ஐபோனில் வைபை மூலம் ப்ரின்ட்டர் பயன்படுத்த சில டிப்ஸ்?

By Super
|

ஆய்வு, படிப்பு சம்மந்தமாக ப்ரின்ட் எடுக்கும் வசதி அதிகம் தேவைப்படும். ஆனால் எங்கிருந்தாலும், எவ்விடமாக இருந்தாலும் வைபை வசதி கொண்டு தொழில் நுட்ப சாதனங்களின் மூலமாக ப்ரின்ட் வசதியை இயக்க இங்கே புதிய வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளது. அதுவும் ஐபேட், ஐபோட் டச் மற்றும் ஐபோன் போன்ற ஐஓஎஸ் சாதனங்களில் இருந்து வைபை மூலமாக எப்படி ப்ரின்ட் வசதியினை பெறுவது என்று பார்க்கலாம்.

முதலில் ஆப்பிள் ஐஓஎஸ் எலக்ட்ரானிக் சாதனத்தில் ஏர் ப்ரின்ட் என்ற வசதி கொடுக்கப்பட்டுள்ளதா என்பதை பார்த்து கொள்வது அவசியம். இந்த ஏர் ப்ரின்ட் வசதி இ-மெயில்,ஃபோட்டோ, தகவல்கள் போன்றவற்றை எளிதாக ப்ரின்ட் செய்ய பபயன்படும்.

ஆப்பிள் ஐஓஸ் தொழில் நுட்ப சாதனத்தினத்தில் உள்ள ஏர் ப்ரின்ட் ஆப்ஷனை கொண்டு ப்ரின்டரையும், ஐஓஎஸ் சாதனத்தையும் வைபை மூலம் இணைத்து கொள்ள வேண்டும். இப்படி இணைக்கும் போது ஆட்டோமெட்டிக்காக அதில் ஏக்ஷன் பட்டன் வெளிப்படும். அதன் மூலம் ப்ரின்ட் வசதியினை பெறலாம்.

ஏர் ப்ரின்ட் வசதி, உங்களது ஐஓஎஸ் எலக்ட்ரானிக் சாதனத்தில் இல்லை என்றாலும், வைபை மூலம் ப்ரின்டரை இணைக்க இன்னொரு வழியும் உள்ளது. இதற்கு ஃபிங்கர் ப்ரின்ட் என்ற வசதியை பயன்படுத்தலாம். ஆனால் இதற்கு டெஸ்க்டாப் கம்ப்யூட்டரில் ஃபிங்கர் ப்ரின்ட் சாஃப்ட்வேரை முதலில் டவுன்லோட் செய்து கொள்ள வேண்டும்.

இதன் மூலம் ப்ரின்டர் வசதியினை செலக்ட் செய்து கொள்ள வேண்டும். ஆனால் இந்த ஃபிங்கர் ப்ரின்ட் வசதியினை ரூ. 1,114 விலைக்கு டவுன்லோட் செய்ய வேண்டியுள்ளது. இதன் பிறகு ஃபிங்கர் ப்ரின்ட் வசதியினை டவுன்லோட் செய்த டெஸ்க்டாப் மற்றும் ஐஓஎஸ் இயங்குதளம் கொண்ட எலக்ட்ரானிக் சாதனத்தை வைபை மூலம் இணைக்க வேண்டும்.

பின்பு முதலில் ஏர் ப்ரின்ட் வசதிக்கு செய்தது போலவே, ஏக்ஷன் பட்டன் பயன்படுத்தி ப்ரின்ட் வசதியினை எளிதாக பெறலாம். கையில் வைத்திருக்கும் வையர்லெஸ் ஐஓஎஸ் சாதனத்தின் மூலம் ப்ரின்ட் வசதியினை பெற இது எளிதான வழி.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X