுக்கு கொடுக்கப்படும்.

இந்த அம்சத்தை அறிமுகப்படுத்திய வாட்ஸ்அப், "WhatsApp மூலம் புகைப்படங்களைப் பகிர்வது வேகமாகவும் நம்பகத்தன்மையுடனும் இருப்பதை உறுதி செய்வதற்காக, நிலையான தரம் தொடர்ந்து புகைப்படங்கள் அனுப்பப்படும் இயல்புநிலை விருப்பமாக இருக்கும்" என்று கூறியுள்ளது.அதேபோல், இதற்கு அடுத்தபடியாக விரைவில் எச்டி வீடியோஸ் அம்சங்களையும் கொண்டு வர இருப்பதாக வாட்ஸ்அப் உறுதி செய்துள்ளது.

சரி, இப்போது முதலில் எப்படி வாட்ஸ்அப் இல் இருந்து உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு HD தர புகைப்படங்களை அனுப்புவது என்று பார்க்கலாம் வாங்க.

1. இந்த வாட்ஸ்அப் அம்சம் வெளியிடப்பட்டதும், நீங்கள் முதலில் கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோர் மூலம் WhatsApp ஐ அப்டேட் செய்ய வேண்டும்.

2: நீங்கள் எச்டி புகைப்படங்களைப் பகிர விரும்பும் WhatsApp சாட் பாக்ஸை ஓபன் செய்துக்கொள்ளவும்.

3: பேப்பர் கிளிப் போன்ற லிங்க் ஐகானை கிளிக் செய்யவும். இப்போது போட்டோஸ் கிளிக் செய்தவுடன் நீங்கள் இரண்டு விருப்பங்களைக் காண்பீர்கள் .

4. இதில் ஒன்று ஸ்டாண்டர்ட் (Standard) மற்றும் எச்டி (HD) என்ற 2 விருப்பங்களை காண்பிக்கும்.

5. HD தர புகைப்படங்களை அனுப்ப, இரண்டாவது விருப்பத்தை கிளிக் செய்யவும். - HD தரம் (2000x3000) பிக்சல் வரை செயல்படும்.

6: சென்ட் (Send) என்பதைக் கிளிக் செய்யவும், உங்கள் தொடர்புக்கு HD தரத்தில் புகைப்படம் அனுப்பப்படும்.

இந்த முறையை பின்பற்றி நீங்கள் வாட்ஸ்அப் மூலம் எச்டி தரத்தில் புகைப்படங்களை அனுப்பலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
How to send HD quality photos on WhatsApp try this news update 2023
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X