WhatsApp-ல் மறைந்திருக்கு சீக்ரெட் லாக் அம்சம்.. ஆக்டிவேட் செய்வது எப்படி? தனித்தனியாக சாட்டை லாக் செய்யலாம்..
நாம் தினசரி பயன்படுத்தும் ஆப்களில் முக்கியமான ஒன்று வாட்ஸ்ஆப் (WhatsApp). ஸ்மார்ட்போன் பயனாளர்களில் வாட்ஸ்ஆப் பயன்படுத்தாதவர் என்று ஒருவர் இருக்க முடியாது. அந்த அளவிற்கு நம் வாழ்வில் இதுவொரு அங்கமாகவே மாறிவிட்டது.
தொழில்நுட்ப வளர்ச்சியால் முதலில் பெர்சனல் சாட்ங்கிற்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த வாட்ஸ்ஆப் (WhatsApp) இப்போது, அலுவலக மீட்டிங், முக்கியமான ஆவணங்களை பகிர்வது (Documents sharing), கருத்துக்களை பகிர்வது என்று அனைத்திற்குமான தளமாக உருவெடுத்துள்ளது. ஆரம்ப காலத்தில் ஆப்ஸ்களை பாதுகாக்க தர்ட்-பார்டி (Third-party) மொபைல் ஆப்ஸ்கள் (Mobile Apps) பயன்படுத்தப்பட்டன.

இம்மாதிரியான தர்ட்-பார்டி ஆப்ஸ்களின் பயன்பாட்டை குறைக்க வாட்ஸ்ஆப்பின் மெட்டா நிறுவனம் தங்களுக்கான பிரத்தியேக லாக் வசதியை உருவாக்கியது. அதை நிறுவனம் சமீபத்தில் அறிமுகமும் செய்தது. இந்த அம்சத்தின் மூலம் வாட்ஸ்ஆப்பை பாஸ்வர்ட் (Password), ஃபேஸ்-லாக் (Face-lock) அல்லது ஃபிங்கர்-ப்ரிண்ட் (Finger-print) லாக் செய்து கொள்ள பயனர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
வாட்ஸ்அப் இல் ஒவ்வொரு சாட்டையும் சீக்ரெட் லாக் செய்து பாதுகாப்பது எப்படி? (How to Secretly Lock and Protect Every Chat on WhatsApp):
இதன் அடுத்த கட்டமாக, முக்கியமான சாட்களை மட்டும் லாக் செய்து கொள்ள அனுமதிக்கும் புதிய பாதுகாப்பு அம்சத்தை வாட்ஸ்அப் அதன் புதிய அப்டேட் மூலம் இந்த ஆண்டு அறிமுகம் செய்தது. இந்த அப்டேட்டின் மூலம், தனிப்பட்ட தகவல்கள் மட்டுமின்றி அலுவலகம் சார்ந்த உரையாடல்களையும் வாட்ஸ்ஆப்பில் நம்பிக்கையாக நிகழ்த்த ஏதுவான சூழ்நிலை உருவானது.
பெரும்பாலும் வீட்டில் இருந்து வேலைபார்க்கும் முறையை சமீபகாலமாக பின்பற்றும் நிறுவனங்களுக்கு இது மிகவும் உதவியாக இருந்தது என்றே கூறலாம். இதனைத் தொடர்ந்து மேலும் ஒரு சிறந்த அப்டேட்டை மெட்டா நிறுவனம் வாட்ஸ் ஆப்பில் இப்போது அறிமுகம் செய்துள்ளது. முதலில், ஒரு குறிப்பிட்ட சாட்டை எப்படி லாக் செய்து, பாதுகப்பாக வைப்பது என்று பார்க்கலாம்.
முதலில், அதற்கு நீங்கள் லாக் செய்ய நினைக்கும் சாட்டை லாங் ப்ரஸ் (long press) செய்ய வேண்டும். திரையின் வலது ஓரத்தில் இருக்கும் மூன்று புள்ளிகளை தொட்டால் அதில் லாக் சாட் (Lock chat) என்ற தேர்வு தோன்றும். அதனை தேர்வு செய்தவுடன் கன்டினியூ (Continue) என்ற பட்டனுடன் அறிவிப்பு செய்தி ஒன்று திரையில் தோன்றும்.

வாட்ஸ்அப் சீக்ரெட் லாக் அம்சம் எப்படி செயல்படும் (How WhatsApp Secret Lock Feature Works):
அந்த கன்டினியூ பட்டனை க்ளிக் செய்து, உங்களது ஃபேஸ் அல்லது ஃபிங்கர்-ப்ரிண்டை உள்ளீடு செய்தால் அந்த சாட், லாக் செய்யப்படும். நீங்கள் வாட்ஸ்ஆப்பை ஓபன் செய்யும்போது அந்த சாட் திரையில் தோன்றாது. அந்த கான்டாக்டில் (Contact) இருந்து வரும் மெசேஜ் நோடிஃபிகேஷன் (Notification) கூட பெயர் இல்லாமல் திரையில் காட்டப்படும்.
லாக் செய்த சாட்டை ஓப்பன் செய்ய சாட் திரையை மேலிருந்து கீழ் லேசாக ஸ்வைப் (Swipe) செய்தால் லாக்ட் சாட்ஸ் (Locked Chats) என்று சாட்கள் மேலே தோன்றும். அதனை ஓபன் செய்து பாஸ்வார்டோ, ஃபேஸ் அல்லது ஃபிங்கர்-ப்ரிண்ட் உள்ளீடு செய்தால் லாக் செய்த சாட் தோன்றும். இதனை மேலும் பாதுகாப்பாக்க சீக்ரெட் கோட் (Secret code) என்ற புதிய பாதுகாப்பு அம்சத்தை மெட்டா சேர்த்துள்ளது.
இதற்கு லாக்டு சாட் திரையின் வலது மேல் ஓரத்தில் இருக்கும் மூன்று புள்ளிகளை தொட்டால் சாட் லாக் செட்டிங்கள் ஓபன் ஆகும். அதில் சீக்ரெட் கோட் என்பதை தேர்வு செய்து உங்களது தேவையான கோடை செலுத்தி பதிவு செய்யலாம். இப்படி செய்யும்போது லாக்டு சாட்ஸ் என்பது கூட சாட் திரையில் தோன்றாது.
லாக் ஆன சாட்களை ஓபன் செய்து பார்க்க செர்ச் பாரில் (Search bar) சென்று உங்களது சீக்ரெட் கோடை டைப் செய்தால் மட்டுமே அந்த சாட்கள் திரையிலேயே தோன்றும். முக்கிய தேவைகளுக்காக வாட்ஸ்ஆப் பயன்படுத்துபவர்களுக்கு இந்த அம்சம் மிகவும் உதவிகரமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications








