Whatsapp இல் முன்னதாகவே மெசேஜ் அனுப்பும் நேரத்தை திட்டமிடலாம்: இதோ வழிமுறைகள்!
சமூகவலைதள பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. குறிப்பாக கோவிட்-19 பரவலின் போது ஏராளமானோர் தங்களது பெரும்பாலான நேரத்தை சமூகவலைதளங்களில்தான் செலவிட்டனர்.

பிரதான பயன்பாடாக இருக்கும் சமூகவலைதளம்
வங்கியில் கூட கணக்கில்லாமல் இருக்கலாம் ஆனால் ஏதேனும் சமூகவலைதளங்கள் ஒன்றிலாவது கணக்கில்லாமல் இருப்பவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. சமூகவலைதள பயன்பாட்டுக்கு என்றே ஏணையோர் ஸ்மார்ட்போன்களை வாங்கி வருகின்றனர்.

வாட்ஸ் அப், பேஸ்புக், டுவிட்டர்
சமூகவலைதளங்களில் பிரதானமாக இருப்பது வாட்ஸ் அப், பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் என்றே கூறலாம். இதுபோன்ற செயலிகளை நாம் தினசரி ஒரே மாதிரியான சேவைகளை பயன்படுத்தி வருகிறோம். அதில் பல்வேறு அம்சங்கள் இருக்கிறது என்பதே நாம் ஆராய்வதில்லை.

பிரதான பயன்பாடாக வாட்ஸ்அப் செயலி
சமூகவலைதள பயன்பாடுகளில் பிரதான ஒன்றாக இருப்பது வாட்ஸ்ஆப். வாட்ஸ்அப் தங்களது வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து பல்வேறு புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. பல்வேறு தேவைகளுக்கு வாட்ஸ்ஆப் பயன்பாடு என்பது பிரதானமாக இருந்து வருகிறது. வாட்ஸ்அப் செயலியில் பல்வேறு சேவைகளை சில வழிமுறைகளை கையாண்டு பயன்படுத்தலாம்.

வாட்ஸ்அப் மெசேஜ் அனுப்பும் நேரம் திட்டமிடல்
அதன்படி வாட்ஸ்அப் செயலியில் நீங்கள் சிறிது கால தாமதத்திற்கு பிறகு அதாவது ஒருவருக்கு பிறந்தநாள் வாழ்த்து இரவில் சொல்ல வேண்டும் என்றாலோ அல்லது ஒரு செய்தியை சரியான நேரத்திற்கு அனுப்ப வேண்டும் என்றாலோ இந்த அம்சம் பயன்படும். இந்த அம்சத்தை வாட்ஸ்அப் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக சேர்க்கவில்லை என்றாலோ மூன்றாம் தரப்பு செயலி மூலம் இதை பயன்படுத்தலாம்.

மூன்றாம் தரப்பு செயலி
இதற்கு முதலில் கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து ஸ்கெட்இட் (SKEDit) என்ற செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும். அதன்பின் SKEDit பயன்பாட்டில் வாட்ஸ்அப்பை தேர்வு செய்ய வேண்டும். அதன்பின் அதில் கேட்கப்படும் அனுமதிகளை வழங்க வேண்டும்.

ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு வழிமுறைகள்
அதன்பின் பயன்பாட்டிற்கு சென்று மாற்று என்ற தேர்வை கிளிக் செய்து Allow செய்ய வேண்டும். Ask Me Before Sending என்ற விருப்பத்தை தேர்வு செய்து செய்தியை அனுப்ப திட்டமிடலாம். மேலும் செய்தி தாமாக அனுப்புவதற்கு முன் தங்களுக்கு ஒரு அறிவிப்பு வரும் அதை கிளிக் செய்த பிறகே மெசேஜ் அனுப்ப திட்டமிட அனுமதிக்க முடியும். பின் திட்டமிட்ட நேரத்தில் மெசேஜ் நேரத்தில் அனுப்பப்படும். இது ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு வழிமுறைகள் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications