Airtel Thanks App மூலம் வீட்டிலிருந்தே கொரோனா சுய மதிப்பீடு செய்து பிறருக்கும் உதவுங்கள்!

|

நம்முடைய வாழ்வில் இப்படி ஒரு நாள் வரும் என்று யாரும் எதிர்பார்த்திருக்கமாட்டோம், கண்ணிற்குத் தெரியாத வைரஸ் நம் அனைவருக்கும் உயிர் அச்சத்தைக் காட்டி அனைவரையும் 21 நாட்கள் வீட்டிற்குள் முடக்கிவிடும் என்று நாம் கனவில் கூட நினைத்திருக்க மாட்டோம். ஊரடங்கு இதுவரை எப்படிப் போகிறது என்ற கேள்விக்கான பதில், அனைவரின் பொழுதும் ஸ்மார்ட்போனில் தான் போகிறது என்பதாகவே இருக்கக்கூடும்.

இக்கட்டான நேரத்தில் உதவும் தொழில்நுட்பம்

இக்கட்டான நேரத்தில் உதவும் தொழில்நுட்பம்

வீட்டிற்குள் அடைந்திருக்கும் மக்களின் பொழுது பெரும்பாலும் தொலைப்பேசி அழைப்புகள், வீடியோ அழைப்புகள், நாள் முழுவதும் நெட்ஃபிலிக்ஸ் மற்றும் சில கூடுதல் மணிநேர தூக்கம் போன்றவற்றால் மெல்ல நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்த நாட்கள் உங்களை உங்கள் நண்பர்களிடமிருந்தும், சிலருக்கு குடும்பத்தினரிடமிருந்தும் தனிமை அடைந்து விலகச் செய்திருக்கும். ஆனாலும், ​​இப்படியான நேரத்தில் தான் தொழில்நுட்பம் உண்மையில் பல விஷயங்களை எளிதாக்கியுள்ளது.

வீட்டை விட்டு வெளியில் செல்லாமல் உதவி செய்யலாம்

வீட்டை விட்டு வெளியில் செல்லாமல் உதவி செய்யலாம்

இப்படி தொழில்நுட்பத்தின் எளிமையான வசதிகளை இன்னும் அறிந்து சரியாகப் பயன்படுத்த முடியாதவர்களும் நம்மைச் சுற்றியுள்ளனர். உங்கள் வீட்டு உதவியாளர், செக்யூரிட்டி, டிரைவர் அல்லது உங்கள் அருகிலுள்ள முதியவர்கள் கூட இந்த நிலையில் சிக்கி இருக்கலாம்.இவர்கள்தான் இன்னும் பெரும்பாலான தேவைகளுக்காகக் கடைகளை நம்பியிருக்கிறார்கள். வீட்டை விட்டு வெளியில் செல்லாமல் இவர்களின் வாழ்க்கையில் உள்ள சிரமங்களை எவ்வாறு எளிதாகவும், பாதுகாப்பாகவும் மாற்றலாம் என்பதைப் பார்ப்போம்.

அடுத்த 3 மாதத்திற்கு இதான் விலை: ரீசார்ஜ் விலை குறித்து தொலைத் தொடர்பு நிறுவனங்கள் அதிரடி அறிவிப்பு!அடுத்த 3 மாதத்திற்கு இதான் விலை: ரீசார்ஜ் விலை குறித்து தொலைத் தொடர்பு நிறுவனங்கள் அதிரடி அறிவிப்பு!

உங்களுக்கு தெரிந்தவற்றை பிறருக்கு கற்றுக்கொடுங்கள்

உங்களுக்கு தெரிந்தவற்றை பிறருக்கு கற்றுக்கொடுங்கள்

ஸ்மார்ட்போன்களை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை அவர்களுக்குக் கற்றுக் கொடுங்கள்
ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதில் எல்லோரும் உங்களைப் போல ஜீனியஸ் அல்ல, எனவே வீடியோ அழைப்பை எவ்வாறு செய்வது, YouTube இன் விருப்பங்களை எப்படிப் பயன்படுத்துவது அல்லது புதிய அப்டேட்களை சமூக ஊடகம் வழியாக எப்படிப் பயன்படுத்துவது என்று அவர்களுக்குக் கற்பித்து உதவுங்கள். இது அனைத்தையும் செய்து முடிக்க ஒரு தொலைப்பேசி அழைப்பு மட்டும் போதுமானது. நீங்கள் வெளியில் செல்ல வேண்டும் என்பது அவசியம் அல்ல.

ஆன்லைன் ரீசார்ஜ்களுடன் அவர்களுக்கு உதவுங்கள்

ஆன்லைன் ரீசார்ஜ்களுடன் அவர்களுக்கு உதவுங்கள்

ரீசார்ஜ் செய்வது என்பது எளிதான பணியாக நமக்குத் தோன்றலாம், ஆனால் பலருக்கும் இது அப்படியில்லை. இன்னும் சிலர் பியூச்சர் போனை பயன்படுத்துகிறார்கள், அவர்களுக்கு Airtel Thanks App போன்ற பயன்பாடுகளை எவ்வாறு பயன்படுத்துவது என்று தெரியாது. எனவே, அவர்களுக்குத் தேவைப்படும் ரீசார்ஜ் உதவியைச் செய்வதன் மூலமோ அல்லது அதை எப்படி செய்வது என்று அவர்களுக்குக் கற்பிப்பதன் மூலமோ நீங்கள் அவர்களுக்கு உதவலாம்.

Jio வழங்கும் 2 ஜிபி இலவச டேட்டாவை பெறுவது எப்படி?Jio வழங்கும் 2 ஜிபி இலவச டேட்டாவை பெறுவது எப்படி?

Airtel Thanks App மூலம் இது அனைத்தும் மிக எளிது

Airtel Thanks App மூலம் இது அனைத்தும் மிக எளிது

Airtel Thanks App மூலம் தொலைபேசி இணைப்பு, டி.டி.எச், டேட்டா கார்டு, போஸ்ட்பெய்ட் பில், மின்சாரம் மற்றும் நீர் பில் மற்றும் காப்பீட்டு பிரீமியம் போன்ற அனைத்துவிதமான சேவைகளுக்கும் நீங்கள் இந்த பயன்பாட்டிலிருந்து ரீசார்ஜ் செய்து கட்டணத்தைச் செலுத்திக்கொள்ளலாம். இதில் UPI இயக்கப்பட்டிருப்பதால், உங்கள் அனைத்துவித டிஜிட்டல் பரிவர்த்தனை கட்டணங்களுக்கும் ஏர்டெல் முற்றிலும் பாதுகாப்பான சேவையை வழங்குகிறது. உங்கள் வீட்டிலிருந்து வெளியேற முடியாத நேரங்களில் இது பெரிதும் உதவக்கூடும்.

கோவிட் -19 பற்றி மற்றவர்களுக்குக் கற்றுக்கொடுங்கள்

தொற்றுநோயை வெல்வதற்கான சிறந்த வழி தகவல் மற்றும் அதைப் பற்றி மேலும் மக்களுக்குத் தெரியப்படுத்துவது தான். இதைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது எப்படி? இது எவ்வாறு பரவுகிறது, அதை எவ்வாறு தவிர்ப்பது, சுகாதாரத்தின் அடிப்படை விதிகள் என்ன? என்று சரியாக நீங்களும் அறிந்துகொண்டு மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.

நம்பகத்தனமான செய்திகளை மட்டும் நம்புங்கள்

நம்பகத்தனமான செய்திகளை மட்டும் நம்புங்கள்

இணையத்தில் சரியான தகவல்களை எவ்வாறு அணுகுவது என்பது பற்றி மற்றவர்களுக்கு நீங்கள் கற்றுக்கொடுங்கள். போலியான தகவல்கள் மற்றும் நம்பகத்தன்மை இல்லாத செய்திகளை கண்டு பயப்பட வேண்டாம் என்பதையும் தெரியப்படுத்துங்கள். முக்கியமாகவாட்ஸ்அப் செய்திகளின் நம்பகத்தன்மையைச் சரிபார்க்காமல் கண்மூடித்தனமாக ஃபார்வர்டு செய்ய வேண்டாம் என்றும் கற்றுக்கொடுங்கள்.

இருமடங்கு டேட்டா வழங்குவதாக ஜியோ நிறுவனம் அறிவிப்பு.! மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்.!இருமடங்கு டேட்டா வழங்குவதாக ஜியோ நிறுவனம் அறிவிப்பு.! மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்.!

24 | 7 மணிநேர கொரோனா வைரஸ் ரிஸ்க் ஸ்கேன்

24 | 7 மணிநேர கொரோனா வைரஸ் ரிஸ்க் ஸ்கேன்

உங்கள் அபாயத்தை மதிப்பிடுவதற்கும், மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும், ஏர்டெல் அப்பல்லோ உடன் கூட்டு சேர்ந்து 24 | 7 மணிநேர கொரோனா வைரஸ் ரிஸ்க் ஸ்கேன் முறையை இந்த Airtel Thanks அப் இல் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஐ ரோபோட் உங்கள் வயது, பாலினம், உடல் வெப்பநிலை, பயண வரலாறு போன்ற எட்டு எளிய கேள்விகளைக் கேட்கிறது, மேலும் கொரோனா வைரஸைப் பெறுவதற்கான உங்கள் அபாயங்களை மதிப்பிடுகிறது.

7.3 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பயனடைந்த கொரோனா வைரஸ் ரிஸ்க் ஸ்கேன்

7.3 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பயனடைந்த கொரோனா வைரஸ் ரிஸ்க் ஸ்கேன்

பரவுவதைத் தவிர்க்கவும் பாதுகாப்பாக இருக்கவும் சில பயனுள்ள உதவிக்குறிப்புகளை இந்த AI உங்களுக்குப் பரிந்துரைக்கிறது. உலகெங்கிலும் உள்ள 7.3 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இந்த Airtel Thanks App பயன்பாட்டிலிருக்கும் கொரோனா வைரஸ் ரிஸ்க் ஸ்கேன் முறையைப் பயன்படுத்திப் பயனடைந்துள்ளனர். இவர்களைப் போல் நீங்களும் இதைப் பயன்படுத்தி உங்கள் அன்பானவர் மற்றும் மற்றவர்களுக்கும் இதைப் பற்றிச் தெரியப்படுத்தி, அவர்களின் அறிகுறிகளையும் சுய மதிப்பீடு செய்ய வழி செய்து கொடுங்கள்.

இந்த நம்பிக்கையான செய்தியை ஷேர் செய்யுங்கள்

இந்த நம்பிக்கையான செய்தியை ஷேர் செய்யுங்கள்

இப்போது இது எளிதல்லவா? எனவே, உங்கள் அறையை விட்டு வெளியேறாமல் ஒரு ஹீரோவாக இருங்கள். தொழில்நுட்பத்தின் உதவி இப்பொழுது பயன்படாவிடில் வேறு எப்பொழுது? முடிந்தவரை இத்தகவலை ஷேர் செய்யுங்கள்.

Best Mobiles in India

English summary
How To Self-Quarantine And Help Others 101 : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X