மொபைலில் டெலிட் செய்த புகைப்படங்கள் மற்றும் டேட்டாக்களை மீட்டெடுப்பது எப்படி?

|

ஸ்மார்ட்போன்களில் இப்போது வரும் புதிய புதிய ஆப் வசதிகள் மக்களுக்க பயனுள்ள வகையில் இருக்கிறது என்றுதான் கூறவேண்டும். மேலும் ஒரு சில நிமிடங்களில் நமக்குத் தெரிந்தோ தெரியாமலோ தெரியாமலோ மொபைலில் போட்டோக்களை டெலிட் செய்திருப்போம். அல்லது மொபைலில் வைரஸ் காரணமாக உங்களது முக்கியமான டேட்டா மற்றும் போட்டோக்களை டெலிட் செய்திருப்பீர்கள்.

 நேரத்தில் நீங்கள் டெலிட்

எனவே இதுபோன்ற நேரத்தில் நீங்கள் டெலிட் செய்த புகைப்படங்கள் மற்றும் டேட்டாக்களை மீண்டும் எப்படி எடுப்பது என்று நீங்கள் யோசிப்பீர்கள். கவலை வேண்டாம் நீங்கள் டெலிட் செய்த உங்களது புகைப்படங்கள் மற்றும் டேட்டாக்களை மீட்டெடுக்க சில வழிமுறைகள் உள்ளது, அவற்றைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.

டெலிட் செய்த புகைப்படங்களை மீட்டெடுக்க

அதாவது நீங்கள் டெலிட் செய்த புகைப்படங்களை மீட்டெடுக்க மூன்று வழிமுறைகள் உள்ளது. இதன் மூலம் மிக சுலபமாக உங்களது புகைப்படங்கள் மற்றும் டேட்டாக்களை மீட்டெடுக்க முடியும்.

இன்ஃபோசிஸ் ஊழியர்களுக்கு மகிழ்ச்சி அறிவிப்பு: புது வேலை மாதிரி திட்டத்தை அறிவித்த ஐடி நிறுவனம்!இன்ஃபோசிஸ் ஊழியர்களுக்கு மகிழ்ச்சி அறிவிப்பு: புது வேலை மாதிரி திட்டத்தை அறிவித்த ஐடி நிறுவனம்!

வழிமுறை-1

வழிமுறை-1

 • இந்த முதல் வழிமுறைக்கு எந்த ஆப் வசதியும் தேவையில்லை, அதேபோல் உங்களது ஸ்மார்ட்போனில் எந்தவொரு மென்பொருளும் இன்ஸ்டால் செய்யத் தேவையில்லை.
 • அதாவது எந்த மொபைலில் நீங்கள் புகைப்படங்களை டெலிட் செய்தீர்களோ, அந்த மொபைலில் உள்ள file manager பகுதிக்கு செல்லவும்.
 • அடுத்து file manager-ல் இருக்கும் show hidden files என்பதை எனேபில் செய்யவும். பின்னர் DCIM என்பதை தேர்வு செய்து அதில் .thumbnails என்ற folder இருக்கும். இதனுள் நீங்கள் டெலிட் செய்த புகைப்படங்கள் இருக்கும்.
 • எப்போதுமே நாம் டெலிட் செய்த புகைப்படங்கள் உடனடியாக டெலிட் ஆகாது, இதுபோன்ற சிறிய பேக்அப் இருக்கும். மேலும் இந்த செயல்முறை மூலம் நீங்கள் மீட்டெடுக்கும் புகைப்படத்தின் தரம் சற்று குறைவாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
 • ஆனால் இந்த வழிமுறையில் வீடியோக்கள் மற்றும் டேட்டாக்களை மீட்டெடுக்க முடியாது. வெறும் புகைப்படங்களை மட்டும் தான் மீட்டெடுக்க முடியும்.
 வழிமுறை-2

வழிமுறை-2

 • அடுத்த நாம் பார்க்கும் இரண்டாவது வழிமுறை என்னவென்றால்,DiskDigger photo recovery எனும் செயலியை உங்களது போனில் இன்ஸ்டால் செய்யவும்.
 • பின்னர் இந்த செயலியில் உள்நுழைந்து ஸ்கேன் என்பதை கிளிக் செய்தால் போதும், ஒரு 30 நிமிடத்தில் உங்களது போனை முழுவதுமாக ஸ்கேன் செய்து, நீங்கள் டெலிட் செய்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் உள்ளிட்ட அனைத்தையும் மீட்டெடுக்கும்.
 • அதேபோல் இதில் அதிக புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை நீங்கள் மீட்டெடுக்க விரும்பினால் குறிப்பிட்ட பணம் செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
வழிமுறை-3

வழிமுறை-3

 • அடுத்து நாம் பார்க்கும் மூன்றாவது வழிமுறை என்னவென்றால், dr.fone என்ற செயலி உள்ளது. இதை உங்களது கணினியில்இன்ஸ்டால் செய்ய வேண்டும்.
 • அடுத்து கணினியில் இந்த செயலியை திறந்தால், உங்களது மொபைலை கனெக்ட் செய்ய கேட்க்கும். உடனே யுஎஸ்பி கேபிள் மூலம் மொபைலை கனெக்ட் செய்தால், USB debugging என்று கேட்க்கும், இதை எனேபிள் செய்து Next என்பதை கிளிக் செய்தால் போதும்.
 • அடுத்த 30 நிமிடங்களில் உங்களது போனை முழுவதுமாக ஸ்கேன் செய்து, உங்களது மொபைல் டெலிட் செய்யப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்கள், வாட்ஸ்அப் மெசேஜ் உள்ளிட்ட அனைத்துக் கோப்புகளையும் எளிமையாக மீட்டெடுக்கும்.
 • ஆனால் நீங்கள் இந்த கோப்புகளை மீட்டெடுக்க இந்த செயலியில் பணம் செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
How to Recover Images and Datas Which Deleted in Smartphones!: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X