Just In
- 12 min ago
ரொம்ப மெல்லிய பட்ஜெட் விலை டேப்லெட்: பார்க்க அப்படி இருக்கு- உயர் அம்சங்களோடு ஒப்போ பேட் ஏர் அறிமுகம்!
- 21 min ago
ரூ.20,000க்கு கீழ் வாங்க கிடைக்கும் சிறந்த 32-இன்ச் ஸ்மார்ட் டிவிகள்: இதோ பட்டியல்.!
- 1 hr ago
இப்படி ஒரு ஆங்கிளில் சந்திர கிரகணத்தை யாரும் பார்த்திருக்க முடியாது.. NASA வெளியிட்ட வீடியோ..
- 3 hrs ago
கூகுள் எச்சரிக்கை: இந்த மூன்று செயலிகளை உடேன டெலிட் செய்யவும்.!
Don't Miss
- Finance
ஜூலை 26 கடைசி.. ஏர் இந்தியா ஊழியர்களுக்கு பறந்த உத்தரவு..!
- Automobiles
0001 மாதிரியான ஃபேன்சி நம்பரை வாங்கணுமா?.. இதோ ஃபேன்சி நம்பர் பிளேட்டை பெறுவதற்கான வழி முறைகள்!
- Movies
யானையை பார்த்து பயந்த நயன்தாரா.. தயங்கிய விக்னேஷ் சிவன்.. கடைசியில் செம காமெடி!
- News
மேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பு சரி! அதனால் ஏற்படும் பயன்கள் என்னென்ன தெரியுமா? முழு விவரம்!
- Lifestyle
இரவு நேரத்தில் தெரியாம கூட மாம்பழத்தை சாப்பிடாதீங்க.. இல்லன்னா ரொம்ப கஷ்டப்படுவீங்க..
- Sports
சிஎஸ்கேக்கு எதிராக வெறியோடு விளையாடியது ஏன்? அஸ்வின் சொன்ன முக்கிய தகவல்.. திடீர் மாற்றம் ஏன்?
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
இன்டர்நெட் இல்லாமல் Google Pay, PhonePe, Paytm போன்ற UPI மூலம் பணம் அனுப்புவது எப்படி?
இணையம் இல்லாமல் உங்களால் UPI பரிவர்த்தனையை மேற்கொள்ள முடியுமா? என்று யாராவது உங்களிடம் கேட்டால், உடனே இல்லையே அது எப்படிச் சாத்தியமாகும், முடியாது - முடியாது என்று உறுதியாகக் கூறிவிடாதீர்கள். காரணம், நீங்கள் உங்கள் ஸ்மார்ட்போனில் இப்போது பயன்படுத்திக்கொண்டிருக்கும் Google Pay, PhonePe, Paytm மற்றும் NPCI இன் BHIM போன்ற பரிவர்த்தனை சேவைகளை இணைய வசதி இல்லாமலும் கூட பயன்படுத்த ஒரு தந்திரம் இருக்கிறது. இந்த தந்திரத்தைப் பெரும்பாலானோர் அறிந்திருக்கவில்லை என்பதே உண்மை. சரி, இன்டர்நெட் இல்லாமல் எப்படிப் பணம் அனுப்புவது மற்றும் பெறுவது என்று பார்க்கலாம்.

இன்டர்நெட் வசதி இல்லாத நேரத்திலும் பணம் அனுப்ப வழி இருக்கிறதா?
இந்தியாவில் யுபிஐ பயன்படுத்தும் பயனர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. முன்னெப்போதும் இல்லாத அளவிற்குச் சமீபத்தில் UPI ஆப்ஸ்களை இந்தியர்கள் பயன்படுத்தத் துவங்கியுள்ளனர். முக்கிய நகரங்கள் முதல் துவங்கி, உள்ளூர் சந்தைகள் வரை அனைத்து இடங்களிலும் டிஜிட்டல் பரிவர்த்தனையை மக்கள் ஆதரிக்கத் துவங்கியுள்ளனர். மக்கள் அதிகம் பயன்படுத்தும் கூகிள் பே, போன்பே போன்ற UPI ஆப்ஸ்களை பயன்படுத்த இன்டர்நெட் சேவை மிகவும் அவசியமானது தான் என்றாலும் கூட, சில நேரங்களில் இன்டர்நெட் வசதி இல்லாத நேரத்திலும் கூட பணத்தைப் பரிமாறிக்கொள்ள ஒரு வழி உள்ளது.

