சிறந்த லேப்டாப் வாங்க சூப்பர் டிப்ஸ்!

Posted By: Staff
சிறந்த லேப்டாப் வாங்க சூப்பர் டிப்ஸ்!

வேலையை பொருத்த வரை கம்ப்யூட்டர் தான் எல்லாம் என்றாகிவிட்டது. இதனால் சிறந்த லேப்டாப்பினை எப்படி வாங்குவது என்பதற்கு சில முக்கிய வழிமுறைகளை பார்க்கலாம்.

எந்த ஒரு லேப்டாப் வாங்குவதற்கு முன்பும், சிறந்த பிராசஸர் வசதியினை அந்த லேப்டாப் கொண்டிருக்கிறதா? என்பதை பார்ப்பது அவசியமாகிறது. லேப்டாப்பின் பிராசஸரை பொருத்து தான், அதன் பயன்பாடுகளும் இருக்கும்.

இதனால் பிராசஸருக்கு முக்கியத்துவம் கொடுப்பது நல்லது. அதன் பிறகு நோட்புக், அல்ட்ராபோர்டபில், ஆல் பர்பஸ் மற்றும் டெஸ்க்டாப் ரீப்ளேஸ்மென்ட் என்று லேப்டாப்களை நாலு வகையின் அடிப்படையில் பிரிக்கலாம். இதில் எதன் அடிப்படையில் உள்ள லேப்டாப்பினை வாங்குகிறோம் என்பதை பார்க்க வேண்டும்.

உதாரணத்திற்கு குழந்தைகளின் தேவைக்காக லேப்டாப் வாங்கிறோமா? பெரியவர்களின் தேவைக்காகவா? என்பதை தீர்மானித்து கொள்வது அவசியம். குழந்தைகளின் தேவை என்றால் அதிகம் விளையாட்டுகளை டவுன்லோட் செய்வது போல இருக்கும். இப்படி பயன்படுத்துபவர்களின் உபயோகத்தினை முதலில் யூகித்து கொள்ள வேண்டும்.

வர்த்தகத்தின் (பிசினஸ்) தேவைக்கு அதிகம் பயன்படத்துவதாக இருந்தால், இதற்கு பிரத்தியேகமாக நிறைய தொழில் நுட்ப வசதிகளுக்கு சப்போர்ட் செய்யும் லேப்டாப்பினை தேர்வு செய்யலாம்.

தறமான லேப்டாப்பினை வழங்கும் நிறுவனத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பது அவசியம். இது பற்றிய தகவல்களை வலைத்தளங்களில் எளிதாக படித்து தெரிந்து கொள்ள முடியும்.

ரீசேல் பற்றிய விவரத்தினையும் கருத்தில் கொள்ள வேண்டும். சில லேப்டாப்கள் வாங்கும் போது அதிக விலை கொண்டதாகவும், விற்கும் போது குறைவான விலை கொண்டதாகவும் இருக்கும். இதனால் ரீசேல் மதிப்பினை கவனத்தில் கொள்ள வேண்டும்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot