Home
News

EB ஆபீஸே போக வேண்டியதில்லை.! வீட்டில் இருந்தபடியே இனி பில் கட்டலாம்.!

ஸ்மார்ட்போன் (Smartphone) மற்றும் இன்டர்நெட்டின் (Internet) பயன்பாடு அதிகரித்து விட்ட நிலையில் பெரும்பாலானோர் எந்த ஒரு பண பரிவர்த்தனையும் ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தி செய்வதில்லை. ரோட்டு ஓரத்தில் இருக்கும் கடை வியாபாரிகள் முதல் பெரிய பெரிய வர்த்தக தளங்கள் வரை அனைவருமே டிஜிட்டல் பரிவர்த்தனை செய்வதை தான் விரும்புகின்றனர்.

அரசாங்கத்திற்கு செலுத்தும் கட்டணங்கள் மட்டுமே நேரில் சென்று செலுத்தப்பட்டு வந்த நிலையும் இப்போது மாறிவிட்டது. அப்படி மக்களுக்கு மிகவும் அத்தியாவசியமான ஒன்றாக இருக்கும் மின்சாரத்திற்கான மின் கட்டணத்தை வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் செலுத்துவதற்கான வசதியை தமிழக அரசு ஏற்படுத்தியுள்ளது. இணையதளத்தை பயன்படுத்தி மின் கட்டணத்தை எப்படி செலுத்துவது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

EB ஆபீஸே போக வேண்டியதில்லை.! வீட்டில் இருந்தபடியே இனி பில் கட்டலாம்.!

தமிழ்நாட்டில் மின் கட்டணத்தை பராமரிப்பதற்கான ஒரு பிரத்தியேக நிறுவனம் தமிழ்நாடு ஜெனரேஷன் அண்ட் டிஸ்ட்ரிபியூஷன் கார்ப்பரேஷன் (Tamil Nadu Generation and Distribution Corporation) என்று கூறப்படும் TANGEDCO. தமிழ்நாட்டில் மின்சார உற்பத்தி செய்து அதனை பகிர்ந்து அளிக்கும் அனைத்து நிறுவனங்களும் இந்த TANGEDCO-ல் கீழ் தான் செயல்படும்.

ஆன்லைன் மூலம் மின் கட்டணத்தை செலுத்த முதலில் TANGEDCO-வின் பிரத்தியேக இணையதளமான https://www.tangedco.org/en/tangedco/# என்ற இந்த முகவரிக்கு செல்ல வேண்டும். TANGEDCO இணையதளத்தின் ஹோம் பேஜின் (Home Page) மேல்பக்கம் கொடுத்துள்ள தேர்வுகளில் ஆன்லைன் சர்வீசஸ் (Online Services) என்பதை தேர்வு செய்ய வேண்டும்.

ஆன்லைன் சர்வீசஸ்-ன் கீழ் கொடுக்கப்பட்டுள்ள ஐந்து தேர்வுகளில் ஆன்லைன் பில் பேமென்ட் (Online Bill Payment) என்பதனை தேர்ந்தெடுக்கவும். ஆன்லைன் பேமென்ட் என்பதை கிளிக் செய்தவுடன் வேறு ஒரு திரை தோன்றும். நீங்கள் ஏற்கனவே ரெஜிஸ்டர் (Register) செய்து உங்களிடம் யூசர் ஐடி (UserID) மற்றும் பாஸ்வேர்ட் (Password) இருந்தால் அவற்றினை உள்ளீடு செய்து லாகின் (Login) செய்து கொள்ளலாம்.

EB ஆபீஸே போக வேண்டியதில்லை.! வீட்டில் இருந்தபடியே இனி பில் கட்டலாம்.!

ஏற்கனவே ரெஜிஸ்டர் செய்யாதவர்கள் ஆன்லைன் பேமெண்ட் (Online Payment) செய்வதற்காக புதிதாக ரெஜிஸ்டர் செய்ய வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. இந்தத் திட்டத்தில் இருக்கும் ஒரு சிறப்பம்சம் என்னவென்றால் ரெஜிஸ்டர் செய்யாமலேயே குவிக் பே (Quick Pay) என்ற தேர்வினை பயன்படுத்தி ஒவ்வொரு முறையும் மின் கட்டணத்தை செலுத்திக் கொள்ளலாம்.

திரையின் வலது பக்கம் குவிக் பே என்ற நீல நிற பட்டன் ஒன்று இருக்கும். அதனை கிளிக் செய்தால் வேறொரு திரை தோன்றும். அதில் உங்கள் மின் கட்டணத்திற்கான வாடிக்கையாளர் எண்ணை செலுத்த வேண்டும். உங்களது வாடிக்கையாளர் எண் உங்களுக்கு தெரியவில்லை என்றால் இதற்கு முன்னர் நீங்கள் நேரில் சென்று கட்டணம் செலுத்தியதற்கான ரசீது, உங்களது மின் அட்டை, இதற்கு முன் ஆன்லைன் பேமெண்ட் செய்திருந்தால் அதன் ரசீது என்ற இந்த மூன்றிலும் உங்களுடைய வாடிக்கையாளர் எண் குறிப்பிடப்பட்டிருக்கும்.

உங்கள் வாடிக்கையாளர் எண்ணை செலுத்தி திறையில் கொடுக்கப்பட்டிருக்கும் கேப்ட்சா (Captcha) எண்களை டைப் செய்து சப்மிட் (Submit) கொடுக்க வேண்டும்.

சப்மிட் செய்த பின்னர் உங்கள் வாடிக்கையாளர் எண், உங்களுடைய பகுதி, மின் கட்டணத்திற்கான தொகை, கட்டணம் செலுத்த கடைசி நாள் என்று அனைத்து விபரங்களும் திரையில் தோன்றும்.

ஆன்லைனில் மின்சார கட்டணத்த செலுத்த கிரெடிட் கார்டு (Credit Card), டெபிட் கார்டு (Debit Card), கியூ ஆர் கோட் (QR Code), யுபிஐ (UPI), நெட் பேங்கிங் (Net Banking) போன்ற அனைத்து டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை சேவைகளை வழங்கும் முறைகளை பயன்படுத்தலாம்.

தமிழ்நாட்டின் பிரத்தியேக மின் சேவைக்கான TANGEDCO-வை தவிர்த்து பேடிஎம் (Paytm), போன் பே (PhonePe), கூகுள் பே (Google Pay) போன்ற மற்ற யுபிஐ பணப்பரிவர்த்தனை செயலிகள் மூலமும் மின்சார கட்டணத்தை செலுத்த முடியும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
How to Pay EB Bill Online
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X