வீட்டைவிட்டு வெளியே வராமல் இலவசமாக EB பில் செலுத்துவது எப்படி?

|

இந்திய மக்கள் டிஜிட்டல் பேமெண்ட் முறைகளுக்கு மிகவும் பரிச்சயமாகிவிட்டனர். கடைக்குச் சென்று காய் வாங்குவது முதல் கரண்ட் பில்லுக்கு கட்டணம் செலுத்துவது வரை, நாம் பயன்படுத்தும் பெரும்பாலான சேவைக்குக் கட்டணம் செலுத்த மக்கள் இப்போது டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையைப் பயன்படுத்தப் பழகிவிட்டனர். குறிப்பாக, இப்போது இந்தியாவில் கூகிள் பே, போன்பே போன்ற ஆப்ஸ் மூலம் பணம் செலுத்துபவர்கள் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது. கூகிள் பே மூலம் நீங்கள் உங்களுடைய கரண்ட் பில் கட்டணத்தை சில நிமிடங்களில் செலுத்த முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா?

கூகிள் பே மூலம் கரண்ட் பில் செலுத்தத் தெரியாதா? கவலை வேண்டாம்..

கூகிள் பே மூலம் கரண்ட் பில் செலுத்தத் தெரியாதா? கவலை வேண்டாம்..

கூகிள் பே மூலம் கரண்ட் பில் கட்டணத்தை உங்களுக்குச் செலுத்தத் தெரியாது என்றால், கவலை வேண்டாம். இந்த பதிவின் மூலம் எப்படி சில நிமிடங்களில் உங்களுடைய கரண்ட் பில் கட்டணத்தை ஆன்லைன் மூலம் எளிமையாகச் செலுத்தலாம் என்பதைத் தெளிவாகப் பார்க்கலாம். இந்த செயல்முறை சிலருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பு உள்ளது. இன்னும் ஏராளமானோர் இணைய வழியில் கட்டணத்தைச் செலுத்தத் தெரியாத காரணத்தினால், நேரில் சென்று நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து அவர்களுடைய மின்சார கட்டணத்தைச் செலுத்தி வருகின்றனர்.

பெரிதும் பயனளிக்கும் ஆன்லைன் வழி மின்சார கட்டண முறை

பெரிதும் பயனளிக்கும் ஆன்லைன் வழி மின்சார கட்டண முறை

குறிப்பாக, வீட்டில் உள்ள பெரியவர்களுக்கு இந்த ஆன்லைன் வழி மின்சார கட்டண முறை பெரிதும் பயனளிக்கும். தமிழக அரசின் மின்சார வாரியம், மின்சார பயனாளர்களின் மின் கட்டணத்தை ஆன்லைன் வழியில் செலுத்த ஏற்கனவே சில ஆப்ஸ்களை கொண்டுள்ளது. அதேபோல், பயனர்கள் இப்போது அவர்களின் ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் Tamilnadu Electrity, அதானி, மகாவிதரன் போன்ற ஆப்ஸ் வழியாகவும் அவர்களுடைய மின்சார கட்டணத்தைச் செலுத்திட முடியும்.

உங்கள் Facebook கணக்கு ஹேக் செய்யப்பட்டால் என்ன செய்ய வேண்டும்? இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..உங்கள் Facebook கணக்கு ஹேக் செய்யப்பட்டால் என்ன செய்ய வேண்டும்? இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..

கூகிள் பே மூலம் எப்படி மின்சார கட்டணத்தை செலுத்துவது?

கூகிள் பே மூலம் எப்படி மின்சார கட்டணத்தை செலுத்துவது?

மற்றொரு சுலபமான வழி, மொபைலில் வைத்திருக்கும் பயனர்கள் கூகுள் பே, பேடிஎம் ஆப்ஸ்கள் மூலமாகவும் எளிதாக கரண்ட் பில் கட்டணத்தைச் செலுத்திடலாம். இந்த முறையைப் பயன்படுத்தி பணம் செலுத்துகையில், கேஷ்பெக் ஆஃபர்களும், வவுச்சர்களும் கூட கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பதிவில், மக்கள் அதிகமாகப் பயன்படுத்தப்படும் கூகிள் பே மூலம் எப்படி மின்சார கட்டணத்தை சில நிமிடங்களில் எளிதாகச் செலுத்துவது என்று பார்க்கலாம்.

Google Pay மூலம் கரண்ட் பில் செலுத்தும் செயல்முறை

Google Pay மூலம் கரண்ட் பில் செலுத்தும் செயல்முறை

  • முதலில் இந்த செயல்முறையைத் தொடங்குவதற்கு முன்பு, உங்கள் Google Pay கணக்குடன் வங்கிக் கணக்கு இணைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.
  • உங்கள் போனில் உள்ள Google Pay ஆப்ஸை கிளிக் செய்து ஓபன் செய்துகொள்ளுங்கள்.
  • இப்போது கூகுள் பே ஹோம்பேஜ் இல் காணப்படும் இரண்டாம் பிரிவு ஐகான்களில் இருந்து 'Pay Bills'
  • என்ற ஐகானை கிளிக் செய்யவும்.
  • அடுத்தபடியாக, கூகிள் பே காண்பிக்கும் பக்கத்தில் இருந்து, 'Electricity' என்ற ஆப்ஷனை தேர்வு செய்யுங்கள்.
  • பூமியில் 630 அடி ஆழத்தில் தோன்றிய அடர்ந்த காடு.. மனிதனால் அறியப்படாத புதிய உயிர்களின் சரணாலயமா இது?பூமியில் 630 அடி ஆழத்தில் தோன்றிய அடர்ந்த காடு.. மனிதனால் அறியப்படாத புதிய உயிர்களின் சரணாலயமா இது?

    Tamilnadu Electrity (TNEB) விருப்பத்தை கிளிக் செய்ய மறக்காதீர்கள்

    Tamilnadu Electrity (TNEB) விருப்பத்தை கிளிக் செய்ய மறக்காதீர்கள்

    • அதனைத் தொடர்ந்து, கரண்ட் ஏஜென்சியை தேர்ந்தெடுக்க அறிவுறுத்தப்படும்.
    • அதிலிருக்கும் விருப்பங்களில் இருந்து Tamilnadu Electrity (TNEB) என்ற விருப்பத்தை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.
    • இப்போது வரை, நீங்கள் செய்ய வேண்டிய வேளைகளில் பாதி வேலை முடிந்தது. இனி உங்கள் மின்சார கணக்கு விபரம் மற்றும் தொகையைச் செலுத்துவது மட்டுமே எஞ்சியுள்ளது.
    • இப்போது, உங்கள் கன்ஸ்யூமர் நம்பர் மற்றும் பில்லிங் யூனிட் நம்பர் கேட்கப்படும்.
    • சரியான கன்ஸ்யூமர் நம்பரை உள்ளிடவும்

      சரியான கன்ஸ்யூமர் நம்பரை உள்ளிடவும்

      • இது, உங்கள் வீட்டின் மீட்டரை துல்லியமாகக் கண்டறிய உதவியாக இருக்கும் என்பதனால் சரியான கன்ஸ்யூமர் நம்பரை உள்ளிடவும்.
      • மேலும், உங்கள் கணக்கிற்கு Nickname டைப் செய்யும் அறிவுறுத்தப்படும்.
      • இது ஒரே பயனர் பல வீடுகளின் மின்சார கணக்குகளைச் செலுத்தப் பல கணக்குள் திறக்கும் போது, உதவியாக இருக்கும்.
      • இந்த பிராசஸ் முடிந்தால், திரையில் உங்கள் வீட்டிற்கான கரண்ட் பில் எவ்வளவு என்பது காட்டப்படும்.
      • ரூ.300 விலைக்குள் இத்தனை சிறந்த Airtel, Vi திட்டங்களா? பட்ஜெட் விலையில் பெஸ்டான நன்மைகள்..ரூ.300 விலைக்குள் இத்தனை சிறந்த Airtel, Vi திட்டங்களா? பட்ஜெட் விலையில் பெஸ்டான நன்மைகள்..

        Pay கிளிக் செய்து கட்டணத்தைச் செலுத்துங்கள்

        Pay கிளிக் செய்து கட்டணத்தைச் செலுத்துங்கள்

        • அந்த தொகையை கிளிக் செய்து 'Pay' என்ற விருப்பத்தை கிளிக் செய்து கூகிள் பே PIN நம்பரை உள்ளிட்டுத் தொகையைச் செலுத்துங்கள்.
        • இப்படி ஆன்லைன் மூலமாக நீங்கள் பணம் செலுத்தி உங்கள் கரண்ட் பில் கட்டணத்தை வீட்டில் இருந்தபடியே செலுத்தி முடிக்கலாம்.
        • கூகிள் பே மூலம் கரண்ட் பில் செலுத்துவதில் உள்ள மற்றொரு நன்மை என்னவென்றால், ஒருமுறை ஒரு கணக்கிற்கு நீங்கள் கட்டணம் செலுத்தினால், அந்த கன்ஸ்யூமர் நம்பர் Google Pay இல் சேமித்து வைக்கப்படும்.

          Google Pay மூலம் கரண்ட் பில் செலுத்துவதனால் கிடைக்கும் நன்மை என்ன தெரியுமா?

          Google Pay மூலம் கரண்ட் பில் செலுத்துவதனால் கிடைக்கும் நன்மை என்ன தெரியுமா?

          அடுத்தமுறை நீங்கள் பணம் செலுத்த இவ்வளவு செயல்முறைகளை மீண்டும் செய்ய வேண்டியதில்லை. Google Pay ஓபன் செய்து நேராக Tamilnadu Electrity ஐகானை கிளிக் செய்து உங்கள் கணக்கில் கட்டப்படும் தொகை சில வினாடிகளில் செலுத்தி முடித்திடமுடியும். அதேபோல், உங்கள் கரண்ட் பில் செலுத்தப்பட வேண்டிய இறுதி நாள் குறித்த எச்சரிக்கை நோட்டிபிகேஷனையும் Google Pay உங்களுக்கு அனுப்பி, மின் கட்டணம் பற்றிய தகவலை நினைவுபடுத்துகிறது என்பது சிறப்பானது.

          டீனி-டைனி ரோபோ நண்டு: விரைவில் மனித உடலுக்குள் சுற்றித் திரியுமா? இது புதிய சாதனை படைப்பு..டீனி-டைனி ரோபோ நண்டு: விரைவில் மனித உடலுக்குள் சுற்றித் திரியுமா? இது புதிய சாதனை படைப்பு..

Best Mobiles in India

English summary
How To Pay Electricity Bill Payment Online By Using Google Pay App : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X