இனி சங்கட்டப்பட வேண்டாம்! ஈஸியா Android மற்றும் iOS போனில் கான்ஃபரன்ஸ் கால் செய்யலாம்! எப்படி?
இன்றைய காலகட்டத்தில் மக்கள் அதிகமாக பயன்படுத்துவது வாய்ஸ் கால் மற்றும் வீடியோ கால் அம்சத்தை தான். இன்னும் சிலர் அதிகமாக பயன்படுத்துவது கான்ஃபரன்ஸ் அழைப்புகளை மேற்கொள்கிறார்கள். கான்ஃபரன்ஸ் கால் செய்ய தெரியாதவர்களுக்கான யூஸ்புல் டிப்ஸ் தான் இந்த பதிவு.
தொலைதூர தகவல்தொடர்புக்கான வழிமுறையாக வீடியோ அழைப்பு பிரபலமடைந்து வந்தாலும், மீட்டிங் என்று வரும் போது வீடியோ கான்ஃபரன்ஸ் காலிங் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. வீடியோ அழைப்புகள் பெரும்பாலும் நம்பகத்தன்மையற்றவை, அடிக்கடி துண்டிக்கப்படுதல், ஆடியோ லேக் போன்ற சிக்கல்களால் பல பின்னடைவுகளை சந்திக்க நேரிடுகிறது. இதுபோன்ற சூழ்நிலைகளில், மக்கள் வாய்ஸ் காலிங் அம்சத்தை பயன்படுத்த விரும்புகிறார்கள். குறிப்பாக வாய்ஸ் கான்ஃபரன்ஸ் காலிங் அம்சத்தை பயன்படுத்துகிறார்கள்.

நீங்கள் Android அல்லது iOS என்ற எந்த இயங்குதளத்தைப் பயன்படுத்தினாலும், உங்கள் மொபைல் சாதனத்தில் கான்ஃபரன்ஸ் அழைப்பை எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்த தகவலை தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம். முதலில் ஆண்ட்ராய்டு சாதனத்தில் எப்படி கான்ஃபரன்ஸ் காலிங் செய்வதென்று பார்க்கலாம். உங்கள் மொபைலில் உள்ள இயல்புநிலை அழைப்பு ஐகானைத் தட்டவும். இது காண்டாக்ட் பட்டியலையும் நம்பர் கீபேட்யையும் சேர்த்து ஓபன் செய்யும்.
நீங்கள் அழைக்க விரும்பும் தொலைபேசி எண்ணை டைப் செய்யலாம் அல்லது நீங்கள் அழைக்க விரும்பும் நபரைக் கண்டறிய உங்கள் காண்டாக்ட் விபரங்களை ஸ்க்ரோல் செய்து தேர்வு செய்யலாம். நீங்கள் அழைக்க விரும்பும் நபரைக் கண்டறிந்த பிறகு, அழைப்பைத் தொடங்க அவரது பெயரைத் தட்டவும் மற்றும் பச்சை அழைப்பு பட்டனை அழுத்தவும். இது வழக்கமாக நீங்கள் ஒரு வாய்ஸ் கால் அழைப்பை மேற்கொள்ளப் பயன்படுத்தும் அதே முறையாகும்.
பிறகு, நீங்கள் அந்த நபருடன் இணைக்கப்பட்டதும், அழைப்பில் மற்றொரு நபரைச் சேர்க்க, உங்கள் டிஸ்பிளேவில் காணப்படும் '+' ஐகானை அழுத்தவும். இது உங்களை மீண்டும் காண்டாக்ட் பட்டியலுக்கு அழைத்துச் செல்லும். இங்கு நீங்கள் அழைக்க விரும்பும் இரண்டாவது நபரைக் கண்டுபிடித்து கிளிக் செய்வதன் மூலம் முந்தைய படிகளை மீண்டும் செய்யலாம்.

இரண்டாவது நபர் அழைப்பை எடுக்கும்போது, இரண்டு அழைப்புகளும் உங்கள் திரையின் மேற்புறத்தில் காட்டப்படும். இரண்டு அழைப்புகளையும் ஒரே கான்ஃபரன்ஸ் அழைப்பாக இணைக்க, 'Merge' என்ற விருப்பத்தை கிளிக் செய்யவும். இப்போது நீங்கள் அனைவரும் ஒரே இணைப்பில் கான்ஃபரன்ஸ் காலில் இணைந்திருப்பீர்கள். அழைப்பை முடிக்க, வழக்கமான வாய்ஸ் அழைப்பின் போது துண்டிக்கும் சிவப்பு பட்டனை அழுத்தவும்.
இதேபோல், ஆப்பிள் சாதனங்களிலும் கான்ஃபரன்ஸ் கால் செய்வதற்கான செயல்முறை ஒத்ததாகும். முதல் நபரை டயல் செய்வதன் மூலம் உங்கள் அழைப்பை தொடங்கவும், பின்னர் இரண்டாவது நபரைச் சேர்க்க '+' என்ற ஐகானை அழுத்தவும். இரண்டாவது நபர் பதிலளிக்கும் போது, அழைப்புகளை ஒற்றை வரியில் இணைப்பதில் இருந்து நீங்கள் ஒரு அறிவிப்பைப் பெறுவீர்கள். பலரைச் சேர்க்க இதே முறைகளைப் பின்பற்றலாம். இந்த நுட்பம் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களுக்கும் பொருந்தும்.
மெர்ஜ் கால் பட்டனை அழுத்தும் போது அறிவிப்பு வரியை அழுத்திப் பிடித்தால், கான்ஃபரன்ஸ் அழைப்பின் போது உள்வரும் அழைப்பை ஏற்க முடியும். அழைப்பிலிருந்து உறுப்பினரை அகற்ற, தகவல் பட்டனை கிளிக் செய்வதன் மூலம் விருப்பங்களை அணுகவும். பின்னர் நீங்கள் அகற்ற விரும்பும் நபர் அல்லது நபர்களின் பெயருக்கு அடுத்துள்ள 'End' என்பதைத் கிளிக் செய்யவும்.
ஒருவேளை உங்களால் கான்ஃபரன்ஸ் கால் அழைப்பை ஏற்படுத்த முடியவில்லை என்றால், உங்கள் கேரியரின் (சிம்/நெட்வொர்க்) ஆதரவு இல்லாததால் இருக்கலாம். இதற்கு நீங்கள் உங்கள் சிம் ஆப்ரேட்டரை அணுக வேண்டும்.


Click it and Unblock the Notifications








