வாட்ஸ்அப் இன் 'இந்த' புதிய அம்சங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா? ஸ்டிக்கர் முதல் பாதுகாப்பு வரை- டாப் டக்கர்..!

|

வாட்ஸ்அப் பயனர்களுக்கு சாட்டிங் செய்யும் போது, சாட்டிங்கை சுவாரஸ்யமானதாக மாற்ற ஸ்மைலி மற்றும் ஸ்டிக்கர்களை பயனர்கள் பயன்படுத்துகின்றனர். வாட்ஸ் அப் நிறுவனம் சில ஆண்டுகளுக்கு முன்னாள் வாட்ஸ் அப் ஸ்டிக்கர் சேவையை அறிமுகம் செய்தது. இதனை தொடர்ந்து பல விதமான ஸ்டிக்கர் பேக்கள் தொடர்ந்து அறிமுகம் செய்யப்பட்டது. இதில் பலர் உருவாக்கிய ஸ்டிக்கர் பேக்களும் பதிவிறக்கம் செய்ய கிடைத்தது. இப்போது வாட்ஸ்அப் அதன் பயனர்களுக்கு இப்போது தங்களுக்கு தேவையான ஸ்டிக்கர்களை தாங்களே உருவாக்க அனுமதிக்கிறது.

வாட்ஸ்அப் இல் உங்களுக்கு பிடித்தமான ஸ்டிக்கரை எப்படி உருவாக்குவது?

வாட்ஸ்அப் இல் உங்களுக்கு பிடித்தமான ஸ்டிக்கரை எப்படி உருவாக்குவது?

வாட்ஸ்அப் இல் உங்கள் சொந்த ஸ்டிக்கர்களை உருவாக்கும் முறையை பற்றி இப்போது பார்க்கலாம். வாட்ஸ்அப் வெப் மற்றும் டெஸ்க்டாப்பிற்கான வாட்ஸ்அப்பின் புதிய கருவி மூலம் தனிப்பயன் ஸ்டிக்கர்களை உருவாக்குவது எளிதாகிறது. இந்தப் புதிய கருவி மூலம் எந்தப் படத்தையும் நீங்கள் எடிட் செய்து, அதை எமோஜிகள் உடன் இணைத்து, டெக்ஸ்ட் உரைகளைச் சேர்த்து, ஸ்டிக்கர்களாக மாற்ற பயனர்களுக்கு இப்போது அனுமதி கிடைக்கிறது.

பிடித்தமான ஸ்டிக்கர்களை நீங்களே உருவாக்கும் செயல்முறை

பிடித்தமான ஸ்டிக்கர்களை நீங்களே உருவாக்கும் செயல்முறை

இந்த புதிய முறைப்படி எப்படி உங்களுக்கு பிடித்தமான ஸ்டிக்கர்களை நீங்களே உருவாக்கலாம் என்பதை பார்க்கலாம். ஸ்டிக்கர் மேக்கர் டூலை அணுக நீங்கள் முதலில் உங்களின் வாட்ஸ்அப் பயன்பாட்டை திறக்க வேண்டும். வாட்ஸ்அப் சாட் விண்டோவில் உள்ள இடத்திற்கு செல்லவும் > அட்டாச் ஆப்ஷனைக் கிளிக் செய்யவும். தெரியாதவர்களுக்கு பேப்பர் கிளிப் போன்ற ஐகானை காணிப்பீர்கள். பின்னர் காணப்படும் ஸ்டிக்கர் என்ற விருப்பத்தை தேர்வு செய்யுங்கள்.

தங்கத்தை விட அதிக மதிப்பு கொண்ட தங்கத்தை விட அதிக மதிப்பு கொண்ட "பாறை".. உண்மையில் இந்த பாறை என்னவென்று தெரியுமா? எதற்கு பயன்படும்?

உங்களுக்கு பிடித்தபடி ஸ்டிக்கரை எடிட் செய்யுங்கள்

உங்களுக்கு பிடித்தபடி ஸ்டிக்கரை எடிட் செய்யுங்கள்

தனிப்பயன் ஸ்டிக்கரை உருவாக்க நீங்கள் விரும்பும் புகைப்படத்தைப் பதிவேற்றம் செய்யுங்கள். அப்லோட் செய்யப்பட்ட பின்னர் நீங்கள் விரும்பும் வகையில் எடிட் செய்துகொள்ளலாம். அதற்கு பின் உங்களுக்கு அதில் ஏதேனும் வாக்கியம் அல்லது வார்த்தைங்களை சேர்க்க விரும்பினால் டெக்ஸ்ட் ஐகானை கிளிக் செய்து அவற்றை உள்ளிடவும். இறுதியாக உங்களின் தனிப்பயன் ஸ்டிக்கருக்கு பெயர் கொடுத்து அவற்றை சேவ் செய்துகொள்ளுங்கள். இந்த அம்சத்துடன் வாட்ஸ்அப் இன்னும் சில புதிய அம்சங்களை தற்போது அறிமுகம் செய்துள்ளது.

வாட்ஸ்அப் அறிமுகம் செய்த 'ஃப்ளாஷ் கால்ஸ்' மற்றும் 'மெசேஜ் லெவல் ரிப்போர்டிங்' பாதுகாப்பு அம்சம்

வாட்ஸ்அப் அறிமுகம் செய்த 'ஃப்ளாஷ் கால்ஸ்' மற்றும் 'மெசேஜ் லெவல் ரிப்போர்டிங்' பாதுகாப்பு அம்சம்

கடந்த செவ்வாயன்று, உடனடி செய்தி அனுப்பும் தளமான வாட்ஸ்அப் இந்தியாவில் உள்ள பயனர்களுக்காக இரண்டு புதிய பாதுகாப்பு அம்சங்களை தற்பொழுது அறிமுகம் செய்துள்ளது. இதில் முதல் அம்சம் 'ஃப்ளாஷ் கால்ஸ்' (Flash Calls) என்று அழைக்கப்படும் ஒரு பாதுகாப்பு அம்சத்தையும், மற்றும் "மெசேஜ் லெவல் ரிப்போர்டிங்" (Message Level Reporting) என்ற பாதுகாப்பு அம்சத்தையும் நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. இந்த இரண்டு அம்சங்களும் பயனர்களுக்கு சிறந்த பாதுகாப்பையும், ஆப்ஸின் பயன்பாட்டின் மீதான கட்டுப்பாட்டையும் வழங்கும் என்று வாட்ஸ்அப் நிறுவனம் கூறியுள்ளது.

ஏசியை குளிர்காலத்தில் பயன்படுத்தலாமா? இதனால் ஏசியில் கோளாறு ஏற்படுமா? கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..ஏசியை குளிர்காலத்தில் பயன்படுத்தலாமா? இதனால் ஏசியில் கோளாறு ஏற்படுமா? கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..

ஃபிளாஷ் கால்ஸ் பாதுகாப்பு அம்சம் என்ன செய்யும்?

ஃபிளாஷ் கால்ஸ் பாதுகாப்பு அம்சம் என்ன செய்யும்?

ஃபிளாஷ் கால்ஸ் என்ற இந்த புதிய அம்சம், இப்போது புதிதாக ஆண்ட்ராய்டு பயன்படுத்தும் பயனர்கள் மற்றும் தங்கள் சாதனங்களை அடிக்கடி அப்டேட் செய்யும் பயனர்களுக்கு உள்நுழைய அனுமதிக்கிறது. இந்த அம்சம் SMS க்குப் பதிலாக தானியங்கி அழைப்பின் மூலம் வாட்ஸ்அப் சரிபார்ப்பை எளிதாக்குகிறது. இந்த அம்சம் கிடைக்காத நபர்கள், உங்கள் ஸ்மார்ட்போனில் கூகிள் பிளே ஸ்டோர் ஓபன் செய்து, உங்களுடைய வாட்ஸ்அப் பயன்பாட்டை அப்டேட் செய்து முயற்சித்து பாருங்கள்.

மெசேஜ் லெவல் ரிப்போர்டிங் பாதுகாப்பு அம்சம் என்ன செய்யும்?

மெசேஜ் லெவல் ரிப்போர்டிங் பாதுகாப்பு அம்சம் என்ன செய்யும்?

வாட்ஸ்அப் பயனர்கள் தங்களுக்குப் பிடிக்காத உள்ளடக்கத்தை பற்றி புகார் அளிக்க, இப்போது அதிக சுதந்திரம் வழங்கபட்டுள்ளது. இதன் மூலம், மக்கள் மெசேஜ் லெவல் ரிப்போர்டிங் (Message Level Reporting) அம்சத்தின் மூலம் WhatsApp இல் பெறப்பட்ட ஒரு குறிப்பிட்ட செய்தியைப் பற்றி நிறுவனத்திடம் நேரடியாக புகாரளிக்கலாம். உங்களுக்கு பிடிக்காத ஒரு பயனரைப் புகாரளிக்க அல்லது அவர்களை பிளாக் செய்ய, அவர்கள் உங்களுக்கு அனுப்பிய குறிப்பிட்ட மெசேஜ்ஜை லாங் பிரஸ் செய்து, பக்கத்தில் தோன்றும் விருப்பத்தை கிளிக் செய்யலாம்.

800 கோடி மக்கள்.. 1,00,000 ஆண்டுகள் வாழத் தேவையான ஆக்சிஜன் நிலவில் உள்ளது.. உண்மையா? என்ன சொல்றீங்க?800 கோடி மக்கள்.. 1,00,000 ஆண்டுகள் வாழத் தேவையான ஆக்சிஜன் நிலவில் உள்ளது.. உண்மையா? என்ன சொல்றீங்க?

வாட்ஸ்அப் வெளியிட்டுள்ள புதிய பீட்டா அப்டேட்டில் என்ன இருக்கிறது?

வாட்ஸ்அப் வெளியிட்டுள்ள புதிய பீட்டா அப்டேட்டில் என்ன இருக்கிறது?

இதற்கிடையில், மெட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான இயங்குதளமானது பீட்டா சேனலில் அதன் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கான 2.21.24.8 என்ற புதுப்பிப்பை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இதில் வாட்ஸ்அப் நிறுவனம் அதன் ஆண்ட்ராய்டு பயன்பாட்டிற்கான மெசேஜ் ரியாக்ஷன் அறிவிப்புகளை செயல்படுத்தும் அம்சத்தை அறிமுகம் செய்து சோதனை செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல், சமீபத்தில் வாட்ஸ்அப் நிறுவனம் ஆடியோ மெசேஜ் பிளேபேக் அம்சத்திற்கான வேகத்தை மாற்றி அமைக்கும் வேலையிலும் களமிறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

உங்கள் வாட்ஸ்அப் சாட்டை டெலீட் செய்யாமல் எப்படி மறைத்து வைப்பது?

உங்கள் வாட்ஸ்அப் சாட்டை டெலீட் செய்யாமல் எப்படி மறைத்து வைப்பது?

இந்த செய்தியுடன், உங்கள் வாட்ஸ்அப் இல் இருக்கும் சாட்களை டெலீட் செய்யாமல் அவற்றை எப்படி யாருக்கும் தெரியாமல் மறைத்து வைப்பது என்பதை பற்றியும் அறிந்துகொள்ளுங்கள். இந்த வாட்ஸ்அப் ட்ரிக்ஸ் கட்டாயமாக உங்களுக்கு பயனளிக்கும் என்று நம்புகிறோம்.

வாட்ஸ்அப் ட்ரிக்ஸ்: சேட்டிங்கை எதுக்கு டெலிட் செய்யனும்., மறைத்து வைக்கலாமே- சிம்பிள் பாஸ்!வாட்ஸ்அப் ட்ரிக்ஸ்: சேட்டிங்கை எதுக்கு டெலிட் செய்யனும்., மறைத்து வைக்கலாமே- சிம்பிள் பாஸ்!

வாட்ஸ்அப் ட்ரிக்ஸை எப்படி பயனப்டுத்துவது?

வாட்ஸ்அப் ட்ரிக்ஸை எப்படி பயனப்டுத்துவது?

இந்த வாட்ஸ்அப் ட்ரிக்ஸை எப்படி பயனப்டுத்துவது என்பதை பற்றி அறிந்துகொள்ள மேலே கொடுக்கப்பட்டுள்ள பதிவின் இணைப்பை கிளிக் செய்யுங்கள். வாட்ஸ்அப் தொடர்பான கூடுதல் செய்திகள் மற்றும் ட்ரிக்ஸ்கள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் பக்கத்தை பார்வையிடுங்கள். தொழில்நுட்பம், அறிவியல் மற்றும் விண்வெளி தொடர்பான செய்திகளுக்கும் எங்களின் பக்கத்தில் உள்ள மற்ற பதிவுகளை வாசிக்க மறக்காதீர்கள்.

Best Mobiles in India

English summary
How To Make Your Own Stickers On WhatsApp And Know Details About New Features : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X