ஸ்கைப் வழங்கும் இலவச ஐஎஸ்டி அழைப்புகள்

Posted By: Staff
ஸ்கைப் வழங்கும் இலவச ஐஎஸ்டி அழைப்புகள்

நீங்கள் ஸ்கைப்பில் உறுப்பினராக இருந்தால் ஸ்கைப் மூலம் செய்யப்படும் ஐஎஸ்டி கால்களுக்கான கட்டணத்தை அறிந்திருப்பீர்கள். ஒருவேளை ஸ்கைப் கட்டணம் அதிகம் என்று நீங்கள் கருதினால் தற்போது உங்களுக்கு ஸ்கைப் ஒரு பெரிய சலுகையை அறிவித்திருக்கிறது.

அதாவது ஒரு மாதம் முழுவதற்குமான இலவச ஐஎஸ்டி கால்களை வழங்கி இருக்கிறது ஸ்கைப். குறிப்பாக ஸ்கைப்பிலிருந்து ஸ்கைப்புக்கு இலவசமாக ஐஎஸ்டி கால்களை இந்த திட்டத்தின் மூலம் விடுக்கலாம். இந்த சலுகையை பயன்படுத்த நீங்கள் 1 அமெரிக்க டாலர் செலுத்தினால் மட்டும் போதும்.

அதன் பின் பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். முதலில் ஸ்கைப் வழங்கும் ஆபரை தெரிவிக்கும் லிங்கை பார்க்க வேண்டும். அந்த லிங்கில் இருக்கும் க்ளைம் யுவர் பிரி மன்த் என்ற பட்டனை பின் கிளிக் செய்ய வேண்டும். அதன் பின் லாக் இன் செய்வதற்குரிய எல்லா தகவல்களையும் அளிக்க வேண்டும். அதன் பின் தானாகவே உங்களை ஸ்கைப் இந்த புதிய பிரி 1 மன்த் அன்லிமிடட் சப்ஸ்கிரிப்சன் திட்டத்திற்கு அழைத்துச் செல்லும்.

இந்த சலுகையை நவம்பர் 11க்குள் பெற வேண்டும். மேலும் 29 நாள்களுக்கும் அதிகமாக ஸ்கைப்பில் உறுப்பினர்களாக இருப்பவர்களுக்கே இந்த சலுகை வழங்கப்படும். மேலும் உறுதிப்படுத்தப்படாத போன் எண்கள் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது. அடுத்ததாக பரிசோதனை காரணங்களுக்காக 1 அமெரிக்க டாலர் செலுத்த வேண்டும். மேலும் ஒருவர் மட்டுமே இந்த சலுகையைப் பெற முடியும்.

அதோடு ஒரு மாதம் முடிந்த பின் இந்த திட்டம் தானாகவே தொடரும். இந்த திட்டத்தை தொடர விரும்பவில்லை என்றால் இந்த திட்டத்தில் இருந்து எப்போது வேண்டும் என்றாலும் விலகிக் கொள்ளலாம்.

இந்த இலவச சலுகையை கனடா, குவாம், ஹாங் ஹாங், புர்ட்டோ ரிக்கோ, சிங்கப்பூர், தாய்லாந்து மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் உள்ள ஸ்கைப் உறுப்பினர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும். மேலும் சீனா, கொரியா, தைவான் மற்றும் ரஷ்யா நாடுகளில் இருக்கும் உறுப்பினர்கள் இந்த சலுகையை அனுபவிக்க முடியாது.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot