Just In
- 8 hrs ago
திடீர் விலைக்குறைப்பு! கம்மி விலையில் புது Smart Watch வாங்க சரியான நேரம்.. அதுவும் OnePlus வாட்ச்!
- 17 hrs ago
50எம்பி கேமரா, 5000எம்ஏஎச் பேட்டரியுடன் மோட்டோ ஜி73 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்: பட்ஜெட் விலை.!
- 22 hrs ago
மண்டை மேல் இருக்குற கொண்டைய மறந்த Infinix! ரூ.9,999க்கு புது போன் அறிமுகம்!
- 1 day ago
வாரே வா.. பிரபல நிறுவனத்தின் 42-இன்ச் ஸ்மார்ட் டிவிக்கு தள்ளுபடி வழங்கி அதிரடி காட்டிய பிளிப்கார்ட்.!
Don't Miss
- News
"புடிங்க அவங்கள.." தமிழக இளைஞர்களை விரட்டியடித்த வடமாநிலத்தவர்! திருப்பூரில் உண்மையில் நடந்தது என்ன
- Sports
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 - இந்திய அணியின் பிளேயிங் லெவன் என்ன? பிட்ச் ரிப்போர்ட்
- Finance
Budget 2023: கல்வித் துறைக்கும், ஹெல்த்கேர் துறைக்கும் முக்கியத்துவம் கிடைக்குமா?
- Movies
மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நடிகர் மனோபாலா.. நலம் விசாரித்தார் பூச்சி முருகன்!
- Automobiles
நாடே காத்து கிடந்த எலெக்ட்ரிக் காருக்கு புக்கிங் தொடக்கம்! விலை இவ்ளோதானா! அதான் எல்லாரும் அலை மோதறாங்க!
- Lifestyle
இந்த இந்திய மசாலா பொருட்கள் உங்க குடலுக்கு பல அதிசயங்களை செய்யுமாம்... அவை என்னென்ன தெரியுமா?
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
WhatsApp-ல் வந்த போட்டோ-வீடியோ டெலீட் ஆகிடுச்சா.! இனி இப்படி செஞ்சா உடனே ரிட்டர்ன் வந்துடும்.!
வாட்ஸ்அப் (WhatsApp) மூலமாக தினமும் ஏராளமான போட்டோஸ், டாகுமெண்ட், லொகேஷன் ஷேரிங், லைவ் லொகேஷன், ஆடியோ மற்றும் வீடியோ காலிங், வாய்ஸ் மெசேஜ், டெக்ஸ்ட் மெசேஜ் போன்ற பலதரப்பட்ட விஷயங்கள் இப்போது அதிகமாக வாட்ஸ்அப் வழியாகத் தான் மற்றவர்களுடன் பகிரப்படுகிறது. பெரும்பாலான விஷயங்களை வாட்ஸ்அப் மூலம் செய்வதன் காரணத்தினாலோ என்னவோ, ஸ்டோரேஜ் தட்டுப்பாட்டை அடிக்கடி சந்திக்க வேண்டியதுள்ளது.

வாட்ஸ்அப் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தெரியாமல் டெலீட் செய்துவிட்டீர்களா?
ஆனால், அடிக்கடி ஸ்டோரேஜ் தட்டுப்பாடு ஏற்படும் போது, கட்டாயமாக நாம் சில தேவையில்லாத மற்றும் பெரிய ஸ்டோரேஜ் இடத்தை அகரமித்துள்ள WhatsApp பைல்களை நீக்க வேண்டியதுள்ளது. இதன் விளைவாக, சில நேரங்களில் நாம் டெலீட் செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களில் தேவையான அல்லது சில முக்கியமான பைல்களையும் தெரியாமல் டெலீட் செய்துவிடுகிறோம்.

டெலீட் செய்யப்படும் படங்கள் மற்றும் வீடியோக்களை சுலபமாக மீட்டெடுக்கலாமா?
இப்படித் தெரியாமல் டெலீட் செய்யப்படும் படங்கள் மற்றும் வீடியோக்களை எப்படி சுலபமாக மீட்டெடுக்கலாம் என்ற சில செயல் முறைகளைப் பற்றி தான் இந்த பதிவில் பார்க்கப் போகிறோம். முதலில், உங்கள் போன் கேலரி மூலம் எப்படி மீட்டெடுக்கலாம் என்று பார்க்கலாம். இயல்பாக வாட்ஸ்அப், அதன் தளத்தில் வரும் படங்கள் மற்றும் வீடியோக்கள் அனைத்தையும் போன் கேலரியில் சேமிக்கிறது.

கேலரியில் இருந்து போட்டோஸ் / வீடியோஸை மீட்டெடுப்பது எப்படி?
எனவே, நீங்கள் ஒரு வேலை வாட்ஸ்அப் இல் இருந்து மீடியா பைல்களை நீக்கி இருந்தாலும், அவை உங்கள் போனின் போட்டோ கேலரியில் அப்படியே இருக்கும். உங்கள் கூகுள் போட்டோஸ் அல்லது போட்டோஸ் iOS கேலரியில் அப்படியே இருக்க சில வாட்ஸ்அப் செட்டிங்கை மாற்றங்களை நீங்கள் மேற்கொள்ள வேண்டும். அதை இந்த பதிவின் இறுதியில் குறிப்பிட்டுள்ளோம். படிக்கச் மறக்காதீர்கள்.

வாட்ஸ்அப் மீடியா போல்டர் இல் இருந்து மீட்டெடுக்கலாமா?
மீடியா போல்டரில் இருந்து வாட்ஸ்அப் மீடியாவை மீட்டெடுக்க ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு மட்டுமே விருப்பம் உள்ளது. பைல் எக்ஸ்ப்ளோரர் ஆப்ஸை இயக்கவும். ரூட் WhatsApp போல்டர் பகுதிக்குச் செல்லவும்.
இப்போது மீடியா போல்டர் சென்று வாட்ஸ்அப் படங்கள் போல்டரை தேர்ந்தெடுக்கவும். பெறப்பட்ட படங்கள் அனைத்தும் இங்குக் காண்பிக்கப்படும். சென்ட் போல்டர் சென்று நீக்கப்பட்ட புகைப்படம் அல்லது பிற படங்களைக் கண்டறியலாம்.

Google Drive அல்லது iCloud இலிருந்து WhatsApp பேக் அப் செய்து மீட்டெடுப்பது எப்படி?
iOS பயனர்களுக்கான iCloud மற்றும் Android பயனர்களுக்கான Google Drive ஆகியவற்றிற்கு WhatsApp பேக் அப் அம்சத்தை வழங்குகிறது.
உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள மெசேஜ் முதல் புகைப்படங்கள் மற்றும் வீடியோ வரை அனைத்தும் இதில் ஸ்டோர் செய்யப்பட்டிருக்கும்.
தெரியாமல், ஏதேனும் பைல்களை நீங்கள் டெலீட் செய்திருந்தால், அவற்றை இங்கிருந்து நீங்கள் மீட்டெடுக்கலாம்.

Uninstall செய்து Install செய்யுங்கள்.. டெலீட் ஆனா படங்கள் எல்லாம் ரிட்டர்ன் வந்துவிடும்..
உங்கள் போனில் இருக்கும் வாட்ஸ்அப்பை Uninstall செய்யுங்கள். பிறகு மீண்டும் வாட்ஸ்அப் ஆப்ஸை Install செய்யுங்கள்.
உங்கள் வாட்ஸ்அப் தொலைப்பேசி எண்ணைப் பயன்படுத்தவும். இந்த செட்டிங்கின் போது பேக் அப் கேட்கப்படும், அப்போது பேக் அப் இல் இருந்து தரவை மீட்டெடுப்பதற்கான கோரிக்கையை ஏற்கவும்.
வெற்றிகரமாக பேக் அப் எடுக்கப்பட்டதும், நீங்கள் டெலீட் செய்த அனைத்து உரையாடல்களும் மீடியாவும் மீட்டமைக்கப்படும்.

டெலீட் மீடியா ஆப்ஷன் என்ற விருப்பத்தை OFF செய்யவும்
வாட்ஸ்அப் அரட்டையில் இருந்து வாட்ஸ்அப் மீடியாவை நீக்கும் போது, தற்செயலாக ஃபோன் கேலரியில் இருந்து வாட்ஸ்அப் மீடியாவை நீக்க விரும்பவில்லை என்றால், நீங்கள் "சாட் கேலரியில் இருந்து இந்த அரட்டையில் பெறப்பட்ட மீடியாவையும் நீக்கு" (Also delete media received in this chat from the device gallery) என்பதை முடக்கவும்.
இந்த முறைகளைப் பின்பற்றி உங்கள் வாட்ஸ்அப் இல் இருந்து டெலீட் செய்யப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோ பைல்களை மீட்டெடுக்கலாம்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470