Home
News

Google Pay இருக்கா? இனி இந்த இரண்டு விஷயங்களை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க.. ஏன்?

இந்தியாவில் கூகுள் பே (Google Pay) செயலியை அதிக மக்கள் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக இந்த செயலி மூலம் ஒருவருக்கொருவர் பணம் பரிமாற்றம் செய்வது, கடைக்குச் சென்று வாங்கும் சிறிய ரக பொருட்களுக்கும் ஸ்கேன் செய்து பணம் வழங்கும் முறை இப்போது அதிகரித்து வருகிறது. அதுவும் போன்பே, பேடிஎம் செயலிகளை விட இந்த கூகுள் பே செயலியை தான் அதிக மக்கள் பயன்படுத்துகின்றனர்.

கூகுள் பே மூலம் பணம் அனுப்பவும், பெறவும், பல்வேறு கட்டணங்களை செலுத்தவும் முடிகிறது. ஆனால், நாம் செய்யும் ஒவ்வொரு பரிவர்த்தனையும் நீண்ட காலத்திற்கு கூகுள் பேவில் பதிவாகி இருக்கும். தனிநபர் பாதுகாப்பை கருத்தில் கொள்பவர்களுக்கு இது ஒரு கவலையை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. ஆனால் அதிர்ஷ்டவசமாக, கூகுள் பே தனது பயனர்கள் தங்கள் டிரான்ஸாக்ஷன் (பரிவர்த்தனை) ஹிஸ்டரியை எளிதாக நீக்குவதற்கான விருப்பத்தை வழங்குகிறது.

Google Pay  இருக்கா? இனி விஷயங்களை கட்டயாம் தெரிஞ்சுக்கோங்க.. ஏன்?

சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது கூகுள் பே தளத்தில் டிரான்ஸாக்ஷன் ஹிஸ்டரியை (transaction history) எளிமையாக டெலிட் கூகுள் நிறுவனம் நேரடியான விருப்பங்களை வழங்குகிறது. அதுவும் டெஸ்க்டாப் மற்றும் மொபைல் என இரண்டு முறைகளில் டிரான்ஸாக்ஷன் ஹிஸ்டரியை டெலிட் செய்ய முடியும். இது குறித்த வழிமுறைகளை இந்த பதிவில் பார்க்கலாம்.

மொபைலில் டிரான்ஸாக்ஷன் ஹிஸ்டரியை (transaction history) டெலிட் செய்வது எப்படி?

ஸ்டெப்-1: உங்கள் மொபைலில் உள்ள கூகுள் பே செயலியை ஓப்பன் செய்யவும். பின்பு இந்த செயலியில் இருக்கும் உங்களது ப்ரொபைல் (Profile) ஐகானை கிளிக் செய்ய வேண்டும். அடுத்து செட்டிங்ஸ் (Settings) விருப்பம் இருக்கும். அதை க்ளிக் செய்ய வேண்டும்.

ஸ்டெப்-2: அதன்பின்னர் ப்ரைவஸி அண்ட் செக்யூரிட்டி (Privacy and Security) என்ற விருப்பத்தை தேர்வு செய்ய வேண்டும். அதை தொடர்ந்து டேட்டா அண்ட் பெர்சனலைசேஷன் (Data and Personalisation) என்பதை கிளிக் செய்ய வேண்டும். அதன்பின்னர் கூகுள் அக்கவுண்ட் லிங்க் (Google Account link) என்பதை கிளிக் செய்தவுடன் ஒரு புதிய விண்டோ திறக்கும்.

ஸ்டெப்-3: அதன்பின்பு பேமண்ட் டிரான்ஸாக்ஷன்ஸ் அண்ட் ஆக்டிவிட்டிஸ் (Payment transactions & activities) என்கிற விருப்பத்தைப் பார்க்க முடியும்.இப்போது அதை கிளிக் செய்து கீழே ஸ்க்ரோல் செய்யதால் Delete விருப்பத்தைப் பார்க்க முடியும். இப்போது டெலிட் என்பதை கிளிக் செய்தால் போது டிரான்ஸாக்ஷன் ஹிஸ்டரியை நீக்க முடியும்.

அதுவும் நீங்கள் டிரான்ஸாக்ஷன் ஹிஸ்டரியை நீக்க விரும்பும் தேதி அல்லது மணிநேர எண்ணிக்கையைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் பரிவர்த்தனை விவரங்களை நீக்கலாம். இது உங்கள் வசதிக்கேற்ப டிரான்ஸாக்ஷன் ஹிஸ்டரியை நீக்க அனுமதிக்கிறது.

Google Pay  இருக்கா? இனி விஷயங்களை கட்டயாம் தெரிஞ்சுக்கோங்க.. ஏன்?

டெஸ்க்டாப் மூலம் கூகுள் பே டிரான்ஸாக்ஷன் ஹிஸ்டரியை (transaction history) டெலிட் செய்து எப்படி?

ஸ்டெப்-1: முதலில் 'My Activity' page-க்கு சென்று உங்கள் கூகுள் கணக்கில் லாகின் (log in) செய்ய வேண்டும்.

ஸ்டெப்-2: அடுத்து பேமெண்ட் மற்றும் சப்ஸ்கிரிப்ஷன்(Payments & Subscriptions) என்பதை தேர்வு செய்ய வேண்டும். அதன்பின்பு Payment Info எனும் விருப்பம் தெரியும் அதை கிளிக் செய்ய வேண்டும். அதன்பின்னர் பேமண்ட் டிரான்ஸாக்ஷன்ஸ் அண்ட் ஆக்டிவிட்டிஸ் (Payment transactions & activities) என்பதைக் கிளிக் செய்து கீழே ஸ்க்ரோல் செய்தால் டிரான்ஸாக்ஷன் ஹிஸ்டரியை டெலிட் செய்துவிட முடியும்.

அதேபோல் கூகுள் பே செயலியில் அவ்வப்போது புதிய புதிய அம்சங்களை சேர்த்து வருகிறது கூகுள் நிறுவனம். குறிப்பாக இந்த செயலியில் வரும் ஒவ்வொரு அம்சங்களும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்றே கூறலாம்.

Best Mobiles in India

English summary
How to permanently delete Google Pay transaction history? Here are simple steps
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X