Just In
- 51 min ago
ரியல்மி 8 ப்ரோ சாதனம் இந்தியாவில் அறிமுகமா? என்னவெல்லாம் எதிர்ப்பார்களாம்?
- 1 hr ago
3ஜிபி டேட்டா தினமும் வேண்டுமா? அப்போ இது தான் சரியான திட்டம்..
- 15 hrs ago
லுமிஃபோர்ட் கோமியூசிக் BT12 ப்ளூடூத் ஸ்பீக்கர் அறிமுகம்: விலை என்ன தெரியுமா?
- 17 hrs ago
ஆஃப்லைன் தளத்தில் விற்பனைக்கு வந்த சாம்சங் கேலக்ஸி எஃப்62 ஸ்மார்ட்போன்.!
Don't Miss
- News
அப்துல் கலாமின் மூத்த சகோதரர் முகமது முத்து மீரான் மரைக்காயர் மறைவு.. தலைவர்கள் இரங்கல்
- Automobiles
கார்களில் இனி ஏர்பேக்குகள் கட்டாயம்!! இந்த அம்சத்துடன் மலிவான விலையில் கிடைக்கும் கார்கள் இவைதான்!
- Movies
தல... தல தான்... துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்ற அஜித்... உற்சாகத்தில் ரசிகர்கள்
- Finance
பழைய காருக்கு குட் பை சொல்ல காத்திருங்க.. 5% தள்ளுபடியுடன் புதிய கார் வாங்கலாம்..!
- Sports
அனுபவமே இல்லாததன் விளைவுதான் இது.பின்னடைவை தந்த இங்கிலாந்தின் ரொட்டேஷன் பாலிசி.. கவாஸ்கர் அதிருப்தி
- Lifestyle
ஒவ்வொரு பெண்ணுக்கும் தேவையான மிகவும் முக்கியமான 5 வைட்டமின்கள்!
- Education
பட்டதாரி இளைஞர்களுக்கு ரூ.90 ஆயிரம் ஊதியத்தில் மபொதுத்துறை நிறுவன வேலை!!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
Android ஸ்மார்ட்போனில் QR குறியீடுகளை ஸ்கேன் செய்வது எப்படி?
ஸ்மார்ட்போன்கள் இல்லாத நபர்கள் மிக குறைவு. குறிப்பாக கொரோனா பரவல் தொடங்கிய காலம் முதல் ஆன்லைன் வகுப்பு, வீட்டில் இருந்தே வேலை என பல்வேறு தேவைக்கு ஸ்மார்ட்போன்கள் பிரதானமாக இருக்கிறது. ஸ்மார்ட்போன்கள் பல பயன்பாடுக்கு பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில் க்யூ ஆர் கோட் ஸ்கேன் செய்வது எப்படி என்பதற்கான வழிமறைகளை இங்கே காணலாம்.

ஆண்ட்ராய்டு பயன்பாடு
சிறந்த மொபைல் இயக்க முறைமைகளில் ஆண்ட்ராய்டு பயன்பாடு என்பது பிரதானமான ஒன்று. ஏணைய ஸ்மார்ட்போன்கள் ஆண்ட்ராய்டு பயன்முறைகளிலேயே இயக்கப்படுகின்றன. இதையடுத்து ஆண்ட்ராய்டு சாதனத்தில் க்யூஆர் கோட் ஸ்கேன் செய்வது எப்படி என்பதற்கான வழிமுறைகள் குறித்து பார்க்கலாம்.

க்யூஆர் குறியீடு ஸ்கேன்
வரக்கூடிய ஆண்ட்ராய்டு அப்டேட்களில் சில சாதனங்கள் கேமரா மூலமாகவே க்யூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்ய அனுமதிக்கிறது. மற்ற சாதங்களில் உள்ளவர்கள் க்யூஆர் குறியீட்டை எப்படி ஸ்கேன் செய்வது என்பதற்கான வழிமுறைகளை பார்க்கலாம்.

க்யூஆர் குறியீட்டில் இருக்கும் தகவல்
க்யூஆர் குறியீடுகள் தற்போது பல டிஜிட்டல் பரிவர்த்தனைகள் உள்ளிட்ட பலவற்றுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. க்யூஆர் கோட் குறியீடுகள் சிறந்த செயல்பாட்டை கொண்டிருக்கின்றன. க்யூஆர் குறியீட்டுகளை ஸ்கேன் செய்வதன்மூலம் அவற்றுடன் இணைக்கப்பட்டிருக்கும் தகவல்களை படிக்க முடியும்.

ஆண்ட்ராய்டு க்யூஆர் குறியீடு
க்யூஆர் குறியீட்டை நேரடியாகவும் பயன்பாட்டின் மூலமும் ஸ்கேன் செய்யலாம். பெரும்பாலானோர் ஆண்ட்ராய்டு 8.0-க்கு அதிகமான அப்டேட் சாதனங்களையே பயன்படுத்துகின்றனர். ஆண்ட்ராய்டு 8.0 அல்லது அதற்கு மேலுள்ள அப்டேட் சாதனங்களை பயன்படுத்தும்பட்சத்தில் இந்த வழிமுறைகள் மூலம் ஸ்கேன் செய்யலாம். அதேபோல் கீழே சராசரியாக கூகுள் ப்ளே ஸ்டோரில் கிடைக்கும் சில பயன்பாடுகள் குறித்தும் பார்க்கலாம்.

கூகுள் ஸ்க்ரீன் தேடல் (google screen search)
கூகுள் ஸ்க்ரீன் தேடல் மூலம் க்யூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்ய தங்களுக்கு பயன்பாடு தேவைப்படாது. உங்கள் கேமராவை க்யூஆர் குறியீடு முன்பு நிலைநிறுத்தவும். கூகுள் ஸ்க்ரீன் தேடல் பயன்பாட்டை பயன்படுத்த ஹோம் பட்டனை கிளிக் செய்து கீழே உள்ள விருப்பங்களை ஸ்வைப் செய்து காணவும். வாட்ஸ் ஆன் மை ஸ்க்ரீன் என்ற விருப்பத்தை தேர்வு செய்யவும். அதன்பின் க்யூஆர் குறியீட்டுடன் இணைக்கப்பட்டிருக்கும் யூஆர்எல் காண்பிக்கப்படும்.

கூகுள் லென்ஸ் அசிஸ்டென்ட் (Google Lens in the Assistant)
கூகுள் லென்ஸ் அசிஸ்டென்ட் சேவையானது பயன்பாடுகள் இல்லாமல் க்யூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்ய மிகவும் எளிதான வழியாகும். கூகுள் அசிஸ்டென்டை கமாண்ட் செய்து முகப்பு பட்டனை கிளிக் செய்யவும். அசிஸ்டென்ட் பதிப்பை வைத்து லென்ஸ் பட்டன் தாமாகவே தோன்றும். அப்படி இல்லாதபட்சத்தில் கீழே இருக்கும் மூன்று புள்ளிகளை கிளிக் செய்தால் லென்ஸ் தேர்வு இடது புறத்தில் காண்பிக்கப்படும்.

கேமரா மூலம் க்யூஆர் குறியீடு ஸ்கேன்
இதை கிளிக் செய்து இயக்க வேண்டும். ஒருமுறை இயக்கிவிட்டால் கேமராவை ஓபன் செய்யும்போது இது உதவும். உங்கள் கேமராவை ஓபன் செய்து க்யூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்தால் அதில் இருக்கும் தகவல்கள் காண்பிக்கப்படும்.

கூகிள் லென்ஸ் பயன்பாடு
கூகுள் லென்ஸ் ஆப் மூலமாகவும் நேரடியாக கூகுள் லென்ஸ் பயன்பாட்டை அணுகலாம். கூகுள் ப்ளே ஸ்டோரில் கூகுள் லென்ஸ் பயன்பாட்டை பதிவிறக்கம் செய்யவும். இந்த பயன்பாட்டு மூலம் க்யூஆர் குறியீட்டை எளிதாக ஸ்கேன் செய்யலாம்.

க்யூஆர் கோட் ஸ்கேனர் ஃப்ரீ
கூகுள் ப்ளே ஸ்டோரில் இந்த பயன்பாடு கிடைக்கும். இது (no ads) QR Code Scanner Free & Barcode Scanner என்ற பெயரில் இருக்கிறது. இது க்யூஆர் ஈசி டூல்ஸ் பயன்பாடாகும். இதற்கு 4.5-க்கும் மேற்பட்ட ஸ்டார்கள் வழங்கப்பட்டுள்ளது. இதை கிளிக் செய்து அதில் கேமரா பயன்பாட்டை திறந்து ஸ்கேன் செய்யலாம்.

க்யூஆர் மற்றும் பார்கோட் ஸ்கேனர்
கூகுள் ப்ளே ஸ்டோரில் இந்த பயன்பாடு கிடைக்கும். இது QR & Barcode Scanner என்ற பெயரில் இருக்கிறது. இது காம்மா ப்ளே பயன்பாடாகும். இதற்கு 4.5-க்கும் மேற்பட்ட ஸ்டார்கள் வழங்கப்பட்டுள்ளன. இதேபோல் பல க்யூஆர் கோட் ஸ்கேனர் பயன்பாடு கூகுள் ப்ளே ஸ்டோரில் இருக்கிறது.
-
92,999
-
17,999
-
39,999
-
29,400
-
38,990
-
29,999
-
16,999
-
23,999
-
18,170
-
21,900
-
14,999
-
17,999
-
42,099
-
16,999
-
23,999
-
29,495
-
18,580
-
64,900
-
34,980
-
45,900
-
17,999
-
54,153
-
7,000
-
13,999
-
38,999
-
29,999
-
20,599
-
43,250
-
32,440
-
16,190