50 இன்ச் TV ஆர்டர் செஞ்சா 40 இன்ச் தான் வருது.! மீதி 10 இன்ச் எங்கனு கேட்டா அசிங்கப்படுத்துராங்க.! என்னாச்சு?

|

எந்த பொருளை வாங்கினாலும் கவனத்துடன் வாங்க வேண்டும், ஒரு முறைக்கு பல முறை செக் செய்து வாங்க வேண்டும், நேரில் சென்று பார்த்து வாங்க வேண்டும் என்பது போன்ற விஷயங்களை எல்லாம் மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக மறந்துவருகிறார்கள். இதற்கான ஒரு முக்கிய காரணமாகப் பெருகி வரும் 'ஆன்லைன் ஷாப்பிங் (Online shopping) கலாச்சாரத்தை நாம் குறிப்பிடலாம்.

போனில் புகைப்படங்களைப் பார்த்து டிவி வாங்குவது சிறந்ததா?

போனில் புகைப்படங்களைப் பார்த்து டிவி வாங்குவது சிறந்ததா?

கடை கடையாக ஏறி இறங்கி, நேரில் சென்று விசாரித்து, பொருளின் தரத்தை ஆராய்ந்து ஷாப்பிங் செய்யும் அனுபவத்தை இந்த ஆன்லைன் ஷாப்பிங் கலாச்சாரம் முற்றிலுமாக மாற்றிவிட்டது. வீட்டில் இருந்தபடி, போனில் சில புகைப்படங்களைப் பார்த்துவிட்டு, இதற்கு முன்னால் அந்த பொருளை வாங்கிய நபர் என்ன ரெவியூவை வழங்கியிருக்கிறார் என்பதை நோட்டம் பார்க்கிறோம்.

ஆன்லைன் ஷாப்பிங்கில் ஏற்படும் சிக்கல்கள்.!

ஆன்லைன் ஷாப்பிங்கில் ஏற்படும் சிக்கல்கள்.!

இதற்கு பின், என்ன சலுகை கிடைக்கிறது என்பதை மட்டும் பெரியளவில் கருத்தில்கொண்டு, நாம் வாங்க விரும்பும் பொருளை கண்முடித்தமானாகவும், ஒரு குருட்டு நம்பிக்கையுடனும் ஆர்டர் செய்துவிடுகிறோம். பல நேரங்களில் ஆன்லைன் ஷாப்பிங் முறையில் பொருட்களை வாங்குவது நல்ல அனுபவத்தை வழங்கினாலும், சில நேரங்களில் இது நாம் நினைப்பது போல் நடப்பதில்லை.

லட்ச ரூபாய் போனில் கூட இது இன்னும் கிடைக்கல.! ரூ.10,000-தில் பட்டைய கிளப்பும் Lava 5ஜி போன்.!லட்ச ரூபாய் போனில் கூட இது இன்னும் கிடைக்கல.! ரூ.10,000-தில் பட்டைய கிளப்பும் Lava 5ஜி போன்.!

போன் ஆர்டர் செய்தால் சோப்பு டப்பா கொடுக்குறாங்க.!

போன் ஆர்டர் செய்தால் சோப்பு டப்பா கொடுக்குறாங்க.!

ஆம், உலகளவில் பெரும்பாலான ஆன்லைன் ஷாப்பிங் பயனர்களுக்கு சில நேரங்களில் தவறான பொருட்கள் அல்லது தரமில்லாத பொருட்கள் டெலிவரி செய்யப்படுகின்றன. உதாரணமாக, விலை உயர்ந்த ஸ்மார்ட்போன் ஆர்டர் செய்தால், சோப்பு டப்பா டெலிவரி செய்யப்படுகிறது. அல்லது வேறு எதாவது ஒரு பொருள் மாற்றி டெலிவெரி செய்யப்படுகிறது அல்லது சேதமடைந்த பொருட்கள் விநியோகம் செய்யப்படுகின்றன.

50' இன்ச் டிவி வாங்கியவருக்கு எழுந்த சிக்கல்.!

50' இன்ச் டிவி வாங்கியவருக்கு எழுந்த சிக்கல்.!

இதுபோன்ற சிக்கல்கள் அடிக்கடி ஆன்லைன் ஷாப்பிங் வாடிக்கையாளர்களுக்கு நிகழ்கிறது என்றால் கூட, இப்போது ஒரு விசித்திரமான நிகழ்வு ஆன்லைன் ஷாப்பிங் வாடிக்கையாளர்களை கவலைக்குள்ளாக்கியுள்ளது. சமீபத்தில் ஒரு வாடிக்கையாளர் ஆன்லைன் ஷாப்பிங் சைட் வழியாக புதிய Samsung 8 சீரிஸ் TU8000 என்ற 50' இன்ச் மாடலை ஆர்டர் செய்திருக்கிறார்.

வெயிட்டிங் லிஸ்ட் ரயில் டிக்கெட்டிற்கு மாற்றாக இலவச விமான டிக்கெட்.! இந்த ஆப்ஸை நோட் பண்ணுங்க.!வெயிட்டிங் லிஸ்ட் ரயில் டிக்கெட்டிற்கு மாற்றாக இலவச விமான டிக்கெட்.! இந்த ஆப்ஸை நோட் பண்ணுங்க.!

