அனானிமஸ் இ-மெயில்!
இ-மெயிலில் அனுப்புவது மூலம் நண்பர்களை ஆச்சர்ப்படுத்த முடியுமா? நண்பர்களுடன் சில குறும்பத்தனமான விளையாட்டு்க்களை மேற்கொள்ள சென்டு-இமெயில்.ஆர்க் மூலம் ஒரு வித்தியாசமான வழியினை பெறலாம் என்கிறது தகவல்கள்.
இந்த வலைத்தளத்தில் இருந்து நண்பர்களுக்கு இ-மெயில் செய்தால், யார் பெயரில் இருந்து இ-மெயில் வருகிறது என்பதை கண்டுபிடிக்க முடியாது என்று பல தகவல்கள் வெளியாகி உள்ளது.
உதாரணத்திற்கு நண்பர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்ல வேண்டும். ஆனால் நண்பர்களை ஆச்சர்யப்படுத்துவதற்காக நீங்கள் யார் என்று காட்டி கொள்ள விரும்பவில்லை என்றால், சென்டு-இமெயில்.ஆர்க் மூலம் உங்கள் பதில்களை மெயில் செய்யமுடியும்.
சென்டு-இமெயில்.ஆர்க் என்ற வலைத்தத்தின் உள்ளே, பிரத்தியேகமாக இ-மெயில் பக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
இதில் என்ன தகவலை டைப் செய்ய வேண்டுமோ அதை டைப் செய்ய வேண்டும். அதன் பிறகு யாருக்கு அனுப்ப வேண்டுமோ அவரது மெயில் ஐடியை டைப் செய்யவும்.
அதன் பின்னர் கீழே கொடுக்கப்பட்டிருக்கும், ரகசிய கோடை சரியாக டைப் செய்ய வேண்டும்.
பின் சென்டு மெசேஜ் என்ற ஆப்ஷனை அழுத்தவும். இப்படி செய்வதனால், யாரிடம் இருந்து மெயில் வந்துள்ளது என்ற பெயர் ஏதும் இருக்காது. ஆனால் சொல்ல வேண்டிய தகவல் மட்டும் குறிப்பிட்ட நபருக்கு சென்றிருக்கும்.
இந்த வசதியை நண்பர்களை ஆச்சர்யப்படுத்துவது போன்ற விஷயத்திற்காக உருவாக்கப்பட்டதாக இருக்கலாம். ஆனால் இதை தவறான முறையில் பயன்படுத்திவிட கூடாது.


Click it and Unblock the Notifications