ஆண்ட்ராய்டு போன் இருக்கா? இனி பயமில்லாமல் ஸ்கேன் செய்யலாம்.. இனி நோ-போட்டோஸ்.. சூப்பர் பாஸ்ட் ஸ்கேன்..
கூகுள் (Google) நிறுவனம் தனது ஃபைல்ஸ் (Files) ஆப்பில் ஆவணங்களை நேரடியாக ஸ்கேன் (Scan) செய்ய வசதியாக ஷார்ட்கட் (Shortcut) ஒன்றை அறிமுகம் செய்யவுள்ளது. தற்போது சோதனை கட்டத்தில் இருக்கும் இந்த அம்சம் விரைவில் ஆண்ட்ராய்டு பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்றைய காலகட்டத்தில் அனைத்தும் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட நிலையில் அனைத்து ஆவணங்களையும் ஸ்கேன் செய்து வைத்திருப்பது மிகவும் அவசியமான ஒன்றாகிவிட்டது. இப்படி ஸ்கேன் செய்து வைத்துக்கொள்வதால் அவை பத்திரமாக இருப்பதோடு தேவைபடும் நேரத்தில் ஸ்மார்ட்போனில் இருந்து எடுத்து பயன்படுத்தவும் முடியும். பொதுவாக ஆவணங்களை ஸ்கேன் செய்ய வெளியே கடைகளுக்கு செல்வது வழக்கம்.

மொபைல் போன் மூலம் ஸ்கேன் செய்யுறீங்களா? ஸ்மார்ட்போன்களின் வரவிற்கு பிறகு சிலர் போட்டோவாக எடுத்தோ அல்லது தர்ட் பார்டி ஆப்கள் (Third-party apps) மூலம் ஸ்கேன் செய்தோ வைக்க ஆரம்பித்தனர். முக்கியமான ஆவணங்களை இப்படி ஸ்கேன் செய்வது பாதுகாப்பற்றது என்றாலும், நம்பகமான ஆப் இல்லை என்பதால் மக்கள் அதனை செய்து வந்தனர்.
இந்த நிலையில் பல முன்னணி ஆப்களை வழங்கி வரும் கூகுள் நிறுவனம் தனது ஃபைல்ஸ் ஆப்பில் ஸ்கேன் ஆப்ஷனை இப்போது அறிமுகம் செய்யவுள்ளது. கூகுளின் ஃபைல்ஸ் ஆப்பில் ஃப்லோட்டிங் ஆக்ஷன் பட்டனாக (Floating action button) இந்த டாக்குமன்ட் ஸ்கேனிங் (Document scanning) அம்சம் ஆப்பின் ஹோம் ஸ்க்ரீனில் (Homescreen) சேர்க்கப்பட்டுள்ளது.
ஸ்க்ரீனில் வலது கீழ் ஓரத்தில் அமைந்திருக்கும் இந்த பட்டனை அழுத்தினால் இரண்டு தேர்வுகள் தோன்றும். டாகுமென்ட்களை (Document) இரண்டு விதமாக இந்த அம்சத்தை பயன்படுத்தி ஸ்கேன் செய்துகொள்ள முடியும். ஒன்று மேனுவல் (Manual) முறை, இரண்டாவது ஸ்கேனரே பக்கத்தைகண்டறிந்து ஆட்டொஸ்கேன் (Autoscan) செய்வது. ஸ்கேன் செய்யப்பட்ட பின்னர் கூகுள் ட்ரைவை (Google drive) போலவே ப்ரிவ்யூ (Preview) பக்கத்திற்கு அழைத்து செல்லப்படுவீர்கள்.

இந்த பகுதியில் ஸ்கேன் செய்யப்பட்ட ஆவணம் ப்ரிவ்யூ செய்து காட்டப்படும். அந்த ப்ரிவ்யூவை ஆராய்ந்து க்ராப் (Crop) செய்வது, ரொடேட் (Rotate), ஃபில்டர் (Filter) போன்ற தேவையான மாற்றங்களை ஆவணத்தில் செய்து கொள்ளலாம். அனைத்து தேவையான மாற்றங்களை செய்து முடிக்கப்பட்ட பின்னர் ஸ்கேன் செய்யப்பட்ட அந்த ஆவணத்தை PDF ஆக உங்கள் டிவைஸில் சேவ் (Save) செய்து கொள்ளலாம்.
சேவ் செய்யப்படும் ஆவணம் ஃபைல்ஸ் ஆப்பில் ஸ்கேன்ட் ஃபோல்டர் (Scanned folder) என்ற தனி ஃபோல்டரில் சென்று சேர்ந்து விடும். இந்த ஆப்பில் ஸ்கேன் செய்வது மட்டுமின்றி, கேலரியில் இருக்கும் இமேஜ்களை எடுத்து எடிட் செய்யவும் முடியுமாம். தற்போது பப்லிக் பீட்டாவின் (Public beta) சோதனை ஓட்டத்தில் இருக்கும் இந்த அம்சம் விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கூகுள் ட்ரைவ் ஸ்கேனர்: சென்ற நவம்பர் மாதத்தில் இருந்தே இந்த அம்சம் கூகுள் ட்ரைவில் சேர்க்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. கூகுள் ட்ரைவில் இருக்கும் ஸ்கேனர் அம்சத்தை பயன்படுத்தி ஆவணங்களை ஸ்கேன் செய்து நேரடியாக க்லௌடில் (Cloud) சேமித்து வைத்துக்கொள்ள முடியும். கூகுள் ட்ரைவின் ஸ்கேனரை ஆண்ட்ராய்ட் மற்றும் iOS என இரண்டிலும் பயன்படுத்த முடியும்.
ஆனால் இப்போது சோதனையில் இருக்கும் கூகுள் ஃபைல்ஸின் ஸ்கேனர் அம்சமானது தற்போது ஆண்ட்ராய்ட் போன்களுக்கு மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளது. ஆப்பிள் நிறுவனம் தனது பயனர்களுக்கு கேமராவிலேயே ஸ்கேனர் ஆப்ஷனை வழங்கியுள்ளதால் அவர்களுக்கு இது ஒரு குறையாக தெரியாது என்றே கூறலாம்.


Click it and Unblock the Notifications