டேப் வைத்து அளந்து பார்த்து ஆடிப்போய்விட்டார்.!

டேப் வைத்து அளந்து பார்த்து ஆடிப்போய்விட்டார்.!

இவர் ஆர்டர் செய்தது போல, சாம்சங் 50' டிவி அவருக்கு விநியோகம் செய்யப்பட்டிருக்கிறது. அந்த நபர் எப்போதும் ஆன்லைன் மூலம் வாங்கும் பொருட்களை சோதனை செய்து பார்ப்பதை பழக்கமாகக் கொண்டிருக்கிறார். அதனால், அவருக்கு விநியோகம் செய்யப்பட்ட டிவி உண்மையிலேயே 50' இன்ச் மாடல் தான என்பதை டேப் வைத்து அளந்து பார்த்திருக்கிறார்.

டிவி பெட்டி கூட 50' இன்ச் இல்லையே.! டிவி எப்படி 50' இன்ச் இருக்கும்?

டிவி பெட்டி கூட 50' இன்ச் இல்லையே.! டிவி எப்படி 50' இன்ச் இருக்கும்?

முதலில், டிவி டெலிவரி செய்யப்பட்ட டிவி பாக்ஸை அளவெடுத்துள்ளார், அது வெறும் 49' இன்ச் மட்டுமே இருப்பதாக டேப் ரீடிங் காண்பித்துள்ளது. டிவியை வாங்கிய நபர் பெட்டியின் அளவை பார்த்து ஆடிப்போனார். டிவி பெட்டியே வெறும் 49' இன்ச் இருந்தால், உள்ளிருக்கும் டிவியின் அளவு எவ்வளவு கம்மியாக இருக்கும் என்று யோசித்து, அதையும் வேகமாக அளவெடுத்திருக்கிறார்.

இந்த Smartwatch வாங்க எல்லாரும் கும்பலா படை எடுக்குறாங்க.! ஏன்னா இப்போ 90% விலை கம்மி.!இந்த Smartwatch வாங்க எல்லாரும் கும்பலா படை எடுக்குறாங்க.! ஏன்னா இப்போ 90% விலை கம்மி.!

50' இன்ச் ஆர்டர் செய்தால் 40' இன்ச் மட்டுமே கிடைத்திருக்கிறது

50' இன்ச் ஆர்டர் செய்தால் 40' இன்ச் மட்டுமே கிடைத்திருக்கிறது

டிவியை அளவெடுத்துப் பார்த்தபோது, அது மொத்தமாகவே வெறும் 40' இன்ச் மட்டுமே இருந்ததாகக் கூறியுள்ளார். அவரை 'மோசம் செய்துவிட்டார்கள்' என்று கூறி, அளவெடுத்து புகைப்படங்களை ஆன்லைன் சைட்டில் பதிவிட்டு புகாரையும் எழுப்பியிருக்கிறார். அவர் ஆர்டர் செய்தது 50' இன்ச் டிவி என்றும், ஆனால் அவருக்குக் கிடைத்தது வெறும் 40' இன்ச் டிவி தான் என்றும் புகார் அளித்துள்ளார்.

புகார் செய்தவரை அசிங்கப்படுத்தியதற்கு காரணம் என்ன தெரியுமா?

புகார் செய்தவரை அசிங்கப்படுத்தியதற்கு காரணம் என்ன தெரியுமா?

ஒன்று, தான் ஆர்டர் செய்த அதே 50' இன்ச் டிவியை தனக்கு மாற்றி தரவேண்டும். அல்லது தனக்கு பணத்தைத் திருப்பி தர வேண்டும் என்று அவர் அந்த புகாரில் தெரிவித்திருக்கிறார். ஆனால், இறுதியில் நிறுவனம் கொடுத்த டிவிஸ்ட் அவர் தான் தவர் செய்திருக்கிறார் என்பதை சுட்டிக்காட்டி அசிங்கப்படுத்திவிட்டது. பொதுவாக, இந்த தவறை நாம் அனைவருமே செய்வோம் என்பதே உண்மை.

உங்க டிவியை இப்படி தான் அளக்கணும்.. இல்லைனா குட்டியாகிடும்.!

உங்க டிவியை இப்படி தான் அளக்கணும்.. இல்லைனா குட்டியாகிடும்.!

அந்த தவறு என்னவென்றால், அந்த நபர் டிவியை தவறான முறையில் அளந்து பார்த்திருக்கிறார். அவர் ஹாரிசாண்டலாக அளவெடுத்தது தவறான முறையாகும். எப்போதும், ஒரு டிவியை நாம் அளவிடும் போது, அவற்றை நாம் டயகனல், அதாவது டிவிக்கு குறுக்கே அளவிட வேண்டும். இது தான் சரியான அளவிடும் முறையாகும். டிவி ஸ்க்ரீன் சைஸ் என்பதை நாம் இப்படி அளந்தால் மட்டுமே சரியாக இருக்கும்.உங்கள் டிவி சரியான அளவில் இருக்கிறதா என்று உடனே இப்படி செக் செய்து பாருங்கள்.

Best Mobiles in India

English summary
How to measure Tv screen size correctly with using tape if not your Tv size may shrink

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X