Home
News

'ஓ மை காட்' தெரியாம வாட்ஸ்அப் சாட் டெலீட் செஞ்சுட்டேன்.. பீல் பண்ணாதீங்க ரீஸ்டோர் பண்ணிடலாம்.. எப்படி தெரியுமா

தெரியாமல் உங்கள் வாட்ஸ் ஆப் சாட் மெசேஜ்ஜை டெலீட் செய்து விட்டீர்களா? 'ஓ மை காட்' வாட்ஸ்அப் சாட்டை தெரியாமல் டெலீட் செய்துவிட்டேனே "எல்லாம் போச்சு" என்று நினைத்து பீல் பண்ணாதீர்கள். டெலீட் ஆனா சாட் மெசேஜ்களை மீட்டெடுக்க வழி இருக்கிறியாது. எப்படி டெலீட் ஆன மெசேஜ்களை ரீஸ்டோர் செய்வது என்று குழப்பமாக இருக்கிறதா? கவலை வேண்டாம் தெரியாமல் டெலீட் செய்த வாட்ஸ் ஆப் சாட் மெசேஜ்ஜை ரீஸ்டோர் செய்வதற்கு நிமிடம் டிப்ஸ் உள்ளது. அதை எப்படிச் செய்யலாம் என்று பார்க்கலாம்.

இதை இதுவரை நீங்கள் செய்யவில்லை என்றால் உடனே செய்துவிடுங்கள்

இதை இதுவரை நீங்கள் செய்யவில்லை என்றால் உடனே செய்துவிடுங்கள்

இந்த செயல்முறைகளைப் பின்பற்றுவதற்கு முன், உங்களுடைய வாட்ஸ் ஆப் சாட்கள் பேக்அப் செய்யப்பட்டுள்ளதா என்று முதலில் சோதித்துக் கொள்ளுங்கள். உங்கள் வாட்ஸ் ஆப் சாட்கள் பேக்அப் செய்யப்படவில்லை என்றால் நிச்சயம் நீங்கள் டெலீட் செய்த சாட்களை திரும்பப்பெற இயலாது. டெலீட் செய்த வாட்ஸ் ஆப் சாட் மெசேஜ்களை உங்கள் ஆண்ட்ராய்டு போன் மற்றும் iOS போன்களில் எளிதாக ரீஸ்டோர் செய்து கொள்ள உங்கள் கூகுள் டிரைவ் பேக்அப் மற்றும் ஐகிளவுட் சேவையைப் பயன்படுத்த வேண்டும். இந்த சேவைகளை உங்கள் வாட்ஸ் ஆப் இல் நீங்கள் பயன்படுத்தவில்லை என்றால் நிச்சயம் டெலீட் செய்த சாட்களை திரும்பப் பெற முடியாது.

வாட்ஸ் ஆப் சாட்களை பேக்அப் செய்வது எப்படி?

வாட்ஸ் ஆப் சாட்களை பேக்அப் செய்வது எப்படி?

  • முதலில் உங்கள் ஸ்மார்ட்போனில் பேக்அப் சேவையை எப்படி ஆக்டிவேட் செய்வது என்று பார்க்கலாம். உங்கள் வாட்ஸ் ஆப் செயலியை ஓபன் செய்துகொள்ளுங்கள்.
  • வாட்ஸ் ஆப் செட்டிங்ஸ்(Settings) ஓபன் செய்யுங்கள்.
  • சாட்ஸ்(Chats) கிளிக் செய்யுங்கள்.
  • சாட் பேக்அப்(Chat backup) சென்ற ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள்.
  • இதற்குக் கீழ் கொடுக்கப்பட்டுள்ள never, daily, weekly or monthly சேவையை கிளிக் செய்து உங்கள் சாட்களை பேக்அப் செய்துகொள்ளுங்கள்.
  • ஐபோனில் வாட்ஸ்அப் சாட்களை பேக்அப் செய்வது எப்படி?

    ஐபோனில் வாட்ஸ்அப் சாட்களை பேக்அப் செய்வது எப்படி?

    உங்கள் ஐபோனில் எப்படி பேக்அப் சேவையை ஆக்டிவேட் செய்வது என்று பார்க்கலாம்.உங்கள் ஐபோனில் வாட்ஸ் ஆப் செயலியை ஓபன் செய்துகொள்ளுங்கள்.வாட்ஸ் ஆப் செட்டிங்ஸ் (Settings) ஓபன் செய்யுங்கள்.சாட்ஸ் (Chats) கிளிக் செய்யுங்கள். சாட் பேக்அப் (Chat backup) சென்ற ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள்.ஆட்டோ பேக்அப் (Auto Backup) அல்லது பேக்அப் நௌ (Back Up Now) கிளிக் செய்யுங்கள்.

    வாட்ஸ்அப் சாட்களை ரீஸ்டோர் செய்ய என்ன செய்ய வேண்டும்?

    வாட்ஸ்அப் சாட்களை ரீஸ்டோர் செய்ய என்ன செய்ய வேண்டும்?

    • கிளவுட் சேவையைப் பயன்படுத்தி எப்படி டெலீட் ஆன சாட்களை ரீஸ்டோர் செய்வது என்ற முறைப் பற்றி பார்க்கலாம்.
    • உங்கள் Android ஸ்மார்ட்போன் அல்லது ஐபோனிலிருந்து வாட்ஸ்அப்பை அன்இன்ஸ்டால் செய்யுங்கள்.
    • வாட்ஸ்அப் செயலியை மீண்டும் இன்ஸ்டால் செய்து உங்கள் தொலைப்பேசி எண்ணுடன் பதிவு செய்யுங்கள்.
    • உங்கள் எண்ணைப் பதிவு செய்தவுடன் பேக்அப் டிரைவிலிருந்து சாட்களை ரீஸ்டோர் செய்ய அனுமதி கேட்கும்.
    • இது மிகவும் முக்கியமானது மறக்காதீர்கள்

      இது மிகவும் முக்கியமானது மறக்காதீர்கள்

      நீங்கள் ஆண்ட்ராய்டு பயனராக இருந்தால் கூகுள் டிரைவிலிருந்தும், ஐபோன் பயனராக இருந்தால் iCloud இருந்தும் சாட்கள் பேக்அப் செய்யப்படும்.
      பேக்ஆப் ஆல் சாட் என்ற ஆப்ஷனை ஒருமுறை கிளிக் செய்யவும்.

      உங்கள் சாட்களை பேக்அப் செய்தால், பேக்அப் தேதிக்கு முந்தைய சாட்கள் டெலீட் செய்யப்படும் என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள். பேக்அப் தேதிக்கு முந்தைய சாட்கள் டெலீட் செய்யப்பட்டால் கண்டிப்பாக அதை மீட்டெடுக்க வழி இல்லை என்பதை நினைவில் கொள்க.

      மெமரி பேக்அப் இல் இருந்து ரீஸ்டோர் செய்யும் முறை

      மெமரி பேக்அப் இல் இருந்து ரீஸ்டோர் செய்யும் முறை

      • டெலீட் ஆனா சாட்களை ஆண்ட்ராய்டு மெமரி பேக்அப் இல் இருந்து ரீஸ்டோர் செய்யும் முறை
      • File Manager கிளிக் செய்யுங்கள்.
      • WhatsApp ஃபோல்டரை கிளிக் செய்யுங்கள்.
      • Database கிளிக் செய்யுங்கள், இங்கு தான் உங்கள் பேக்அப் டேட்டா ஃபைல்கள் இருக்கும்.
      • வாட்ஸ் ஆப் பேக்அப் பைலை டெலீட் செய்ய வேண்டுமா?

        வாட்ஸ் ஆப் பேக்அப் பைலை டெலீட் செய்ய வேண்டுமா?

        • msgstore.db.crypt12 என்ற ஃபைல் பெயரை msgstore_BACKUP.db.crypt12 என்று மாற்றிக்கொள்ளுங்கள்.
        • இந்த ஃபார்மட் msgstore-YYYY-MM-DD.1.db.crypt12 அடிப்படியில் பல ஃபைல்கள் இருக்கும் ரிசென்ட் ஃபைலை கிளிக் செய்து msgstore.db.crypt12. என்று பெயர் மாற்றம் செய்யுங்கள்.
        • இப்பொழுது உங்கள் கூகுள் டிரைவில் உள்ள மூன்று புள்ளியை கிளிக் செய்து அந்த வாட்ஸ் ஆப் பேக்அப் பைலை டெலீட் செய்யுங்கள்.
        • பேக்அப் டிரைவிலிருந்து சாட்களை ரீஸ்டோர் செய்ய என்ன செய்ய வேண்டும்?

          பேக்அப் டிரைவிலிருந்து சாட்களை ரீஸ்டோர் செய்ய என்ன செய்ய வேண்டும்?

          உங்கள் Android ஸ்மார்ட்போனிலிருந்து வாட்ஸ்அப்பை அன்இன்ஸ்டால் செய்யுங்கள்.
          வாட்ஸ்அப் செயலியை மீண்டும் இன்ஸ்டால் செய்து உங்கள் தொலைப்பேசி எண்ணுடன் பதிவு செய்யுங்கள். உங்கள் எண்ணைப் பதிவு செய்தவுடன் பேக்அப் டிரைவிலிருந்து சாட்களை ரீஸ்டோர் செய்ய அனுமதி கேட்கும். இப்பொழுது உங்கள் மொபைல் இல் உள்ள லோகல் மெமரியிலிருந்து பேக்அப் சாட் எடுத்துக்கொள்ளப்படும். Restore கிளிக் செய்தால் டெலீட் செய்யப்பட்ட உங்கள் சாட்கள் திரும்பக் கிடைத்துவிடும்.

          ஆட்டோமேட்டிக் பேக்அப் அம்சம் செயல்பாட்டில் உள்ளதா?

          ஆட்டோமேட்டிக் பேக்அப் அம்சம் செயல்பாட்டில் உள்ளதா?

          இந்த முறைகளைப் பின்பற்றி நீங்கள் உங்கள் வாட்ஸ்அப் கணக்கில் இருந்து நீக்கப்பட்ட அல்லது டெலீட் செய்யப்பட்ட மெசேஜ்களை மீட்டெடுக்க முடியும். குறிப்பாக ஆன்லைனில் அல்லது கூகிள் டிரைவில் இருந்து உங்கள் டெலீட் செய்யப்பட்ட சாட்களின் தகவல்களை நீங்கள் மீட்டெடுக்க விரும்பினால், உங்களின் வாட்ஸ்அப் சாட்டில் உள்ள ஆட்டோமேட்டிக் பேக்அப் அம்சம் செயல்பாட்டில் இருக்க வேடனும் என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.

          வாட்ஸ்அப் தொடர்பான கூடுதல் டிப்ஸ்

          வாட்ஸ்அப் தொடர்பான கூடுதல் டிப்ஸ்

          இதில் பெரும்பாலானோர் never என்ற விருப்பத்தைச் செய்திருப்பார்கள். இவர்களுக்கு வாட்ஸ்அப் சாட்டை மீட்டெடுப்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாகும். இது போன்ற கூடுதல் வாட்ஸ்அப் டிப்ஸ் மற்றும் ட்ரிக்ஸ்களை பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனலில் உள்ள மற்ற பதிவையும் படியுங்கள்.

Best Mobiles in India

English summary
How To Restore Deleted WhatsApp Chats From Android and iPhone Device : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X