இணையம் இல்லாத நேரத்தில் எப்படிப் பணம் அனுப்புவது மற்றும் பெறுவது?
Google Pay, PhonePe, Paytm மற்றும் NPCI இன் BHIM போன்ற பரிவர்த்தனை வழங்குநர்கள் பயனர்களைத் தடையின்றி பணம் செலுத்தவும் ஏற்றுக்கொள்ளவும் அனுமதிக்கின்றனர். பெரும்பாலும் இந்த பணப் பரிவர்த்தனைகளை வெற்றிகரமானதாக மாற்ற இன்டர்நெட்டின் அவசியம் முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. சில நேரங்களில் போதிய இன்டெர்ன்ட் வசதி இல்லாத நேரங்களில் உங்களின் பரிவர்த்தனை தோல்வி அடைந்த சிக்கலையும் நம்மில் சிலர் சந்தித்திருக்க வாய்ப்புள்ளது. இப்படியான சிக்கலில் இருந்து உங்களைப் பாதுகாத்துக்கொள்ள நம்மிடம் ஒரு தந்திரம் உள்ளது.
BSNL: தினமும் 5ஜிபி டேட்டா 84 நாட்களுக்கு கம்மி விலையில் வேண்டுமா? அப்போ இது தான் சரியான திட்டம்..

இன்டர்நெட் வசதி இல்லாமல் UPI பரிவர்த்தனை செய்ய முடியுமா?
அதிர்ஷ்டவசமாக, இணையம் அல்லது இன்டர்நெட் வசதி இல்லாமல் கூட இனி உங்களால் ஒரு வெற்றிகரமான UPI பரிவர்த்தனை செய்ய முடியும் என்று நாங்கள் சொன்னதைக் கேட்டதும், அடடா அருமையாக இருக்கிறதே, இது எப்படி சாத்தியம் என்று பல கேள்விகள் உங்கள் மனதில் எழுந்திருக்கலாம். உங்கள் கேள்விகளுக்கான பதில் இந்த பதிவில் முழுமையாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது என்பதனால், இந்த பதிவை இறுதி வரை தொடர்ந்து படித்துப் பயன்பெறுங்கள். சரி, அதற்கான தந்திரத்தை எப்படிச் செயல்படுத்துவது என்று இப்போது பார்க்கலாம்.

யுனைடெட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (UPI) என்றால் என்ன? அது எப்படி செயல்படுகிறது?
யுனைடெட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (யுபிஐ) இந்தியா முழுவதும் உள்ள மில்லியன் கணக்கானவர்களின் வாழ்க்கையை இப்போது எளிதாக்கியுள்ளது. மொபைல் அப்ளிகேஷனைப் பயன்படுத்தி ஒரு வங்கிக் கணக்கிலிருந்து மற்றொன்றுக்கு உடனடியாகப் பணப் பரிமாற்றத்தை இது அனுமதிக்கிறது. Google Pay, PhonePe மற்றும் NPCI இன் BHIM போன்ற சேவை வழங்குநர்கள் பயனர்களைத் தடையின்றி பணம் செலுத்தவும் ஏற்றுக்கொள்ளவும் இது அனுமதிக்கின்றனர். இவை அனைத்திற்கும் நிலையான இணைய இணைப்பு தேவை. ஆனால் ஒரு பயனருக்கு இணைய அணுகல் இல்லாத சந்தர்ப்பங்களும் இங்கு இருக்கிறது.

இந்த செயல்முறை அடிப்படை தொலைப்பேசிகளிலும் கூட வேலை செய்யுமா?
அப்படியான சூழ்நிலையில் ஒரு பயனருக்கு ஆன்லைனில் பணம் செலுத்துவது கடினமாக இருக்கலாம். அதிர்ஷ்டவசமாக, இணையம் இல்லாமல் UPI பரிவர்த்தனை உங்கள் மொபைல் நெட்வொர்க்கை மட்டும் வைத்து வெற்றிகரமாக நிறைவேற்ற முடியும். இந்த செயல்முறை ஸ்மார்ட்போன் மற்றும் அடிப்படை தொலைப்பேசிகளிலும் கூட நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம் என்பது சிறப்பானது. ஆனால், இணையம் இல்லாமல் உங்களுடைய UPI கட்டணத்தைச் செலுத்துவதற்கான தகுதி என்று சில முக்கிய விஷயங்கள் உள்ளது. அதை முதலில் பார்த்துவிட்டு, நேரடியாக எப்படி இந்த தந்திரத்தைப் பயன்படுத்துவது என்று தெரிந்துகொள்ளலாம்.

இணையம் இல்லாமல் UPI பணம் செலுத்துவது எப்படி?
- முதலில் நீங்கள் பயன்படுத்தும் மொபைல் எண் UPI உடன் பதிவு செய்யப்பட வேண்டும்.
- உங்களுடைய வங்கிக் கணக்கும் அதே மொபைல் எண்ணுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.
- இணைய வசதி இல்லாமல் மேற்கொள்ளப்படும் இத்தகைய ஒவ்வொரு கட்டணத்திற்கும் 0.50 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
- பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து உங்களுடைய தொலைப்பேசியில் *99# என்று டயல் செய்து அழைக்கவும்.
- இருப்புச் சரிபார்ப்பு, சுயவிவரம் (Balance Check, Profile) போன்ற பல விருப்பங்களைப் பெறுவீர்கள்.
- இந்த மெனுவிலிருந்து நீங்கள் 'பணத்தைத் தேர்ந்தெடு' (Select Money) என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
- 1 என்ற எண்ணை அழுத்தி, 'அனுப்பு (Send)' பட்டனைத் தட்டவும்.
- இப்போது மெனுவிலிருந்து உங்களுக்குக் கிடைக்கும் விவரங்களுக்கு ஏற்ப விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். இது உங்களுக்கு 'மொபைல் எண்', 'UPI ஐடி' மற்றும் 'IFSC/ A/C எண்' போன்ற விருப்பங்களை வழங்கும்.
- நீங்கள் பயன்படுத்த விரும்பும் விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து அதற்கு எதிரான எண்ணைப் பயன்படுத்திப் பதிலளிக்கவும்.
- எ.கா., மொபைல் எண்ணுக்கு, '1' ஐ உள்ளிட்டு, 'அனுப்பு' என்பதைத் தட்டவும்; A/c எண்ணுக்கு '5' ஐ உள்ளிட்டு 'அனுப்பு' என்பதைக் கிளிக் செய்யவும்.
- இப்போது, மொபைல் எண் அல்லது A/c எண்ணை உள்ளிடவும்.
- முன்பு தேர்ந்தெடுக்கப்பட்ட விருப்பத்தின் படி, உங்கள் UPI ஐடியை உள்ளிட்டு 'அனுப்பு' என்பதைத் தட்டவும்.
- இப்போது, வெற்றிகரமான பரிவர்த்தனையைப் பற்றி உங்களுக்குத் தெரிவிக்கும் உரையைப் பெறுவீர்கள்.
- அவ்வளவு தான் இணையச் சேவை இல்லாமல் உங்களுடைய பரிவர்த்தனை வெற்றிகரமாகச் செய்து முடிக்கப்பட்டுள்ளது.
நீங்கள் பயன்படுத்தும் இன்டர்நெட் வேகமாக தான் இருக்கிறதா? எப்படி அதை கண்டறிவது? ஈஸி டிப்ஸ்..

இப்போது இந்த தேர்வுகளைச் சரியாகத் தேர்வு செய்யுங்கள்

இறுதியாக இதைச் செய்தால் போதுமா? இணையம் இல்லாமல் பணப் பரிவர்த்தனை வெற்றியடையுமா?
-
54,535
-
1,19,900
-
54,999
-
86,999
-
49,975
-
49,990
-
20,999
-
1,04,999
-
44,999
-
64,999
-
20,699
-
49,999
-
11,499
-
54,999
-
7,999
-
8,980
-
17,091
-
10,999
-
34,999
-
39,600
-
25,750
-
33,590
-
27,760
-
44,425
-
13,780
-
1,25,000
-
45,990
-
1,35,000
-
82,999
-
17,999