UPI பரிவர்த்தனை.. இனி இணைய இணைப்பு இல்லையென்றாலும் கவலை இருக்காது.. இந்த சூப்பர் வசதி போதும்..
இந்தியா முழுவதும் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை முறை வெகுவாக வளர்ச்சியடைந்துள்ளது. அதுவும் யுபிஐ (UPI) சேவையை மக்கள் அதிகம் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். குறிப்பாக சிறு கடைகள் முதல் பெரிய வணிக நிறுவனங்கள் வரை எங்கும் யுபிஐ மூலம் பணம் செலுத்தும் வசதி பரவலாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் ஸ்மார்ட்போன் மற்றும் இணைய இணைப்பு இருந்தால் போதும், நொடிகளில் பணப் பரிவர்த்தனை செய்ய முடியும் என்பது தான் இதன் முக்கிய சிறப்பு. ஆனாலும் சில நேரங்களில் இணைய இணைப்பு கிடைக்காத சுழல் ஏற்படலாம். அதுவும் தொலைதூர கிராமப்புறங்கள், வனப்பகுதிகள் அல்லது தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இணைய சேவை தடைபடலாம். இதுபோன்ற சமயங்களில் யுபிஐ மூலம் பணம் செலுத்த முடியாத நிலை இருந்தது.

ஆனாலும் இந்த சிக்கலுக்கு தீர்வு காணும் வகையில் இந்திய கொடுப்பனவு கழகம் (NPCI) ஒரு புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது இந்த இந்த புதிய வசதிக்கு யூஎஸ்எஸ்டி (USSD) எனும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இது அடிப்படை மொபைல் போன்களிலும் கூட செயல்படும் ஒரு தொழில்நுட்பம். *99# என்ற எண்ணை டயல் செய்வதன் மூலம் இந்த சேவையை அணுகலாம்.
குறிப்பாக இந்த தொழில்நுட்பம், பாதுகாப்பு அம்சங்களிலும் கவனம் செலுத்துகிறது. அதுவும் ஒவ்வொரு பரிவர்த்தனையும் யுபிஐ பின்னைப் பயன்படுத்தி அங்கீகரிக்கப்படுவதால், பணப் பரிவர்த்தனைகள் பாதுகாப்பாக நடைபெறும். எனவே இணைய இணைப்பு இல்லாத நேரத்திலும் பாதுகாப்பான மற்றும் நம்பகமான பணப் பரிவர்த்தனையை இந்த வசதி உறுதி செய்கிறது. இப்போது இந்த வசதியை எப்படி பயன்படுத்துவது என்பதை பார்க்கலாம்.
1. முதலில் இந்த சேவையைப் பெற உங்கள் வங்கி கணக்குடன் இணைக்கப்பட்ட மொபைல் நம்பரை பயன்படுத்த வேண்டும் என்பதைக் கவனத்தில் கொள்க. அதன்பின்பு *99# என்ற நம்பரை டயல் செய்து கொள்ளுங்கள். அடுத்து ஒரு ஆப்ஷன் வரும், அதில் பணம் அனுப்புதல், பணம் பெறுதல், பேலன்ஸ் சரி பார்த்தல், பின் நம்பர் அமைப்பது எனப் பல சேவைகள் காண்பிக்கப்படும்.
2. அதன்பின்னர் நீங்கள் பணம் அனுப்ப 1-ஐ டைப் செய்து Send என்பதை கிளிக் செய்யவும். அடுத்து பணம் அனுப்பும் முறையைத் தேர்வு செய்ய வேண்டும். அதாவது மொபைல் நம்பர், யுபிஐ, அல்லது உங்கள் போனில் இருக்கும் கான்டெக்ட் விருப்பத்தைத் தேர்வு செய்து எவ்வளவு தொகை அனுப்ப வேண்டுமோ? அதை என்டர் செய்து Send பட்டனை கிளிக் செய்யுங்கள்.

3.நீங்கள் மொபைல் நம்பர் பயன்படுத்தி பணம் பரிமாற்றம் செய்வதை நீங்கள் தேர்வு செய்திருந்தால், பணம் பெறுபவர் யுபிஐ கணக்குடன் இணைக்கப்பட்ட மொபைல் நம்பரை வைத்திருக்க வேண்டும். அதன்பின்பு எவ்வளவு தொகை அனுப்ப வேண்டுமோ அதை என்டர்
செய்து Send பட்டனை கிளிக் செய்யவும். அதேபோல் இதில் நீங்கள் பணம் செலுத்துவதற்கு ஏதேனும் குறிப்புகளைக் கூட இணைத்து அனுப்பலாம். குறிப்பாக இந்த பரிவர்த்தனையை முடிப்பதற்கு யுபிஐ பின் நம்பரை என்டர் செய்ய வேண்டும்.
மேலும் இது டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையை மேலும் எளிதாக்குவதுடன், அனைத்து தரப்பு மக்களுக்கும் பயனளிக்கும் ஒரு தொழில்நுட்பமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications