கூகுள் பே அக்கவுண்ட் ஓபன் செய்வது எப்படி? கிரெடிட், டெபிட் கார்டுகள் இணைப்பது எப்படி? இதோ வழிமுறைகள்.!
பேடிஎம் நிறுவனத்தில் பல பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளதால், தற்போது கூகுள் பே, போன்பே போன்ற செயலிகளைத் தான் மக்கள் அதிகம் பயன்படுத்துகின்றர். அதுவும் கூகுள் நிறுவனம் தனது கூகுள் பே செயலியில் பல்வேறு புதிய அம்சங்களைக் கொண்டுவந்த வண்ணம் உள்ளது.
குறிப்பாக கூகுள் பே செயலியில் வரும் ஒவ்வொரு அம்சங்களும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது. சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது கூகுள் பே கணக்கு உருவாக்குவது எப்படி? மற்றும் வங்கிக் கணக்கு சேர்ப்பது எப்படி என்பது குறித்து விரிவான தகவல்களை இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

இது மிகவும் முக்கியம்: நீங்கள் கூகுள் பே (Google Pay) செயலியில் கணக்கு தொடங்க மொபைல் எண், அந்த மொபைல் எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்கு மற்றும் கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டு தேவை என்பதை நினைவில் கொள்க. இப்போது கூகுள் கூகுள் பே செயலியில் கணக்கு தொடங்கும் வழிமுறைகளைப் பார்ப்போம்.
வழிமுறை-1 முதலில் நீங்கள் பிளே ஸ்டோரில் கூகுள் பே செயலியைப் பதிவிறக்கம் செய்யவும். அடுத்து உங்களது மொழியைத் தேர்வு செய்து, மொபைல் நம்பரை அந்த செயலியில் பதிவிடவும். அடுத்து Continue என்று கொடுத்து எந்த கூகுள் (ஜிமெயில்) கணக்கில் கூகுள் பே அக்கவுண்ட் ஓபன் செய்ய வேண்டும் என்பதைத் தேர்வு செய்யவும்.
வழிமுறை-2: அதன்பின்பு உங்களது மொபைல் போனுக்கு ஓடிபி வரும். அந்த ஒடிபி-ஐ அந்த செயலியில் என்டர் செய்தால், கூகுள் பே ஹோம் பக்கம் ஓபன் ஆகும். இனி தான் முக்கியமான வேலை இருக்கிறது.

வழிமுறை-3: அதாவது அந்த கூகுள் பே செயலியில் உள்ள profile icon-ஐ கிளிக் செய்தால், Add bank account என்ற விருப்பம் இருக்கும், அதைத் தேர்வு செய்து உங்களுடைய வங்கியை செலக்ட் செய்ய வேண்டும். அடுத்து Continue என்பதை கிளிக் செய்யவும்.
வழிமுறை-4: அடுத்து கூகுள் பே தானாகவே உங்கள் வங்கி கணக்கு, அது இணைக்கப்பட்ட மொபைல் நம்பரை கண்டறிந்து உங்களுக்கு எஸ்எம்எஸ் அனுப்பும். இது Verifiy ஆன பின்பு Enter UPI PIN என்பதைக் கொடுத்து புதிய பின் செட் செய்ய வேண்டும். அதன்பின்பு நீங்கள் பரிவர்த்தனை செய்யத் தொடங்கலாம்.

அதேபோல் கூகுள் பே செயலியில் கிரெடிட், டெபிட் ADD செய்வது எப்படி என்று விரிவாகப் பார்ப்போம். அதற்கு முதலில் உங்களுடைய கூகுள் பே செயலியில் வலப்புறத்தில் உள்ள profile picture-ஐ கிளிக் செய்ய வேண்டும். அடுத்து கீழே Scroll செய்தால் Add credit or debit cards எனும் ஆப்ஷன் இருக்கும்.
உங்களுக்குத் தேவையான கிரெடிட் அல்லது டெபிட் கார்டை தேர்வு செய்தபின்பு Add card என்பதை கிளிக் செய்யவும். இதைக் கொடுத்தபின்பு Enter details manually ஆப்ஷன் கொடுத்து கார்டு விவரங்களை முழுமையாகப் பூர்த்தி செய்ய வேண்டும்.
விவரங்கள் அனைத்தும் முழுமையாகக் கொடுத்த பின்பு Save கொடுக்கவும். அவ்வளவு தான். அதன்பின்பு நேரடியாக கிரெடிட், டெபிட் கார்டு மூலமாக பரிவர்த்தனை செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








