இப்படி ஒரு அம்சம் நம்ம Mobile போன்ல இருக்கா? WhatsApp யூசர்ஸ் கண்டிப்பா தெரிஞ்சுக்கணும்.!
இந்த காலத்தில் எப்படி ஸ்மார்ட்போன் (Smartphone) இல்லாதவரைக் காண்பது அரிதோ.. அதேபோல், ஸ்மார்ட்போன் பயனர்களின் போனில் வாட்ஸ்அப் (WhatsApp) இல்லாமல் இருப்பதைப் பார்ப்பது மிகவும் அரிதானது.
பெரும்பாலும், ஸ்மார்ட்போன் பயனர்கள் ஒரு மொபைல் போனை (Mobile phone) புதிதாக வாங்கியவுடன் அவர்கள் இன்ஸ்டால் செய்யும் முதல் ஆப்ஸ் ஆக வாட்ஸ்அப் இருக்கிறது என்பதே மறுக்கமுடியாத உண்மையாகும். இப்படி பல கோடி மக்கள் பயன்படுத்தும் வாட்ஸ்அப் இல் ஏராளமான அம்சங்கள் கொட்டிக்கிடக்கிறது. அப்படி கிடைக்கும் அம்சங்களில் மிகவும் முக்கியமான அம்சம் தான் டெலீட் மெசேஜ்ஐஸ் அம்சம்.

WhatsApp டெலீட் மெசேஜ் அம்சத்தை யூஸ் பண்றீங்களா? அப்போ இதை தெரிஞ்சுக்கோங்க.!
உங்கள் வாட்ஸ்அப் காண்டக்ட்டில் (WhatsApp Contact) இருக்கும் யாரேனும் ஒரு நபருக்குத் தவறுதலாக ஏதேனும் ஒரு டெக்ஸ்ட் மெசேஜ் (WhatsApp Text Message), வாய்ஸ் நோட் மெசேஜ் (WhatsApp Voice Note Message), போட்டோ மெசேஜ் (WhatsApp Photo Message) அல்லது வீடியோ மெசேஜ்ஜை (WhatsApp Video Message) நீங்கள் கை தவறி அனுப்பிவிட்டீர்கள் என்றால், அதனை சாட் பாக்சில் (WhatsApp Chat Box) இருந்து டெலீட் செய்ய அனுமதிக்கும் ஒரு சூப்பர் அம்சம் தான் இந்த வாட்ஸ்அப் டெலீட் மெசேஜ் (WhatsApp Delete Messages) அம்சம்.
இந்த அம்சத்தில் 2 விருப்பங்கள் உள்ளது. இதில் டெலீட் ஃபார் எவ்ரிஒன் (Delete For Everyone) மற்றும் டெலீட் ஃபார் மீ (Delete For Me) என்ற அம்சங்கள் இப்போது பயன்படுத்தக் கிடைக்கிறது. இதில் டெலீட் ஃபார் எவ்ரிஒன் அம்சம், சாட் பாக்சில் உள்ள மெசேஜ்களை அனுப்புனர் (Sender) மற்றும் பெறுநர் (Reciver) ஆகிய இருவருக்கும் டெலீட் (Delete) செய்துவிட உதவுகிறது. அதேபோல், டெலீட் ஃபார் மீ அம்சம், அந்த நபரின் சாட் பாக்சில் (Chat box) இருந்து மட்டும் அந்த மெசேஜ்ஜை டெலீட் (WhatsApp message delete) செய்ய அனுமதிக்கிறது.

வாட்ஸ்அப் இல் இருந்து டெலீட் செய்யப்பட்ட மெசேஜ்களை மீண்டும் படிக்கலாமா? பார்க்கலாமா?
இப்படி சாட்டில் இருந்து டெலீட் செய்யப்பட்ட மெசேஜ்களை ஒருவரி டெலீட் செய்துவிட்டால், அவற்றை மீண்டும் பார்க்க முடியாது. டெலீட் செய்யப்பட்ட மெசேஜ்ஜில் என்ன தகவல் இருந்தது என்பதை அறிந்துகொள்ள வாட்ஸ்அப் உங்களை அனுமதிக்காது. இருப்பினும், உங்கள் வாட்ஸ்அப் சாட்டில் இருந்து ஏதேனும் மெசேஜ் டெலீட் செய்யப்பட்டால், அதில் என்ன இருந்தது என்பதை தெரிந்துகொள்ள உங்களுக்கு ஆர்வம் இருந்தால், அவற்றை மீண்டும் பார்க்க வழியுள்ளது.
இதற்காக, நீங்கள் தெர்ட் பார்ட்டி ஆப்ஸ்களை (3rd party mobile apps) பயன்படுத்தலாம் என்று எல்லோரும் சொல்வார்கள். ஆனால், இங்கு நாங்கள் அதைப் பற்றி பேசப்போவதில்லை. இதற்கு மாறாக, நீங்கள் உங்கள் போனில் இருக்கும் ஒரு அம்சத்தை வைத்தே, வாட்ஸ்அப் சாட்டில் இருந்து டெலீட் செய்யப்பட்ட மெசேஜ்களை மீண்டும் படிக்கலாம் (How to see deleted messages from WhatsApp) என்பதைப் பற்றித் தான் இங்குச் சொல்லித்தரப் போகிறோம். அது எப்படி? இதற்காக நாம் என்ன அம்சத்தைப் பயன்படுத்த வேண்டும் என்பதைப் பற்றிப் பார்க்கலாம்.

எந்த ஆப்ஸும் இல்லாமல் டெலீட் செய்யப்பட்ட வாட்ஸ்அப் மெசேஜ்களை எப்படி பார்ப்பது?
டெலீட் செய்யப்பட்ட மெசேஜ்களைப் மீண்டும் படிக்க அனுமதிக்கும் அம்சத்தை வாட்ஸ்அப் தனது தளத்தில் கொண்டிருக்கவில்லை. இருப்பினும், உங்களிடம் ஆண்ட்ராய்டு 11 (Android 11) அல்லது அதற்கும் மேற்பட்ட வெர்ஷன் இருந்தால், எந்த 3rd பார்ட்டி ஆப்ஸையும் நிறுவாமல் டெலீட் செய்யப்பட்ட வாட்ஸ்அப் மெசேஜ்களைப் (WhatsApp messages) திரும்பப் படிக்கலாம்.
உங்கள் ஆண்ட்ராய்டு போனில் (Android Phone) இருக்கும் நோட்டிபிகேஷன் ஹிஸ்டரி (Notification History) விருப்பத்துடன் இது சாத்தியமாகும். இந்த அம்சத்தை உங்களுடைய மொபைல் போனில் நீங்கள் ஆக்டிவேட் செய்தால் போதும், அடுத்த முறை உங்கள் நண்பர் ஏதேனும் வாட்ஸ்அப் மெசேஜ்ஜை டெலீட் செய்தால், அதன் நீங்கள் நோட்டிபிகேஷன் ஹிஸ்டரி சென்று பார்த்துக்கொள்ளலாம். இதுவொரு ஆண்ட்ராய்டு இன்பில்ட் அம்சம் (Android inbuilt feature) என்பதனால், நீங்கள் மற்ற ஆப்ஸை எதிர்பார்க்க வேண்டியதில்லை.
- உங்கள் ஆண்ட்ராய்டு மொபைல் போனில் Notification History அம்சத்தை ஆக்டிவேட் செய்வது எப்படி?
- உங்கள் போனில் Settings ஓபன் செய்து Apps & Notifications என்ற விருப்பத்தை கிளிக் செய்யவும்.
- Notifications என்பதை கிளிக் செய்யவும்.
- அதில் Notification history என்ற பட்டனை அழுத்தவும்.
- பிறகு, Use notification history என்ற விருப்பத்தை கிளிக் செய்யவும்.
இதற்குப் பிறகு, உங்கள் போனில் வரும் அனைத்து நோட்டிபிகேஷன்கள் - வாட்ஸ்அப் மெசேஜ்ஜஸ் உட்பட, அனைத்தும் இந்த பக்கத்தில் தோன்றும். இதன் மூலம் மீண்டும் அந்த மெசேஜ்ஜை நீங்கள் படித்துக்கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications








