Home
News

Gmail அலெர்ட்.. உடனே இந்த விஷயத்தை கொஞ்சம் கவனிங்க.. இல்லையெனில் சிக்கல் தான்..

கூகுள் (Google) நிறுவனத்தின் ஜிமெயில் (Gmail) சேவையை உலகம் முழுவதும் அதிக மக்கள் பயன்படுத்துகின்றனர். அதாவது ஆதார் (AAdhaar) கார்டு, பான் கார்டு,பேங்க் அக்கவுண்ட் வரையில் இந்த ஜிமெயில் பயன்படுகிறது. அதுவும் மாணவர்கள் அலுவலகங்களில் வேலை பார்ப்பவர்கள், முதியவர்கள் என அனைவரும் ஜிமெயில் கணக்கை பயன்படுத்தி வருகின்றனர்.

மேலும் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்த வேண்டும் என்றால், ஆரம்ப இன்ஸ்டால் செட்டப்பிற்கு இந்த ஜிமெயில் கணக்கு தான் தேவைப்படுகிறது. சுருக்கமாக கூறவேண்டும் என்றால் அனைத்து இடங்களில் இந்த ஜிமெயில் பயன்படுகிறது. சரி இப்போது விஷயத்துக்கு வருவோம், அதாவது நம்மில் பலரும் போனில் ஜிமெயில் பயன்படுத்தி சில வெப்சைட் அல்லது ஆப்ஸ் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தும் போது லாகின் செய்திருப்போம்.

Gmail அலெர்ட்.. உடனே இந்த விஷயத்தை கொஞ்சம் கவனிங்க..

ஒரு கட்டத்தில் அந்த வெப்சைட் அல்லது ஆப்ஸ் பயன்படுத்தாமல் இருப்போம் அல்லது அந்த ஆப்ஸ் டெலிட் செய்திருப்போம். ஆனாலும் அந்த ஆப்ஸ் மற்றும் வெப்சைட்டில் இருந்து நமது மெயில் ஐடி-க்கு மெசேஜ் வந்து தொல்லை கொடுத்துக் கொண்டே தான் இருக்கும். அதாவது இந்த நீங்கள் டெலிட் செய்த அந்த ஆப்ஸ் இன்னும் உங்களது ஜிமெயில் அக்கவுண்ட் உடன் கனெக்ட் ஆக தான் இருக்கும். இப்போது இதை எப்படி டிஸ்கனெக்ட் (disconnect) அதாவது எப்படி தடுப்பது என்று இங்கே விரிவாகப் பார்க்கலாம்.

வழிமுறை-1: முதலில் உங்கள் போனில் ஜிமெயில் கணக்கில் லாகின் செய்து கொள்ளுங்கள். அடுத்து மேலே உள்ள ப்ரொபைல் (Profile Icon) கிளிக் செய்ய வேண்டும்.

வழிமுறை-2: அதன்பின்பு manage your google account என்பதை கிளிக் செய்ய வேண்டும். அதை தொடர்ந்து security எனும் விருப்பம் தெரியும் அதை தேர்வு செய்யவும். அதன்பின்னர் your connection to third party apps and services என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

வழிமுறை-3: நீங்கள் your connection to third party apps and services கிளிக் செய்ததும், எந்தெந்த வெப்சைட் அல்லது ஆப்ஸ்களில் உங்கள் ஜிமெயில் ஐடி கனெக்ட்டில் இருக்கிறதோ அந்த மொத்தம் ஹிஸ்டரியும் (History) காட்டும். இப்போது உங்களுக்குத் தேவையில்லாத வெப்சைட் மற்றும் ஆப்ஸ்களை டெலிட் (Delete) செய்துவிட வேண்டும். இதன் மூலம் உங்கள் ஜிமெயில் ஐடி மிகவும் பாதுகாப்பாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் சமீபத்தில் எலான் மஸ்க், ஜிமெயில் அக்கவுண்ட்டுக்கு போட்டியாக எக்ஸ்மெயில் (Xmail) அக்கவுண்ட்டை கொண்டுவர இருப்பதாக தகவல் வெளியானது. குறிப்பாக ஜிமெயில் போலவே மின்னஞ்சல் சேவையை (Email Service) இந்த எக்ஸ்மெயில் வழங்க இருப்பதாக கூறப்படுகிறது. ஆனாலும் ஜிமெயில் வெறும் ஈமெயில் அனுப்பும் சேவையை மட்டும் வழங்கவில்லை. அந்த அக்கவுண்ட் மூலம் யூடியூப் முதல் கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கும் ஆப்கள் வரையில் பயன்படுத்தப்படுகிறது.

Gmail அலெர்ட்.. உடனே இந்த விஷயத்தை கொஞ்சம் கவனிங்க..

இதுதவிர பல்வேறு சேவைகள் ஜிமெயிலில் கிடைக்கிறது. எனவே தான் உலகம் முழுவதும் அதிக மக்கள் இந்த ஜிமெயில் சேவையை அதிகம் பயன்படுத்துகின்றனர். அதேபோல் ஜிமெயில் அக்கவுண்ட்டுக்கு (Gmai Account) மாற்றாக எதையும் வைத்து பார்க்க முடியாது. மைக்ரோசாப்ட் அவுட்லுக் (Microsoft Outlook), யாஹூ மெயில் (Yahoo Mail) போன்ற எந்த போட்டியாளர்களும் நெருங்க முடியாக உச்சத்தில் இப்போது கூகுள் நிறுவனத்தின் ஜிமெயில் இருக்கிறது.

மேலும் இந்த ஜிமெயில் சேவையில் அவ்வப்போது புதிய புதிய அம்சங்களை சேர்த்து வருகிறது கூகுள் நிறுவனம். பின்பு ஜிமெயில் பாதுகாப்பு விஷயத்தில் அதிக கவனம் செலுத்துகிறது கூகுள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
How to protect your Gmail accounts from third-party apps? Here are the instructions
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X